புதிய போயிங் 737 மேக்ஸ் விமானம் அறிமுகம்: 2017ல் பயன்பாட்டுக்கு வருகிறது!

Written By:

அமெரிக்காவை சேர்ந்த போயிங் விமான நிறுவனத்தின் மிகவும் வெற்றிகரமான தயாரிப்பாக போயிங் 737 விமானம் கூறப்படுகிறது. 1967ம் ஆண்டு முதல்முறையாக போயிங் 737 குடும்ப வரிசையின் முதல் விமானம் அறிமுகம் செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து, உலக அளவில் விமான சேவை நிறுவனங்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் விருப்பமான விமானங்களில் ஒன்றாக போயிங் 737 பயணிகள் விமானம் இருந்து வருகிறது. இந்தநிலையில், போயிங் 737 வரிசையில் புதிய விமானம் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

மாடல்

மாடல்

போயிங் 737 குடும்ப வரிசையில் நான்காவது தலைமுறை மாடலாக போயிங் 737 மேக்ஸ் விமானம் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

சிறப்பு

சிறப்பு

அதிக எரிபொருள் சிக்கனம், குறைவான இயக்குதல் செலவு மற்றும் பயணிகளை கவரும் அம்சங்களுடன் புதிய போயிங் 737 மேக்ஸ் விமானம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

எரிபொருள் சிக்கனம்

எரிபொருள் சிக்கனம்

இதன் ரகத்திலான விமானங்களை ஒப்பிடும்போது, 20 சதவீதம் அதிக எரிபொருள் சிக்கனத்தை தரும் என்கிறது போயிங். அதாவது, போட்டியாளர்களைவிட மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குதல் செலவு

இயக்குதல் செலவு

இதன் ரகத்தை சேர்ந்த விமானங்களைவிட, ஒரு இருக்கைக்கு 8 சதவீதம் அளவுக்கு குறைவான இயக்குதல் செலவீனம் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. விமான பயணக் கட்டணமும் மிக குறைவாக நிர்ணயிக்க முடியும் என்பதால், பயணிகளுக்கும் உகந்ததாக தெரிவிக்ப்படுகிறது.

பிளவு இறக்கை

பிளவு இறக்கை

இறக்கைகளின் நுனிப்பகுதி பிளவுப்பட்டதாக கொடுக்கப்பட்டிருப்பதன் மூலம், சிறப்பான ஏரோடைனமிக்ஸ் கொண்டதாக இருக்கும் என்று போயிங் தெரிவித்துள்ளது. இந்த பிளவுபட்ட இறக்கை டிசைன் மூலமாக 1.8 சதவீதம் கூடுதல் எரிபொருள் சிக்கனம் உறுதி செய்யப்படுகிறது.

புதிய எஞ்சின்

புதிய எஞ்சின்

போயிங் 737 மேக்ஸ் விமானத்தில் சிஎஃப்எம் நிறுவனத்தின் நவீன வகை லீப்-1பி என்ற புதிய எஞ்சின்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. அதிக செயல்திறன், சிறப்பான எரிபொருள் சிக்கனம் கொடுக்க வல்லதாக இந்த எஞ்சின் குறிப்பிடப்படுகிறது.

இன்டீரியர்

இன்டீரியர்

போயிங் நிறுவனத்தின் புதிய ஸ்கை இன்டீரியர் தாத்பரியத்தை கொண்டிருக்கிறது. எனவே, விமானத்தின் உள்ளே ஒரு ரம்மியமான சூழலை உணர முடியும். அத்துடன், மிக சொகுசான இருக்கைகள், பொழுதுபோக்கு வசதிகளை கொண்டிருக்கும்.

மாடல்கள்

மாடல்கள்

நான்கு மாடல்களில் வர இருக்கிறது. போயிங் 737 மேக்ஸ் 7 என்ற மாடலில் அதிகபட்சமாக 149 பயணிகளும், 737 மேக்ஸ்-8 மாடலில் 189 பயணிகளும், மேக்ஸ்-200 மாடலில் 200 பயணிகளும், மேக்ஸ்-9 மாடலில் 220 பயணிகளும் செல்ல முடியும்.

வடிவம்

வடிவம்

737 மேக்ஸ் 7 விமானம் 33.7 மீட்டர் நீளமும், 737 மேக்ஸ்-8 மற்றும் 200 மாடல்கள் 39.5 மீட்டர் நீளமும், 42.2 மீட்டர் நீளமும் கொண்டது. மணிக்கு அதிகபட்சமாக 842 கிமீ வேகத்தில் செல்லும்.

விலை

விலை

போயிங் 737 மேக்ஸ்-7 விமானம் 90.2 மில்லியன் டாலர்களுக்கும், 737-8 மற்றும் 200 மாடல்கள் 110 மில்லியன் டாலர்களுக்கும், 737-9 மாடல் 116 மில்லியன் டாலர்கள் விலையிலும் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

எப்போது பயன்பாட்டுக்கு வருகிறது?

எப்போது பயன்பாட்டுக்கு வருகிறது?

வரும் 2017ம் ஆண்டு சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு முதல் விமானத்தை டெலிவிரி கொடுக்க போயிங் திட்டமிட்டிருக்கிறது. உலகின் பல விமான சேவை நிறுவனங்கள் ஆர்டர் கொடுத்திருக்கும் நிலையில், ஸ்பைஸ்ஜெட் நிறுவனமும் இந்த விமானத்தை ஆர்டர் செய்துள்ளது.

செய்திகள் உடனுக்குடன்…

செய்திகள் உடனுக்குடன்…

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Boeing has unveiled its new 737 MAX passenger plane in Renton, Washington, USA. To Know more about this huge plane, see here...
Story first published: Thursday, December 10, 2015, 14:18 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark