புதிய தலைமுறை டிசையர் மஞ்சள் நிற 'டி' போர்டிலா!.. விற்பனைக்கு வந்தே மூனு மாசம் தானே ஆகுது!
மாருதி சுஸுகி (Maruti Suzuki)யின் புதிய தலைமுறை டிசையர் (New Gen Dzire) பல்வேறு சிறப்புகளைத் தாங்கிய கார் மாடலாக காட்சியளிக்கின்றது. குறிப்பாக, பாதுகாப்பு விஷயத்தில் ஐந்துக்கு 5 ஸ்டார்களை இந்த கார் மாடல் பெற்றது எல்லாம் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தக் கூடிய அமைந்தது. இத்தகைய அதிகபட்ச ரேட்டிங்கை மாருதி கார் பெற்றதே பலரின் ஆச்சரியத்திற்கு மிக முக்கியமான காரணமாக உள்ளது. இதுமட்டுமல்ல அதிக மைலேஜை வழங்கக் கூடிய காராகவும் இது காட்சியளிக்கின்றது.
இதுபோன்று இன்னும் பல்வேறு சிறப்புகளை அது தாங்கியிருக்கின்றது. இதனாலேயே என்னமோ டிசையருக்கு கிடைக்கும் வரவேற்பு தற்போது பலமடங்காக இரட்டிப்படைந்திருக்கின்றது. இந்த நிலையிலேயே புதிய தலைமுறை மாருதி சுஸுகி டிசையர் கார் மாடல் வாடகை கார் சேவையில் இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதை உறுதிப்படுத்தும் விதமாக புதிய தலைமுறை டிசையர் 'டி' போர்டுடன் காட்சியளிக்கும் படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. புதிய தலைமுறை டிசையர் விற்பனைக்கு வந்தபோது, இந்த வெர்ஷன் கால் டாக்சி சேவைக்கு இப்போதைக்கு வழங்கப்படாது என்றே கூறப்பட்டது. மேலும், பழைய தலைமுறை வெர்ஷனே அந்த பிரிவிற்கு விற்பனைக்கு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது.
ஆனால், இப்போது ராஜஸ்தான் மாநிலத்தில் புதிய தலைமுறை டிசையர் மஞ்சள் நிற நம்பர் பிளேட்டுடன் வலம் வந்துக் கொண்டிருக்கின்றது. இதனால்தான் பலர் மீண்டும் இந்த டிசையர் காரை பார்த்து வியப்பில் ஆழ்ந்திருக்கின்றனர். புதிய தலைமுறை டிசையர் இந்தியாவில் விற்பனைக்கு மூன்று மாதங்களே ஆகின்றன.
இந்த நிலையிலேயே அது கால் டாக்சி பிரிவில் அதன் கால் தடத்தைப் பதித்திருப்பது தெரிய வந்து உள்ளது. விற்பனைக்கு வந்த இவ்வளவு குறுகிய நாட்களில் அது கால் டாக்சி பிரிவை வந்தடைந்து இருப்பதும் பலருக்கு இந்த நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.
புதிய தலைமுறை டிசையர் அதிக பாதுகாப்பு தரும் கார் மாடல் மட்டும் அல்ல அதிகம் மைலேஜை தரக் கூடிய கார் மாடலும் கூட என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த கார் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என இரண்டு விதமான ஆப்ஷன்களிலும் விற்பனைக்குக் கிடைக்கும்.
பெட்ரோல் ஆப்ஷன் 24.91 கிமீ முதல் 25.71 கிமீ வரையிலும், சிஎன்ஜி ஆப்ஷன் 33.73 கிமீ வரையிலும் மைலேஜ் தரும். இதன் ஆரம்ப விலையும் மிக மிக குறைவாக உள்ளது. ரூ. 6.79 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்தே இதை வாங்கிக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் நல்ல விற்பனை வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கும் கார் மாடல்களில் ஒன்றாக மாருதி சுஸுகி டிசையர் கார் மாடல் இருக்கின்றது. இதன் விற்பனை வாடகை வாகன சேவைக்கும் தொடங்கி இருப்பது அதற்கு கிடைக்கும் வரவேற்பை மேலும் இரட்டிப்பாக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








