Just In
- 4 hrs ago
சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?
- 6 hrs ago
ப்பா... பைக்குகள் என்ன இப்படி இருக்கு!! உலகளவில் அறிமுகமான 2021 மோட்டோ குஸ்ஸி வி9 ரோமர் & வி9 பாப்பர்
- 7 hrs ago
செம கம் பேக்... புதிய தலைமுறை மாடல் வருகைக்கு பின் தூள் கிளப்பும் ஹூண்டாய் கிரெட்டா கார் விற்பனை...
- 8 hrs ago
பிரம்மிப்பா இருக்கு... இந்த நிஸான் டீலர்ஷிப் ஒரே நாளில் இத்தனை மேக்னைட் கார்களை டெலிவரி செய்துள்ளதா?
Don't Miss!
- News
பிடன் பதவியேற்பதற்கு முன்னர் விமானத்தில் பறக்க தயாராகும் ட்ரம்ப் - எங்கே குடியேறுவார் தெரியுமா
- Movies
வெளியே என்ன நடக்குதோ.. நாளைக்கு என்ன நடக்கப் போகுதோ தெரியலையே.. பாலாஜிக்கு அதே நினைப்புதான்!
- Sports
அவர்கிட்டயே சிக்குறீங்களே.. இது தேவையா? ஆஸி. வீரரின் வலையில் ரோஹித் சர்மா!
- Finance
ரூ.12,000 கோடி வெயிட்டிங்.. இந்தியாவின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் சீனா..!
- Lifestyle
பெண்களை கலவியில் திருப்திப்படுத்துவதற்கு இத மட்டும் கரெக்ட்டா பண்ணுனா போதுமாம்... சரியா பண்ணுங்க...!
- Education
உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை ரெடி! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
தலைகால் புரியாமல் ஆட்டம் போட்ட இளைஞர்... 16 லட்ச ரூபாய் பைக்கை வாங்கிய அடுத்த நொடியே நடந்த சம்பவம்
16 லட்ச ரூபாய் மதிப்புள்ள பைக்கை டெலிவரி எடுத்த அடுத்த நொடியே அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.

ஆஃப் ரோடு சாகச பயண பிரியர்கள் மத்தியில், ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் (Honda Africa Twin), பைக் மிகவும் பிரபலமாக திகழ்ந்து வருகிறது. கடந்த 2016ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட இந்த பைக், 87 ஆயிரம் யூனிட்களுக்கும் மேல் விற்பனை செய்யப்பட்டுள்ளது. பல்வேறு சிறப்புகள் வாய்ந்த ஆப்ரிக்கா ட்வின் பைக்கை ஹோண்டா நிறுவனம் சமீபத்தில் அப்டேட் செய்தது.

முந்தைய மாடலுடன் ஒப்பிடுகையில், 2020 ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் பைக்கில் தொழில்நுட்ப வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் சக்தி வாய்ந்த இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. செயல்திறனில் சிறந்து விளங்கும் புதிய 2020 ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் பைக், இன்னும் ஆஃப் ரோடு பயணங்களுக்கு ஏற்ற வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

மேனுவல் மற்றும் ட்யூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் வேரியண்ட்களில், 2020 ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் பைக் கிடைக்கிறது. இந்த அட்வென்ஜர் டூரர் பைக்கில், எல்இடி லைட்டிங், ஆப்பிள் கார்ப்ளே வசதியுடன் திருத்தி அமைக்கப்பட்ட 6.5 இன்ச் டிஎஃப்டி டச் ஸ்கீரின் டிஸ்ப்ளே மற்றும் ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி வசதியுடன் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆகிய வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன் 2020 ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் மோட்டார்சைக்கிளின் எரிபொருள் டேங்க்கின் கொள்ளளவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதில், 24.8 லிட்டர்கள் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்க் வழங்கப்பட்டுள்ளது. இந்த மோட்டர்சைக்கிளின் விண்டுஸ்க்ரீன் உயரத்தை அட்ஜெஸ்ட் செய்து கொள்ள முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

டூர், அர்பன், க்ராவல் மற்றும் ஆஃப் ரோடு உள்பட மொத்தம் 6 ரைடிங் மோடுகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் க்ரூஸ் கண்ட்ரோல், கார்னரிங் ஏபிஎஸ், ரியர் லிஃப்ட் கண்ட்ரோல் மற்றும் வீலி கண்ட்ரோல் வசதிகளையும் 2020 ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் பைக் பெற்றுள்ளது. இந்த பைக்கில், 1,084 சிசி, ட்வின் சிலிண்டர், லிக்யூட்-கூல்டு இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 101 பிஎஸ் பவரையும், 105 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்த கூடியது. முந்தைய மாடலின் இன்ஜின் உடன் ஒப்பிடும்போது, பவர் 7 சதவீதமும், டார்க் 6 சதவீதமும் உயர்ந்துள்ளது. பியர்ல் க்ளேர் ஒயிட் ட்ரைகலர் மற்றும் டார்க்னெஸ் பிளாக் மெட்டாலிக் கலர் ஆப்ஷன்களுடன், இந்திய மார்க்கெட்டில் 2020 ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் பைக் கிடைக்கிறது.

2020 ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் பைக்கின் மேனுவல் வேரியண்ட்டின் விலை 15.35 லட்ச ரூபாய் எனவும், டிசிடி வேரியண்ட்டின் விலை 16.10 லட்சம் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை இரண்டும் எக்ஸ் ஷோரூம் விலை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய மற்றும் விலை உயர்ந்த ஒரு பைக்கை டெலிவரி எடுக்கும்போது, மனதில் மகிழ்ச்சி பொங்குவது இயல்புதான்.

ஆனால் அந்த மகிழ்ச்சியும், உற்சாகமும் யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடாது. சமீப காலமாக புதிய வாகனங்களை டெலிவரி எடுக்கும் சமயங்களில், ஒரு சில விரும்பத்தகாத நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன்னர், கியா கார்னிவல் பிரீமியம் எம்பிவி ரக காரை ஒருவர் டெலிவரி எடுத்தார்.

அப்போது ஷோரூமின் பக்கவாட்டு சுவரில் அந்த கார் மோதியது. இதன் காரணமாக காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. ஷோரூமை விட்டு வெளியே வருவதற்கு முன்னதாகவே நடந்த இந்த துரதிருஷ்டவசமான சம்பவத்தின் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவிய நிலையில், அதே பாணியில் மற்றொரு சம்பவம் தற்போது அரங்கேறியுள்ளது.

2020 ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் பைக்கை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி கொடுக்கும் பணி தற்போது தொடங்கியுள்ளது. இதன்படி சமீபத்தில் இளைஞர் ஒருவர் அந்த பைக்கை டெலிவரி பெற்றார். விரும்பிய பைக் கைக்கு கிடைத்த உற்சாகத்தில், ஷோரூம் படிக்கட்டுகளில் பைக்கை கீழே இறக்கி வெளியே வருவதற்கு அவர் முடிவு செய்தார்.

இதன்படி பைக்கை படிக்கட்டுகளின் வழியாக கீழே இறக்கும்போது, முன்பக்க சஸ்பென்ஷன் மிக அதிகமாக 'கம்ப்ரஸ்' ஆனதால், க்ரவுண்ட் க்ளியரன்ஸ் குறைந்து விட்டது. இதன் விளைவாக கடைசியில் இருந்த ஒரு படிக்கட்டில், பைக்கின் பாஸ் பிளேட் (Bash Plate) பயங்கரமாக மோதியது. இதனால் அந்த படிக்கட்டு உடைந்து நொறுங்கியது.

எனினும் பைக்கை ஓட்டிய ரைடருக்கோ அல்லது பைக்கிற்கோ எந்தவிதமான சேதாரமும் ஏற்படவில்லை. சமூக வலை தளங்களில் தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. ரேடியண்ட் க்ளிக்ஸ் லைப்ஸ்டைல் யூ-டியூப்பில் வெளியிட்டுள்ள அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக ரைடர் தப்பித்து விட்டார். அத்துடன் பைக்கிற்கும் சேதம் ஏற்படவில்லை. ஆனால் ஷோரூம் உரிமையாளருக்கும், ஊழியர்களுக்கும் இது பிரச்னையை ஏற்படுத்தியுள்ளதை மறுக்க முடியாது. உடைந்த படிக்கட்டை சரி செய்ய, ஷோரூம் உரிமையாளர் கணிசமான தொகையை செலவிட வேண்டியிருக்கும்.