பிரதமர் என்றும் பாராமல் கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்... ஃபோட்டோவுக்கு போஸ் கொடுத்தது குத்தமா?..

ஃபோட்டோவிற்கு போஸ் பிரதமரை நெட்டிசன்கள் மீம் போட்டு கலாய்க்க ஆரம்பித்துள்ளனர்.

பிரதமர் என்றும் பாராமல் கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்... ஃபோட்டோவுக்கு போஸ் கொடுத்தது குத்தமா?..

உலக நாடுகள் பல பன்முக காரணங்களுக்காக மின்சார வாகனத்தை ஊக்குவிக்க தொடங்கியுள்ளன. புவி வெப்ப மயமாதல் மற்றும் காற்று மாசுபாடு போன்ற மிகப்பெரிய சிக்கல்களில் இருந்து தீர்வு காண வேண்டும் என்பதே இதன் மிக முக்கிய நோக்கமாகும். பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களைத் தொடர்ச்சியாக பயன்படுத்தினால் இதில் தீர்வு எட்ட முடியாது என்பதை உணர்ந்த இவ்வுலகம் தற்போதே மிக தீவிரமாக மின் வாகன பயன்பாட்டை ஊக்குவித்தத் தொடங்கியிருக்கின்றது.

பிரதமர் என்றும் பாராமல் கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்... ஃபோட்டோவுக்கு போஸ் கொடுத்தது குத்தமா?..

மின் வாகனங்களின் பக்கம் மக்களைக் கவர வேண்டும் என்பதற்காக மானியம் போன்ற சிறப்பு ஊக்கத்தொகைத் திட்டம் மற்றும் பல்வேறு சலுகைகளை அவை அறிவித்து வருகின்றன. மேலும், மானியம் மட்டுமின்றி சில முன்னுதாரணமான நடவடிக்கைகளிலும் உலக நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.

பிரதமர் என்றும் பாராமல் கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்... ஃபோட்டோவுக்கு போஸ் கொடுத்தது குத்தமா?..

அந்தவகையில், மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் இங்கிலாந்து நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் செய்த செயல் ஒன்று, தற்போது அந்நாட்டு நெட்டிசன்களுக்கு இரையாக மாறியிருக்கின்றது. குறிப்பிட்டு கூற வேண்டுமானால் மீம்ஸ் போட தூண்டியிருக்கின்றது.

பிரதமர் என்றும் பாராமல் கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்... ஃபோட்டோவுக்கு போஸ் கொடுத்தது குத்தமா?..

ஆம், இங்கிலாந்து நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் அந்நாட்டின் நிதியமைச்சரே தற்போது நெட்டிசன்களின் மீம்ஸ் கிண்டலில் சிக்கியிருக்கின்றனர். இவர்கள் இருவரும் மிக சமீபத்தில் மின்சார வாகனங்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக, லண்டனில் புதிதாக நிறுவிய சார்ஜ் நிலையத்தின் திறப்பு விழாவில் கலந்துக் கொண்டனர்.

பிரதமர் என்றும் பாராமல் கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்... ஃபோட்டோவுக்கு போஸ் கொடுத்தது குத்தமா?..

அப்போது, சார்ஜ் நிலையத்தில் இருந்த வாகன சார்ஜிங் கன்களை எடுத்து சுடுவதைப் போன்று போஸ் கொடுத்தனர். இந்த புகைப்படமே நெட்டிசன்களின் மீம்ஸ்களுக்கு தூண்டுகோளாக அமைந்திருக்கின்றது. பிரதமர் போரிஸ் ஜான்சன் கொடுக்கும் போஸானது ஜேம்ஸ் படத்தில் வரும் கதாநாயகன் கொடுக்கும் போஸைப் போன்று இருப்பதாகவும், நிதியமைச்சரின் போஸ் ஜேம்ஸ் பாண்டின் கதாநாயகியைப் போன்று இருப்பதாகவும் கிண்டலடித்து வருகின்றனர்.

பிரதமர் என்றும் பாராமல் கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்... ஃபோட்டோவுக்கு போஸ் கொடுத்தது குத்தமா?..

சிலர் இவர்களை பேட்மேன் மற்றும் ராபின் ரீபூட் என்ற திரைப்பட கதாப்பாத்திரங்களுடன் ஒப்பிட்டு மீம்ஸ்களைப் போட்டு வருகின்றனர். இதுகுறித்த புகைப்படங்களே தற்போது இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகின்றது. நெட்டிசன்களின் இந்த செயல் கேலிக்கூத்தாக மாறியிருந்தாலும், அவர்கள் முன்னெடுத்த செயல் மிக சிறப்பான உந்துதலைப் பெற்றிருக்கின்றது.

பிரதமர் என்றும் பாராமல் கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்... ஃபோட்டோவுக்கு போஸ் கொடுத்தது குத்தமா?..

அதாவது, மின்சார கார் பற்றிய விழிப்புணர்வு மக்கள் மத்தியில் மிக வேகமாக பரவ தொடங்கியிருக்கின்றது. இது அரசு எண்ணியதைவிட மிக வேகமாகும். இந்தியாவைப் போலவே இங்கிலாந்திலும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வாகன விற்பனை கடும் மந்தநிலையில் காணப்படுகின்றது.

பிரதமர் என்றும் பாராமல் கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்... ஃபோட்டோவுக்கு போஸ் கொடுத்தது குத்தமா?..

இம்மாதிரியான சூழ்நிலையிலேயே மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் முயற்சியில் போரிஸ் ஜான்சன் ஈடுபட்டு வருகின்றார். ஆனால், அது தற்போது அந்நாட்டில் கேலிக் கூத்தாக மாறியிருக்கின்றது. மின்வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக பிரதமர் போரிஸ் ஜான்சன் விழிப்புணர்வு பிரச்சாரம் மட்டுமின்றி மானியம் போன்ற சிறப்பு திட்டத்தையும் நடைமுறைப்படுத்தி வருகின்றார்.

பிரதமர் என்றும் பாராமல் கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்... ஃபோட்டோவுக்கு போஸ் கொடுத்தது குத்தமா?..

பெட்ரோல் மற்றும் டீசல் வாகன உரிமையாளர்கள், அவர்களின் பழைய வாகனங்களை எக்ஸ்சேஞ்ஜ் செய்து புதிய மின்சார கார்களை வாங்கினால் பெரும் ஊக்கத் தொகை வழங்கப்படும் என அறிவித்திருக்கின்றார். அந்நாட்டு மதிப்பில் 6 ஆயிரம் பவுண்டுகள் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

பிரதமர் என்றும் பாராமல் கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்... ஃபோட்டோவுக்கு போஸ் கொடுத்தது குத்தமா?..

இது இந்திய மதிப்பில் சுமார் 5.70 லட்சம் ரூபாய் ஆகும். இந்த அறிவிப்பு இங்கிலாந்து நாட்டு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற தொடங்கியுள்ளது. இத்துடன், பழைய கார் ஸ்கிராப்பேஜ் பாலிசிக்கும் இங்கிலாந்து பிரதமர் யோசித்து வருவதாக தகல்கள் வெளியாகியுள்ளன. ஆகையால், விரைவில் அதுகுறித்த அறிவிப்பும் வெளியாகும் என அந்நாட்டு மக்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Netizens Mocked UK PM Boris Johnson & FM Rishi Sunak For Posing With EV Chargers. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X