தேனி நகரில் செயல்பாட்டிற்கு வந்த ஹை-டெக் டிராபிக் சிக்னல்கள்... விலையை கேட்டு 'ஸ்டண்' ஆன மக்கள்...

தேனி நகரில் அதிநவீன போக்குவரத்து சிக்னல் கம்பங்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

தேனி நகரில் செயல்பாட்டிற்கு வந்த ஹை-டெக் டிராபிக் சிக்னல்கள்... விலையை கேட்டு 'ஸ்டண்' ஆன மக்கள்...

இந்தியாவில் போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலை விபத்துக்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக, பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை காவல் துறையினர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த வரிசையில் தமிழகத்தின் தேனி நகரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய தொழில்நுட்பம் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய தொழில்நுட்பம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தேனி நகரில் செயல்பாட்டிற்கு வந்த ஹை-டெக் டிராபிக் சிக்னல்கள்... விலையை கேட்டு 'ஸ்டண்' ஆன மக்கள்...

தேனி நகரில் உள்ள முக்கியமான பகுதிகளில் ஒன்றாக முக்கூட்டு சாலை திகழ்கிறது. மதுரை சாலை, கம்பம் சாலை மற்றும் பெரியகுளம் சாலை ஆகிய மூன்று முக்கிய சாலைகளும் சந்திக்கும் இடமாக இது உள்ளது. அத்துடன் பழைய பஸ் நிலையம் மற்றும் வாரச்சந்தைக்கு அருகிலும் முக்கூட்டு சாலை அமைந்துள்ளது. எனவே இந்த பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

தேனி நகரில் செயல்பாட்டிற்கு வந்த ஹை-டெக் டிராபிக் சிக்னல்கள்... விலையை கேட்டு 'ஸ்டண்' ஆன மக்கள்...

ஆனால் இங்கு இயங்கி வந்த போக்குவரத்து சிக்னல் கம்பத்தில் அடிக்கடி பழுது ஏற்பட்டு கொண்டே இருந்தது. குறிப்பாக மழை காலம் என்றால், போக்குவரத்து சிக்னல் கம்பம் தொடர்ந்து பல நாட்கள் வேலை செய்யாமல், செயல் இழந்து விடும். அந்த சமயங்களில், போக்குவரத்து வரைமுறை இல்லாமல் குழப்பத்துடன் இயங்கும் சூழல் காணப்பட்டது.

தேனி நகரில் செயல்பாட்டிற்கு வந்த ஹை-டெக் டிராபிக் சிக்னல்கள்... விலையை கேட்டு 'ஸ்டண்' ஆன மக்கள்...

எனவே முக்கூட்டு சாலை போக்குவரத்து சிக்னல் கம்பத்தை மாற்றியமைக்க வேண்டும் என்ற கோரிக்கை மிக நீண்ட நாட்களாகவே இருந்து வந்தது. இந்த கோரிக்கை தற்போது நிறைவேறியுள்ளது. ஆம், அடிக்கடி பழுதாகி வந்த பழைய போக்குவரத்து சிக்னல் கம்பம் தற்போது மாற்றப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக அதிநவீன தொழில்நுடப் வசதிகளுடன் புதிய போக்குவரத்து சிக்னல் கம்பம் அமைக்கப்பட்டுள்ளது.

தேனி நகரில் செயல்பாட்டிற்கு வந்த ஹை-டெக் டிராபிக் சிக்னல்கள்... விலையை கேட்டு 'ஸ்டண்' ஆன மக்கள்...

இந்த புதிய போக்குவரத்து சிக்னல் மின் கம்பம் கடந்த சில நாட்களுக்கு முன்பு முறைப்படி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இந்த போக்குவரத்து சிக்னல் கம்பத்தில், சிக்னல் மாறும் நேரத்தை வினாடிகளில் வாகன ஓட்டிகளுக்கு காட்டும் டிஜிட்டல் திரை இடம்பெற்றுள்ளது. இது அனைத்து பகுதிகளில் உள்ள போக்குவரத்து சிக்னல் கம்பங்களில் இடம்பெற்றிருக்கும் ஒன்றுதான்.

தேனி நகரில் செயல்பாட்டிற்கு வந்த ஹை-டெக் டிராபிக் சிக்னல்கள்... விலையை கேட்டு 'ஸ்டண்' ஆன மக்கள்...

அப்படி என்றால் இதன் சிறப்பம்சம் என்னவென்று நீங்கள் கேட்பது புரிகிறது. சிகப்பு, பச்சை, மஞ்சள் ஆகிய சிக்னல்கள் விழும்போது, விளக்குகளுடன் சேர்த்து ஒட்டுமொத்த கம்பமே அந்த நிறத்தில் எரியும் என்பதே இதன் சிறப்பம்சம். தமிழகத்தை பொறுத்தவரை, சென்னையில் இத்தகைய அதிநவீன போக்குவரத்து சிக்னல்கள் அமைந்துள்ளன.

தேனி நகரில் செயல்பாட்டிற்கு வந்த ஹை-டெக் டிராபிக் சிக்னல்கள்... விலையை கேட்டு 'ஸ்டண்' ஆன மக்கள்...

சென்னைக்கு அடுத்தபடியாக தேனி நகரில்தான் இது போன்ற அதிநவீன போக்குவரத்து சிக்னல் கம்பங்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. தேனி நகரில் முக்கூட்டு சாலை மட்டுமின்றி, மதுரை சாலையில் உள்ள புறவழி சாலை சந்திப்பு பகுதி மற்றும் பெரியகுளம் சாலையில் உள்ள அன்னஞ்சி விலக்கு பகுதி என மொத்தம் 3 இடங்களில் இந்த புதிய அதிநவீன போக்குவரத்து சிக்னல் கம்பங்கள் தற்போது அமைக்கப்பட்டுள்ளன.

தேனி நகரில் செயல்பாட்டிற்கு வந்த ஹை-டெக் டிராபிக் சிக்னல்கள்... விலையை கேட்டு 'ஸ்டண்' ஆன மக்கள்...

இந்த போக்குவரத்து சிக்னல் கம்பங்களின் மதிப்பு 7 லட்ச ரூபாய் ஆகும். சாலை பாதுகாப்பு நிதியின் மூலம் இந்த அதிநவீன போக்குவரத்து சிக்னல் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேனி நகரில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதில் இந்த புதிய சிக்னல் கம்பங்கள் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து புதிய தலைமுறை செய்தி வெளியிட்டுள்ளது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
New High-Tech Traffic Signal Launched In Theni. Read in Tamil
Story first published: Monday, October 26, 2020, 21:20 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X