இனி ஸ்கேன் ஆகலன்னு வண்டிய ரிவர்ஸ்ல எடுக்க வேணாம்! டோல்கேட்டில் வருகிறது புதிய கருவி!
சுங்கச்சாவடிகளில் தற்போது ஃபாஸ்ட் டேக் கார்டுகள் தான் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், பல்வேறு இடங்களில் நீண்ட வரிசையில் வாகனங்கள் என்று வருகின்றன. இதற்கு ஃபாஸ்ட் டேக் கார்டுகளை ரீடு செய்யும் கருவிகள் போதுமான அளவு திறன் பட செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. இதற்கு தீர்வு செய்யும் வகையில் தற்போது தேசிய நெடுஞ்சாலை துறை அமைச்சகம் புதிய முயற்சி ஒன்றை கையில் எடுத்துள்ளது. இதன் மூலம் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் வரிசையில் நிற்பது குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியா முழுவதும் தற்போது தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு அங்கு கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. முன்பு எல்லாம் நேரடியாக பணம் மூலம் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது ஆர்எஃப்ஐடி மூலம் நேரடியாக வாகன உரிமையாளரின் வங்கி கணக்கில் இருந்து கட்டணம் கழிக்கப்பட்டு வருகிறது.

இன்று இந்தியாவில் இயங்கும் 99 சதவீதமான வாகனங்களில் இந்த ஃபாஸ்ட் டேக் கார்டுகள் பயன்பாட்டில் வந்துவிட்டது. இந்த ஃபாஸ்ட் டேக் கார் அறிமுகப்படுத்தப்பட்டதற்கு முக்கியமான காரணமே சுங்கச்சாவடிகளில் நீண்ட வரிசையில் வாகனங்கள் நிற்பதை தவிர்க்க வேண்டும் என்பதற்காக தான். ஆனால் ஃபாஸ்ட் டேக் கார்டு வந்த பிறகும் இப்படியான சூழ்நிலைகள் தான் தொடர்ந்து நிலவி வருகிறது.
ஃபாஸ்ட் டேக் கார்டுகளில் தானியங்கி முறையில் நேரடியாக ஆர்எஃப்ஐடி கார்டு ஸ்கேன் செய்து வாகனங்களின் உரிமையாளர் வங்கி கணக்கில் இருந்து பணம் கழிக்கப்பட்டாலும், தொடர்ந்து வாகனங்கள் சுங்கச்சாவடியில் வரிசையில் நிற்பதற்கு முக்கியமான காரணம் ஐடி கார்டு சரியாக ஸ்கேன் செய்யப்படாதது தான் என கூறப்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் தற்போது புதிய திட்டம் ஒன்றை தேசிய நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவித்துள்ளது.

அதன்படி தேசிய நெடுஞ்சாலையில் பயன்படுத்துவதற்கான தரக்கட்டுப்பாடு சோதனை மற்றும் தரச் சான்று கொண்ட கருவிகளை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக மத்திய எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் ஐடி துறை சார்பில் தேசிய நெடுஞ்சாலைகளில் பயன்படுத்தப்படும் கருவிகளுக்கான தரச் சான்றுகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இனி தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் இப்படியான தர சான்றுகள் பெற்ற கருவிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
தற்போது தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்டு வரும் ஆர்எஃப்ஐடி ரீடர், ஆண்டனா, ஆட்டோமேட்டிக் நம்பர் பிளேட் ரீடர், டோல் லேன் கண்ட்ரோலர், டோல் பிளாசா சர்வர் உள்ளிட்ட கருவிகள் எல்லாம் இனி தரச் சான்றுகள் வழங்கப்பட்டு விநியோகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்த கருவிகளை பொருத்தினால் தற்போது உள்ளதை விட சிறப்பாக செயல்பட வாய்ப்புள்ளது.

தற்போது பல சுங்கச்சாவடிகளில் கருவிகள் சரியாக செயல்படாததால் கைகளில் ஆர்எஃப்ஐடி ரீடர்களை வைத்துக்கொண்டு ஊழியர்கள் மேனுலாக ஸ்கேன் செய்து வருகிறார்கள். அல்லது சரியாக ஸ்கேன் செய்ய வாகனத்தை முன்னும் பின்னும் ரிவர்ஸ் எடுக்க சொல்லுகிறார்கள். இதனால் ஒரு வாகனம் ஸ்கேன் செய்ய அதிக நேரம் எடுக்கிறது. தரச்சான்று பெற்ற கருவிகளை பயன்படுத்தும் போது இந்த பிரச்சனை பெரும்பாலும் குறைந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தர சான்று பெற்ற கருவிகள் பயன்பாட்டிற்கு வந்த பிறகு இனி வாகனங்கள் சுங்கச்சாவடியில் வரிசையில் நிற்க வேண்டும் என்றால் ஏதாவது வாகனத்தில் ஃபாஸ்ட் டேக் கார்டு ரீசார்ஜ் செய்யாமல் பணம் கழிக்க முடியாமல் இருந்தால் மட்டுமே நிற்க வேண்டும் மற்ற பிரச்சனைகளுக்காக வாகனம் வரிசையில் நிக்க கூடாது என்ற திட்டத்திற்காக இந்த அப்டேட்டை செய்ய நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இந்த அப்டேட் வரிசையாக இந்தியா முழுவதும் உள்ள அனைத்து சுங்கசாவடிகளிலும் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் தற்போது சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்பது விரைவில் தவிர்க்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் ஒரு சில மாதங்களில் இது முழுமையாக அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடியில் நீண்ட வரிசையில் வாகனங்கள் நிற்பது வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகளுக்கு மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. இந்த பிரச்சனைக்கு நீண்ட ஆண்டுகளாக தீர்வு தேடி வரும் நிலையில் மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சகம் இப்படியான ஒரு விஷயத்தை கையில் எடுத்திருப்பது நிச்சயம் பாராட்டப்பட வேண்டியது. இது மக்களின் தலைவலியை குறைக்குமா என பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications









