கடைசி நேரத்துல ரீசார்ஜ் பண்ண வேணாம்! காசே இல்லேனாலும் டோல்கேட்டை கடந்து போகலாம்! வருகிறது புது ரூல்ஸ்!
FASTag பயனர்கள் தங்கள் கார்டில் பணம் இருப்பு நிலை சரிபார்ப்பு தொடர்பான புதிய விதிகள் அமலுக்கு வரவுள்ளது. இந்திய தேசிய பண பரிவர்த்தனை நிறுவனம் (NPCI) டோல் கட்டண விதிமுறைகளில் சில மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. உங்கள் FASTag பிளாக்லிஸ்ட் செய்யப்பட்டிருந்தால், அதை சரிசெய்ய உங்களுக்கு குறைந்தபட்ச நேரம் உள்ளது. இந்த அப்டேட்களைப் புரிந்துகொள்வது எளிதான நெடுஞ்சாலை பயணத்திற்கு மிக முக்கியமானது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
2025 ஜனவரி 28 அன்று வெளியிடப்பட்ட NPCI இன் சுற்றறிக்கையின்படி, ஃபாஸ்டேக் சுங்க சாவடியில் ரீட் செய்யப்பட்ட நேரத்தையும் அதன் நிலையையும் அடிப்படையாகக் கொண்டு பரிவர்த்தனைகள் சரிபார்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீங்கள் சுங்க சாவடியில் சென்று உங்கள் கார்டு ரீடு செய்யும் முன்பு 60 நிமிடங்கள் அல்லது சுங்கசாவடியில் ரீடு செய்யப்பட்ட பிறகு 10 நிமிடங்கள் வரை பிளாக் லிஸ்ட் செய்யபட்ட நிலையில் இருந்தால், பரிவர்த்தனை 176 என்ற கோட் உடன் நிராகரிக்கப்படும். இந்த விதி 2025 பிப்ரவரி 17 முதல் நடைமுறைக்கு வருகிறது.

வாகனங்கள் FASTag அமைப்பில் ஒயிட் லிஸ்ட் அல்லது பிளாக் லிஸ்டில் இருக்கலாம். போதுமான இருப்பு இல்லாததால், பலருக்கு KYC அப்டேட்கள் நிலுவையில் இருப்பதால் அல்லது வாகன பதிவு விவரங்களில் பொருந்தாததால் பிளாக்லிஸ்டிங் செய்யப்படுகிறது. புதிய விதி பரிவர்த்தனை நிராகரிக்கப்படுவதற்கு முன்பு இந்த பிரச்சினைகளை தீர்க்க 70 நிமிட இடைவெளியை வழங்குகிறது.
டோல் பிளாசாவுக்கு வருவதற்கு முன்பு 60 நிமிடங்களுக்கும் அதிகமாக FASTag பிளாக்லிஸ்டில் இருக்கக்கூடாது அப்படி இல்லாமல் இருந்தால் உங்கள் கார்டில் பணம் இல்லை என்றாலும் நீங்கள் கடந்து செல்ல அனுமதி வழங்கப்படும். ஆனால் இதை டோல் பிளாசாவை கடந்து சென்ற பிறகு 10 நிமிடங்களுக்குள் சரி செய்ய வேண்டும். அதாவது தேவையான அளவு பணத்துடன் ரீசார்ஜ் செய்ய வேண்டும். இந்த திட்டம் பயனர்கள் தங்கள் கார்டை சுங்கசாவடி வரிசையில் நின்று ரீசார்ஜ் செய்வும் அசௌகரியத்தைத் தவிர்க்கவும் உதவுகிறது.

முதலாவதாக, T1 மணிநேரத்தில் பிளாக்லிஸ்ட் செய்யப்பட்டு டோல் பிளாசாவில் கார் நுழைந்தால், பரிவர்த்தனை நிராகரிக்கப்பட்டு இரட்டை டோல் கட்டணம் விதிக்கப்படும். இரண்டாவதாக, R1 மணிநேரத்தில் குறிப்பிட்ட இடைவெளிக்குள் மறுசார்ஜ் செய்யப்பட்டால், ஒற்றை டோல் கட்டணம் மட்டுமே பொருந்தும். மூன்றாவதாக, பிளாக்லிஸ்ட் செய்யப்பட்ட நிலையில் கடந்து செல்வது இரட்டை கட்டணத்திற்கு வழிவகுக்கும்.
டோல் பிளாசாவுக்கு வருவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு ஒரு வாடிக்கையாளர் ரீசார்ஜ் செய்தால், பிளாசாவின் தொழில்நுட்பம் உடனடியாக புதுப்பிக்கப்படாவிட்டாலு, அவர்கள் தங்கள் FASTag ஐ ஸ்கேன் செய்வதன் மூலம் காசு இல்லாமலேயே கடந்து செல்லலாம். இருப்பினும், சரியான நேரத்தில் கார்டு புதுப்பிக்கப்படாவிட்டால், அடுத்து மேனுவலாக டபுள் கட்டணம் செலுத்த வேண்டிய தேவை இருக்கும்.

டோல் பிளாசா அனுபவங்களை மேம்படுத்துவதற்கும், சர்ச்சைகளை குறைப்பதற்கும், சாஃப்டான பரிவர்த்தனைகளை உறுதிப்படுத்துவதற்கும் இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. 176 என்ற கோடு நீங்கள் பணம் இல்லாமல் கடக்கும் போது காட்டப்படும். இதை படிப்பது மூலம் அடுத்தகட்ட செயல்முறைகளை திறம்பட நிர்வகிக்க உதவும். எதிர்பாராத பிளாக்லிஸ்ட்களை தவிர்க்க இருப்புநிலை மற்றும் ஸ்டேட்டஸ் அப்டேட்களை பராமரிப்பது அவசியம்.
தங்கள் ஃபாஸ்ட் டேக் நிலைகளைப் பற்றி அறிந்துகொண்டு கணக்குகள் சரியாக பராமரிக்க இதன் மூலம் வாடிக்கையாளர்களை அறிவுறுத்தப்படுகிறார்கள்.. இந்த முறை பயனர்களிடையே கவனத்தை ஊக்குவித்து டோல்களில் நெரிசலை திறம்பட நிர்வகிக்க உதவும் என கூறப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மோசடி பரிவர்த்தனைகளை குறைப்பதன் மூலம் புதிய விதிகள் அமைப்பின் ஒருமைப்பாட்டை மேம்படுத்துகின்றன, ஆனால் தங்கள் நிலையை அறியாதவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும். ஒட்டுமொத்தமாக, இந்த மாற்றங்கள் பயனர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பயனளிக்கும் ஒரு ஒழுங்கான நெடுஞ்சாலை அமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.


Click it and Unblock the Notifications









