உங்கள் காரை யாரேனும் இரவல் கேட்கிறார்களா? : முதலில் இதைப் படியுங்கள்..!!

Written By:

இரவல் கேட்பது என்பது மனிதர்களுக்குள் இருக்கக்கூடிய இயல்பான ஒரு பழக்கமே. ஆனால் இரவல் வாங்கிய பொருளை குறிப்பிட்ட நேரத்தில், திருப்பிக் கொடுப்பதே நல்லொழுக்கத்திற்கான அடையாளம் ஆகும்.

இரவல் வாங்கிய காருடன் தலைமறைவான பக்கத்து வீட்டுக்காரர்..!!

பக்கத்து வீட்டுக்காரருக்கு இரவலாக கொடுத்த காரை திரும்பப்பெற முடியாமல் ஒரு மாதமாக தவித்து வரும் ஒருவருடைய கதை, இரவல் கொடுப்பவர்களை சற்றே யோசிக்க வைப்பதாக உள்ளது.

இரவல் வாங்கிய காருடன் தலைமறைவான பக்கத்து வீட்டுக்காரர்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள படேல் மார்க் பகுதியைச் சேர்ந்தவர் அமர் சிங். இவர் சமீபத்தில் தான் புத்தம்புதிய ரெனோ க்விட் கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

இரவல் வாங்கிய காருடன் தலைமறைவான பக்கத்து வீட்டுக்காரர்..!!

அமர் சிங்கின் அண்டை வீட்டுக்காரரான ஆஷிஷ் என்பவர், அமர் சிங்கின் புதிய காரை வெளியூர் செல்வதற்காக 2 நாட்கள் இரவலாக தருமாறு கேட்டுள்ளார்.

இரவல் வாங்கிய காருடன் தலைமறைவான பக்கத்து வீட்டுக்காரர்..!!

யாருக்குமே புதிய பொருளை இரவலாக கொடுக்க தயக்கமாகவே இருக்கும், என்றாலும் அண்டை வீட்டுக்காரர் ஆயிற்றே என அமர் சிங்கும், தனது காரை ஆஷிஷிற்கு கொடுத்துள்ளார்.

இரவல் வாங்கிய காருடன் தலைமறைவான பக்கத்து வீட்டுக்காரர்..!!

2 நாட்களில் திரும்பிவிடுவதாக கூறிச்சென்ற ஆஷிஷ், கூறியதைப் போல் திரும்பி வராததால் அதிர்ச்சியடைந்த அமர்சிங் இது குறித்து ஆஷிஷ்-ன் பெற்றோரிடம் விசாரித்த போது அவருக்கு சரியான பதில் கிடைக்கவில்லை.

இரவல் வாங்கிய காருடன் தலைமறைவான பக்கத்து வீட்டுக்காரர்..!!

சரி மேலும் சில நாள் பொருமை காக்கலாம் எனக் கருதி காத்திருந்த அமர்சிங், ஒரு மாதத்திற்கு மேலாகியும் தன் கார் திரும்பவராததால் மிகவும் கவலையடைந்துள்ளார்.

இரவல் வாங்கிய காருடன் தலைமறைவான பக்கத்து வீட்டுக்காரர்..!!

காரை எடுத்துச் சென்ற ஆஷிஷ் குறித்து எந்த தகவலும் இல்லாமல் இருந்ததால், இனிமேலும் காத்திருப்பதில் அர்த்தம் இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ளார் அமர்சிங்.

இரவல் வாங்கிய காருடன் தலைமறைவான பக்கத்து வீட்டுக்காரர்..!!

காவல்நிலையத்தில் நடந்ததைக் கூறி, காருடன் தலைமறைவாகிவிட்டதாக ஆஷிஷ் மீது புகார் அளித்துள்ளார் அமர்சிங். தற்போது ஆஷிஷ் மீது நம்பிக்கை மோசடி (406) பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இரவல் வாங்கிய காருடன் தலைமறைவான பக்கத்து வீட்டுக்காரர்..!!

இரவல் கொடுப்பது இயல்பான ஒரு பழக்கம் என்றாலும், அது நம்பிக்கை சார்ந்த விஷயம் என்பதால் நம்பிக்கைக்கு பாத்திரமான நபர்களுக்கு மட்டும் உதவி செய்வதே சிறந்ததாகும்.

இரவல் வாங்கிய காருடன் தலைமறைவான பக்கத்து வீட்டுக்காரர்..!!

உங்கள் காரை யாரேனும் இரவல் கேட்கிறார்கள் என்றால் சற்று கவனமுடன் செயல்படுதல் நல்லது.

English summary
Read in Tamil about Man borrows car from neighbour and absconding for over a month.
Please Wait while comments are loading...

Latest Photos