நியா நானாவில் இப்ப தான் இவரை பத்தி இவங்க அம்மா பேசினாங்க! அதுக்குள் இப்படி ஆகிடுச்சே!
நீயா நானா விவாத நிகழ்ச்சியில் பிரபலமான பிரணவ் என்ற இளைஞர் கடந்த வாரம் சென்னையில் நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. லெவல் கிராசிங் பகுதியை கவனக்குறைவாக கடந்து சென்ற போது இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒன்றில் அம்மா-மகள் இடையே நடந்த விவாதத்தில் தன் மகனுக்கு தாய் அதிக பாசம் காட்டுவதாகவும், தனக்கு அதைவிட குறைவாக காட்டுவதாகவும் மகள் பேசினார். அப்பொழுது மகள் தனது சகோதரர் சாப்பிட உட்காந்தால் 20தோசை வரை சாப்பிடுவார் என பேசினார். அதற்கு தாய் பதில் அளித்தார். தன் மகனிடம் போதுமா என கேட்காமல் தோசை ஊற்றி தர வேண்டும் என பேசினார்.

இந்த வீடியோ குடும்பத்தில் மகன் மீது தாய் வைத்திருக்கும் பாசம் குறித்த ஒரு நெகிழ்ச்சியான வீடியோவாக இருந்தது. சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாக பரவியது. இந்த நிகழ்ச்சியில் மகன் கலந்து கொள்ளவில்லை. இந்த வீடியோ வைரலாக பரவிய போது யார் அந்த மகன் அவரை பார்த்தே ஆக வேண்டும் என பலர் சமூக வலைதளங்களில் பேசி இருந்தார்கள்.
இந்நிலையில் பல யூடியூப் சேனல்கள் இந்த குடும்பத்தினரை சந்தித்து பேட்டி எடுத்து வெளியிட்டு இருந்தனர். அந்த வீடியோக்களும் வைரலாக பரவியது. இந்நிலையில் தற்போது ஒரு துயரமான செய்தி நமக்கு கிடைத்துள்ளது. இந்த வீடியோவில் வைரலாக பேசப்பட்ட மகன் பிரணவ் கடந்த வாரம் சென்னையில் நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
சென்னை சிட்லபாக்கம் பகுதியில் வசித்து வரும் பிரணவ் எலெக்ட்ரிக் ரயில் மூலம் வேலைக்கு சென்று விட்டு கடந்த புதன்கிழமை குரோம்பேட்டை பகுதிக்கு எலெக்ட்ரிக் ரயில் மூலம் இரவு 10:30 மணிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். ரயில் நிலையத்திலிருந்து வெளியே வர நடை மேம்பாலத்தை பயன்படுத்த வேண்டும்.
அதை பயன்படுத்தினால் அதிக தூரம் நடக்க வேண்டும் என்பதற்காக ரயில்வே தண்டவாளங்களை நேரடியாக தாண்டி குறுக்கு வழி வழியாக பலர் சென்று விடுவார்கள். இப்படிதான் பிரணவும் ரயில்வே தண்டவாளத்தை தாண்டி உள்ளார். ஆனால் அவர் தண்டவாத்தை தாண்டும்போது செல்போன் பேசிக்கொண்டே கடந்து சென்றதாக கூறப்படுகிறது. அப்போது செல்போன் பேசிய ஆர்வத்தில் இவர் ரயில் வருவதை கவனிக்கவில்லை. ரயில் ஹாரன் அடித்த சத்தமும் இவருக்கு கேட்கவில்லை என தெரிகிறது.
இதனால் இவர் ரயில் தண்டவாளத்தை கடக்கும் சரியான நேரத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று வேகமாக வந்ததால் அந்த ரயிலில் அடிபட்டு இவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் இவருடன் வந்த 40 வயது மதிக்கத்தக்க சதீஷ் என்பவரும் உயிர் இழந்தார். இந்த செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பலர் பிரனவின் மறைவிற்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பிட்ட இந்த சம்பவம் நடந்த இதே நாளில் சென்னையில் பொன்னேரி பகுதியிலும் இப்படியாக ரயிலில் அடிபட்டு 2 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. சென்னையில் அதிகமாக ரயில் போக்குவரத்து இருக்கும் இடங்களில் இப்படியாக சட்டவிரோதமாக தண்டவாளங்களை பொதுமக்கள் கடந்து வருகிறார்கள்.
இதனால் ஏராளமான விபத்துக்கள் நடந்து வருகிறது. பலர் ஒரு சில நிமிடங்களை மிச்சம் செய்ய வேண்டும் என்பதற்காக இந்த குறுக்குப் பாதையை பயன்படுத்துகிறார்கள். ஆனால் இது அவர்களது உயிரையே பனையம் வைப்பதற்கு சமமான ஒரு விஷயமாக இருக்கிறது. சட்டவிரோதமாக தண்டவாளங்களை அனுமதியில்லாத இடங்களில் கடந்து செல்வது பொதுமக்கள் செய்யக்கூடாத விஷயமாக இருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பிரணவ் செய்த தவறு செல்போன் பேசிக்கொண்டே கவனக்குறைவாக தண்டவாளங்களை கடந்து சென்றது தான். அவர் செல்போன் பேசிக்கொண்டே நடைமேடையில் சென்று இருந்தால் இன்று அவர் உயிருடன் இருந்திருப்பார். இதனால் நீங்களும் சட்டவிரோதமாக தண்டவாளங்களை கடந்து செல்வதை தவிர்த்து விடுங்கள். ஒரு சில நிமிடங்கள் அதிகமாக செலவானாலும் நடைமேடையை பயன்படுத்துங்கள்.


Click it and Unblock the Notifications








