செதுக்கி வெச்ச சிலை மாதிரி இருக்காங்க! ஒன்றரை கோடி ரூபாய் காரை வாங்கனது அவங்களா! கொஞ்சம் கூட அடையாளம் தெரியல!
பிரபல நடிகைகள் எல்லாம் மிகவும் விலை உயர்ந்த கார்களில் பயணம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இதற்கு நேஹா பெண்ட்ஸேவும் (Nehha Pendse) விதிவிலக்கு அல்ல. இவர் பல மொழிகளிலும் மிகவும் பிரபலமாக இருந்து வரும் ஒரு நடிகை ஆவார். ஹிந்தி, மராத்தி, கன்னடா மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் இவர் நடித்துள்ளார். அவ்வளவு ஏன்? தமிழ் திரைப்படங்களில் கூட, நேஹா பெண்ட்ஸே தலை காட்டியுள்ளார். இதற்கு சூர்யா நடிப்பில் உருவான மௌனம் பேசியதே ஒரு உதாரணம்.
மௌனம் பேசியதே திரைப்படத்தில் மஹாலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நேஹா பெண்ட்ஸே நடித்திருந்தார். இதுதவிர இனிது இனிது காதல் இனிது போன்ற திரைப்படங்களிலும் கூட, நேஹா பெண்ட்ஸே நடித்துள்ளார். இவர் தற்போது மிகவும் விலை உயர்ந்த கார் ஒன்றை வாங்கியுள்ளார். அது பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் (BMW iX) ஆகும்.

இது பேட்டரி மூலம் இயங்க கூடிய எலெக்ட்ரிக் கார் (Electric Car) என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த எலெக்ட்ரிக் காரில், 111.5 kWh பேட்டரி தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 575-635 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பேட்டரியை சார்ஜ் செய்வதும் எளிமையானதுதான். ஃபாஸ்ட் சார்ஜர் பயன்படுத்தினால், வெறும் பத்தே நிமிடங்களில், 145 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்யும் அளவிற்கு, பேட்டரியை சார்ஜ் செய்து விட முடியும். அதே சமயம் வெறும் 35 நிமிடங்களில் 10-80 சதவீதம் வரை சார்ஜ் செய்து விடலாம்.

இந்த கார் செயல்திறனிலும் அமர்க்களப்படுத்த கூடியதாக உள்ளது. பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 4.6 வினாடிகளில் எட்டி விடக்கூடிய திறனை இந்த எலெக்ட்ரிக் கார் பெற்றுள்ளது. அதே நேரத்தில் இந்த எலெக்ட்ரிக் காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 200 கிலோ மீட்டர்களாக உள்ளது.
அத்துடன் இந்த எலெக்ட்ரிக் காரில் பல்வேறு அதிநவீன வசதிகளும் வழங்கப்படுகின்றன. இதில், 14.9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) போன்றவை குறிப்பிடத்தக்கவை ஆகும்.
இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் எலெக்ட்ரிக் காரின் விலை இந்திய சந்தையில் 1.40 கோடி ரூபாயாக உள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். ஆன்-ரோடு விலை (On-Road Price) தோராயமாக 1.50 கோடி ரூபாய் வரை வரும்.
இந்த விலை உயர்ந்த காரை நேஹா பெண்ட்ஸே பயன்படுத்தும் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வைரல் வீடியோவை, நேஹா பெண்ட்ஸேவின் ரசிகர்கள் ஆர்வத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பிரபலமான மனிதர்கள் எலெக்ட்ரிக் கார்களை வாங்குவது ஒரு நல்ல விஷயம் என்பது எங்கள் கருத்து. இது பொதுமக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் கார்களை வேகமாக பிரபலமாக்கும் என நாங்கள் கருதுகிறோம். எனவே இது, எலெக்ட்ரிக் கார்களின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்ற அரசின் லட்சியத்திற்கு உறுதுணையாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








