இந்திய கடற்படையில் புதிய நீர்மூழ்கிக் போர்க்கப்பல் ’கரஞ்ச்’ சோதனை ஓட்டம் மும்பையில் தொடக்கம்..!!

Written By:

விரைவில் இந்திய கடற்படைக்கு அர்பணிக்கப்படவுள்ள கரஞ்ச் நீர்மூழ்கி போர்க்கப்பல் சோதனை ஓட்டம் மும்பையில் தொடங்கியுள்ளது.

இந்திய கடற்படையில் புதிய நீர்மூழ்கி கப்பல் ’கரஞ்ச்’

2005ம் ஆண்டில் காங்கிரஸ் தலைமையிலான அரசு, ஃபிரான்ஸின் நேவல் குரூப் நிறுவனத்துடன் 6 புதிய ஒப்பந்தங்களை செய்துக்கொண்டது.

அதன்படி, 6 புதிய ஸ்கார்பீன் ரக போர்க்கப்பலை அந்நிறுவனத்திடமிருந்து வாங்க ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்திய கடற்படையில் புதிய நீர்மூழ்கி கப்பல் ’கரஞ்ச்’

முதல் ஸ்கார்பீன் ஐஎன்எஸ் கல்வாரி நீர்மூழ்கி கப்பல் கடந்தாண்டு டிம்சபரில் நாட்டிற்காக நரேந்திர மோடி அர்பணித்தார்.

தொடர்ந்து இரண்டாவதாக தயாரான ஐஏன்எஸ் காந்தாரி நீர்மூழ்கி போர்கப்பல் வெள்ளோட்ட சோதனையில் ஈடுபட்டு வருகிறது.

Recommended Video - Watch Now!
Ducati 959 Panigale Crashes Into Buffalo - DriveSpark
இந்திய கடற்படையில் புதிய நீர்மூழ்கி கப்பல் ’கரஞ்ச்’

விரைவில் கடற்படையில் இணைக்கப்படவுள்ள காந்தாரி கப்பலுக்கு பிறகு ஃபிரான்ஸ் நேவல் குரூப் நிறுவனம் இந்திய கடற்படைக்காக தயாரித்துள்ள புதிய நீர்மூழ்கி போர்கப்பல் ஐஎன்எஸ் கரஞ்ச்.

இந்திய கடற்படையில் புதிய நீர்மூழ்கி கப்பல் ’கரஞ்ச்’

இந்த கப்பலில் சோதனை ஓட்ட தொடக்க விழா மும்பை மஜ்காவ் கடற்படை தளத்தில் நடைபெற்றது. இதை இந்தைய கடற்படை தளபதி சுனில் லன்பா மனைவி ரீனா லன்பா தொடங்கி வைத்தார்.

இந்திய கடற்படையில் புதிய நீர்மூழ்கி கப்பல் ’கரஞ்ச்’

விழா முடிந்து பேசிய கடற்படை தளபதி சுனில் லம்பா, ஐஎன்எஸ் கரஞ்ச் ஓராண்டு காலமாக கடுமையான சோதனையில் ஈடுபடுத்தப்படும். பிறகு கடற்படையில் இணைத்துக்கொள்ளப்படும் என்று கூறினார்.

இந்திய கடற்படையில் புதிய நீர்மூழ்கி கப்பல் ’கரஞ்ச்’

1960ம் ஆண்டுகளில் இந்திய கடற்படையில் கரஞ்ச் என்ற பெயரில் ஒரு போர்கப்பல் சேவை புரிந்ததுள்ளது. அதை நிகழ்ச்சியில் நினைவுகூர்ந்த அனில் லம்பா 1971ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரில் அக்கப்பல் முக்கிய பங்குவகித்ததாக தெரிவித்தார்.

இந்திய கடற்படையில் புதிய நீர்மூழ்கி கப்பல் ’கரஞ்ச்’

ஐஎன்எஸ் கரஞ்ச் நீர்மூழ்கி கப்பலுக்கு பிறகு வேலா, வகீர் மற்றும் வக்‌ஷீர் ஆகிய பெயர்களில் 3 புதிய நீர்மூழ்கி கப்பல்கள் அடுத்தடுத்து இந்திய கடற்படை வெளியிடவுள்ளது.

இந்திய கடற்படையில் புதிய நீர்மூழ்கி கப்பல் ’கரஞ்ச்’

இதற்கான சோதனையும் விரைவில் தொடங்கவுள்ள நிலையில் சாரசரியான 9 மாதத்திற்கு ஒரு முறை ஒவ்வொரு கப்பலும் அறிமுகமாகும்.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Read in Tamil: New Karanj Submarine Launched At Mumbai Port. Click for Details...
Story first published: Thursday, February 1, 2018, 16:49 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark