அவங்களா இது! அம்பானி கிட்ட இருக்கற காரையே வாங்கீட்டாங்க! ஷோரூம் விலையை கேட்டதுக்கே தலை சுத்தீருச்சு!
கேரள மாநிலத்தில் இருந்து வெளிநாடுகளில் சென்று 'செட்டில்' ஆனவர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் நிறுவனங்களில் ஒன்று நீத்துஸ் அகாடமி (Neethus Academy). இந்த நிறுவனம் தொழில்சார் ஆங்கில பயிற்சியை (Occupational English Training) வழங்கி கொண்டுள்ளது. இதன் உரிமையாளரான நீத்து, தற்போது புத்தம் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். அது லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 110 (Land Rover Defender 110) ஆகும். அவர் இந்த காரை டெலிவரி எடுக்கும் வைரல் வீடியோ (Viral Video), சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.
லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 110 காரில், 2.0 லிட்டர் பெட்ரோல், 3.0 லிட்டர் பெட்ரோல், 3.0 லிட்டர் டீசல் மற்றும் 5.0 லிட்டர் பெட்ரோல் என மொத்தம் 4 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இதில், எந்த இன்ஜின் பொருத்தப்பட்ட மாடலை நீத்து வாங்கியுள்ளார்? என்பது உறுதியாக தெரியவில்லை.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 110 மாடலின் ஆரம்ப விலை 97 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 110 மாடலின் டாப் வேரியண்ட்டின் விலை 2.30 கோடி ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரானது 110 மாடல் தவிர, 90 மற்றும் 130 ஆகிய மாடல்களிலும் கிடைக்கிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இந்த காரில், 11.4 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே உள்ளிட்ட வசதிகள் எல்லாம் வழங்கப்படுகின்றன.

இவை எல்லாம் தவிர, 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், பனரோமிக் சன்ரூஃப், 6 ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம் மற்றும் ஏர் ப்யூரிஃபையர் உள்ளிட்ட வசதிகளும் கொடுக்கப்படுகின்றன. சொகுசு அம்சங்கள் தவிர, இந்த காரில் பாதுகாப்பு வசதிகளுக்கும் சற்றும் பஞ்சமில்லை என்பது கவனிக்கத்தக்கது.
பாதுகாப்பு வசதிகளை பொறுத்தவரையில், அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. ஜீப் வ்ராங்கலர் (Jeep Wrangler), டொயோட்டா லேண்ட் க்ரூஸர் (Toyota Land Cruiser) மற்றும் மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி-க்ளாஸ் (Mercedes-Benz G-Class) உள்ளிட்ட கார்களுடன், லேண்ட் ரோவர் டிஃபெண்டர் போட்டியிட்டு வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: லேண்ட் ரோவர் டிஃபெண்டர் சொகுசு அம்சங்கள் நிரம்பிய ஒரு கார். கூடவே ஆஃப்ரோடு சாகச பயணங்களை மேற்கொள்ள கூடிய ஒரு முரட்டுத்தனமான கார்களில் ஒன்றாகவும் இதனை குறிப்பிடலாம். எனவே சொகுசு + ஆஃப்ரோடு சாகசங்களுக்கான வசதிகள் என இரண்டையும் எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு இது ஏற்றதாக இருக்கும்.
முகேஷ் அம்பானி (Mukesh Ambani) உள்பட இந்திய பிரபலங்கள் பலரிடமும் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் கார் உள்ளது. குறிப்பாக பாலிவுட் திரையுலகை சேர்ந்த நடிகர், நடிகைகள் பலரும் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரை வைத்துள்ளனர். விலை மிகவும் அதிகம் என்பதால், இது செல்வந்தர்களுக்கான காராக இருக்கிறது.


Click it and Unblock the Notifications








