ஆரஞ்ச் நிற வந்தே பாரத் சென்னை-நெல்லை ரூட்டுக்கு வருமா? இந்த சின்ன மேட்டருக்கே துள்ளி குதிக்கும் மக்கள்

சென்னை ஐசிஎஃப் தயாரித்த ஆரஞ்சு நிற வந்தே பாரத் ரயிலை நெல்லைக்கு இயக்க வேண்டும் என மக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது. இதன்படி தெற்கு ரயில்வே நிர்வாகம் இந்த ரயிலை சென்னை-நெல்லை வந்தே பாரத் ரயிலாக இயக்குமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இது குறித்து விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் வந்தே பாரத் பெயர்களுக்கு தனி மவுசு இருக்கிறது வெளிநாடுகளில் உள்ள புல்லட் ரயில் போல இந்தியாவே சொந்தமாக வந்தே பாரத் ரயிலை தயாரித்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் அறிமுகப்படுத்தி வருகிறது. மக்கள் பலர் இந்த வந்தே பாரத் ரயிலில் பயணிக்க அதிகம் விரும்புகின்றனர்.

tirunelveli chennai orange color vande bharat

தமிழகத்தை பொறுத்தவரை தற்போது சென்னையிலிருந்து பெங்களூரு வழியாக மைசூரூவிற்கும், சென்னையில் இருந்து ஈரோடு வழியாக கோயம்புத்தூருக்கும் என இரண்டு வந்தே பாரத் துறையில் இயக்கப்பட்டு வருகின்றன. அடுத்ததாக மக்கள் மத்தியில் மிக நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்படும் ஒரு ரயில் என்றால் சென்னையில் இருந்து திருச்சி, மதுரை வழியாக நெல்லைக்கு அறிவிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் தான்.

இந்த வந்தே பாரத் ரயில் கடந்த சில மாதங்களுக்கு முன்னரே அறிவிக்கப்பட்டாலும் இன்னும் செயல்பாட்டுக்கு வருவதில் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது. இதற்கான அறிமுக தேதி அறிவிக்கப்பட்டு பின்னர் மாற்றி அமைக்கப்பட்ட கதை எல்லாம் நடந்து வருகிறது. இந்த ரயில் எப்பொழுது செயல்பாட்டுக்கு வரும் என தென் மாவட்ட மக்கள் பலர் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

tirunelveli chennai orange color vande bharat

இந்நிலையில் சென்னை ஐசிஎஃப் நிர்வாகம் பழைய வந்தே பாரத் ரயிலை புதுப்பித்து ஆரஞ்சு நிறத்தில் புதிய வந்தே பாரத் ரயிலை தயாரித்து கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்தியது. பழைய வந்தே பாரத் ரயிலில் உள்ள பிரச்சனைகளை எல்லாம் கண்டறிந்து அதை அப்டேட் செய்து புதிய வந்தே பாரத் ரயிலை ரயில்வே நிர்வாகம் அறிமுகப்படுத்தியது. மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் இந்த ரயிலை அறிமுகப்படுத்தி வைத்தார்.

இந்நிலையில் இந்திய ரயில்வே நிர்வாகம் இந்த ரயிலை தெற்கு ரயில்வேக்கு ஒதுக்கி உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. தெற்கு ரயில்வே நிர்வாகம் முடிவு செய்யும் ரோட்டில் இந்த ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மத்தியில் இந்த ஆரஞ்சு நிற ரயில் முதலில் எந்த ரூட்டில் இயக்கப்பட போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

தெற்கு ரயில்வே ஏற்கனவே சென்னையிலிருந்து திருச்சி,மதுரை வழியாக திருநெல்வேலிக்கு ஒரு வந்தே பாரத் ரயிலை இயக்க முடிவு செய்து அந்த ரயில் குறித்து அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. அந்த ரயிலுக்கான அறிமுகத்தை குறித்து தான் தற்போது பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.

இந்நிலையில் தெற்கு ரயில்வேக்கு ஒதுக்கப்பட்ட முதல் ஆரஞ்சு நிற வந்தே பாரத் ரயிலை சென்னையிலிருந்து நெல்லைக்கு அறிவிக்கப்பட்ட ரயிலாக இந்த ஆரஞ்சு நிற வந்தே பாரத் ரயிலை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனால் ரயில்வே நிர்வாகம் இந்த ரயில் குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கலாம்.

சென்னையிலிருந்து திருச்சி,மதுரை வழியாக நெல்லை ரூட் என்பது மக்கள் அதிகம் பயன்படுத்தும் ரூட்டாக இருக்கிறது. முக்கியமாக தமிழகத்தில் சென்னையை அடுத்த பெரிய நகரங்களான திருச்சி மதுரை நெல்லை போன்ற நகரங்களை இந்த ஒரே ரயிலே இணைக்கும் என்பதால் இந்த ரயில் மீது பலருக்கு எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.

தற்போது நெல்லையிலிருந்து வேகமாக சென்னை செல்ல வேண்டும் என்றால் இருக்கும் ஒரே வழி சாதாரண எக்ஸ்பிரஸ், சூப்பர் ஃபாஸ்ட் ரயில்கள் தான். இந்த வந்தே பாரத் வந்துவிட்டால் நெல்லையிலிருந்து சென்னைக்கு பயண நேரம் வெகுவாக குறையும் என்பதால் பல வியாபாரிகள் உள்ளிட்ட பொதுமக்கள் இந்த ரயிலை அதிகம் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வந்தே பாரத் ரயிலுக்கு மிகப்பெரிய அளவிலான மவுசு இருக்கிறது. ஏகப்பட்ட மக்கள் இந்த வந்தே பாரத் ரயிலில் பயணிக்க விரும்பி டிக்கெட் விலை முன்பதிவு செய்து வருகின்றனர். டிக்கெட் விலை அதிகமாக இருந்தாலும் இந்த ரயிலுக்கான தேவை இருப்பதால் மக்கள் மத்தியில் இந்த ரயிலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நெல்லை-சென்னை வந்த வந்தே பாரத் ரயிலுக்கும் இதே வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, September 2, 2023, 9:35 [IST]
English summary
Nellai chennai route may get the first orange color vande bharat train
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+