குடிச்சிட்டு வண்டி ஓட்டினா 15,000 ரூபாய் அபராதமா! எந்தெந்த விதிமீறலுக்கு எவ்வளவு அபராதம்? தெரிஞ்சிக்கலாமா!..

போக்குவரத்து விதிமீறல்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் உயர்ந்த வண்ணம் இருக்கின்றது. இதனால்-தான் இதற்கு விதிக்கப்படும் அபராதத்தை உச்சபட்சமாக அரசாங்கம் சமீபத்தில் உயர்த்தியது. இதன்படி எந்தெந்த விதிமீறலுக்கு எவ்வளவு ரூபாய் அபராதம் வசூலிக்கப்படுகின்றது என்பது பற்றிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். குறிப்பாக, சில போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதத்துடன் சேர்த்து சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டு இருக்கின்றது. அது என்ன விதிமீறல் என்பதுபற்றிய விபரங்களையும் இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாங்க, விரிவான பதிவிற்குள் போகலாம்.

போக்குவரத்து விதிமீறல்களிலேயே மிக முக்கியமான போக்குவரத்து விதிமீறலாக சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதை அரசு பார்க்கின்றது. இதற்கு கடந்த கால சம்பவங்களே காரணமாக உள்ளது. பெற்றோர்கள் 18 வயதுகூட பூர்த்தியடையாத சிறுவர்களை வாகனத்தை ஓட்டவிட்டு அழகு பார்த்ததன் விளைவாக பல்வேறு விபத்து சம்பவங்கள் அரங்கேறி இருக்கின்றன.

New motor vehicle fines in india

அனைத்துமே மிக மோசமான விபத்துகள் ஆகும். இதனாலேயே இந்த விஷயத்தில் மிக கெடுபிடியை அரசு கடைபிடிக்கின்றது. இந்த போக்குவரத்து விதிமீறலுக்கு உச்சபட்சமாக 25 ஆயிரம் ரூபாய் வரை அபராதமாக விதிக்கப்படுகின்றது. இத்துடன், 3 ஆண்டுகளுக்கு ஜெயில் தண்டனையும் விதிக்கப்படுகின்றது. அத்தோடு நில்லாமல் வாகனத்தின் பதிவு ஓராண்டிற்கு ரத்து மற்றும் வாகனத்தை ஓட்ட அனுமதித்தவரின் லைசன் ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகின்றது.

போக்குவரத்து காவல்துறை இந்த விஷயத்தில் கொஞ்சமும் தயவுதாட்சனையின்றி நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்பது கவனிக்கத்தகுந்தது. இதற்கு அடுத்த இடத்தில் ஓவர் லோடிங் இருக்கின்றது. அதிகமாக பாரம் சுமந்து செல்லும் வாகனங்கள் பல்வேறு விதமான இடையூறுகள் ஏற்படுகின்றன. மிக முக்கியமாக விபத்து உள்ளது.

பாரம் தாங்க முடியாமல் வாகனங்கள் பல விபத்தில் சிக்கியதை நாம் பார்த்திருக்கின்றோம். அதுமட்டுமல்ல, போக்குவரத்து இடையூறு வழங்கும் விதமாக பழுதாகுவது, ஆமைபோல் நகர்ந்து செல்வது உள்ளிட்ட சிக்கல்களை அவை ஏற்படுத்தி வருகின்றன. இதனால்தான், இந்த போக்குவரத்து விதிமீறலுக்கு ரூ. 20 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படுகின்றது.

முன்னதாக இந்த போக்குவரத்து விதிமீறலுக்கு ரூ. 2 ஆயிரம் வரை மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டு வந்தது என்பது கவனிக்கத்தகுந்தது. இதற்கு அடுத்தபடியாக மதுஅருந்திவிட்டு வாகனத்தை ஓட்டுவது இருக்கின்றது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் மேலே பார்த்த இந்த இரண்டைவிட மிக ஆபத்தான போக்குவரத்து விதிமீறலாக மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டுவதே இருக்கின்றது.

இதனால்தான் முதலில் இந்த விதிமீறலில் ஈடுபடுபவருக்கு ரூ. 10 ஆயிரம் அல்லது 6 மாத சிறைத் தண்டனை விதிக்கப்படுகின்றது. இதே தவறை தொடர்ந்து செய்தால் 15 ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்படுகின்றது. குடிபோதையில் வாகனத்தை இயக்கியதால் இதுவரை பல்வேறு விபத்து சம்பவங்கள் அரங்கேறி இருக்கின்றன.

உயிர்களை மிகப் பெரிய அளவில் காவு வாங்கக் கூடிய போக்குவரத்து விதிமீறலாக இதுவே இருக்கின்றது. இதனால்தான் இந்த போக்குவரத்து விதிமீறல் விஷயத்தில் மிகக் கடுமையான நடவடிக்கையை போக்குவரத்துக் காவல்துறை நாட்டில் எடுத்து வருகின்றது. முன்னதாக இந்த விதிமீறலுக்கு 1,000 ரூபாய் தொடங்கி 1,500 ரூபாய் வரை மட்டுமே அபராதம் வசூலிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தகுந்தது.

இதேபோல் அவசரகால வாகனங்களுக்கு வழிவிடாமல் செல்லும் குற்றத்திற்கும் அதிகம் அபராதம் விதிக்கப்பட்டு வருகின்றது. இதற்கு ரூ. 10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படுகின்றது. அதாவது, ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனம் போன்றவற்றிற்கு வழிவிடாமல் சென்றால் உங்களுக்கு ரூ. 10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.

அத்துடன், மேலும், சில கெடுபிடிகளுக்கும் ஆளாக நேரிடும். இதேபோல், பியூசி சான்று இல்லாமல் வாகனத்தை ஓட்டுபவர்களுக்கும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வருகின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. காற்று மாசுபாட்டில் வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை மிக முக்கியமான காரணமாக உள்ளது.

இதைத் தவிர்க்கவே பியூசி சான்றை அரசு கட்டாயமாக்கி இருக்கின்றது. ஆனால், வாகனங்கள் பல இந்த சான்று இல்லாமலேயே இயங்கிக் கொண்டு இருக்கின்றன. இத்தகைய வாகனங்களின் பயன்பாட்டை முற்றிலுமாக தவிர்க்கும் பொருட்டே கடுமையான அபராதம் இதற்கு விதிக்கப்பட்டு வருகின்றது. முன்னர் இந்த விதிமீறலுக்கு ரூ. 1000 மட்டுமே அபராதமாக வசூலிக்கப்பட்டு என்பது கவனிக்கத்தகுந்தது.

இதைத் தொடர்ந்து, செல்போனில் உரையாடிபடி வாகனத்தை ஓட்டுவது, லைசென்ஸ் இல்லாமல் வாகனத்தை இயக்குவது, அபாயகரமாக வாகனங்களை ஓட்டுவது மற்றும் ரேஸ் அல்லது அதீத வேகத்தில் வாகனத்தை இயக்குவது உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறல்களுக்கு அதிகபட்சமாக 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகின்றது. இதேபோல், சிக்னலை மதிக்காமல் செல்வோருக்கும் இதே ஐந்தாயிரம் ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டு வருகின்றது.

முன்னதாக இந்த விதிமீறல்ளுக்கு ரூ. 500 மட்டுமே அபராதமாக வசூலிக்கப்பட்டு வந்தது என்பது கவனிக்கத்தகுந்தது. இதேபோல், வாகனங்களுக்கு காப்பீட்டு திட்டம் இல்லாமல் வாகனங்களை இயக்குவதைக் கடுமையான போக்குவரத்து விதிமீறலாக கருதப்படுகின்றது. இந்த குற்றத்திற்கு ரூ. 2 ஆயிரம் முதலில் அபராதம் விதிக்கப்படுகின்றது.

இதைக் கட்ட தவறினால் 3 மாதங்கள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும். அதேவேளையில், இந்த குற்றத்தில் அடிக்கடி சிக்கினால் அபராதம் 4 ஆயிரம் வரை வசூலிக்கப்படும். இத்துடன், மேலும் கடுமையான நடவடிக்கையும் எடுக்கப்படும். இதுமட்டுமல்ல சீட் பெல்ட் மற்றும் ஹெல்மெட் அணியாமல் பயணிப்பவர்களுக்கு இந்தியாவில் ரூ. 1,000 வரை அபராதம் விதிக்கப்பட்டு வருகின்றது.

இதேபோல், டூ-வீலரில் டிரிபிள் ரைடு செல்வோருக்கும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகின்றது. என்னதான் இதுபோன்று கடுமையான அபராதம் விதிக்கப்பட்டாலும் வாகன ஓட்டிகள் தொடர்ந்து போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட வண்ணமே இருக்கின்றனர். குறிப்பாக, அதிக ஒலியை எழுப்பும் ஹாரன்களைப் பயன்படுத்துவது, மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டுவது, சிக்னலை மதிக்காமல் செல்வது மற்றும் செல்போனை பயன்படுத்துவது உள்ளிட்ட தவறுகளை செய்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.

Take a Poll

இதனால்தான் தொடர்ச்சியாக அரசு அதன் சார்பில் போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத்தை உயர்த்திய வண்ணம் இருக்கின்றது. இத்துடன், நடவடிக்கைகளையும் கடுமையாக்கி வருகின்றது. போக்குவரத்து விதிமீறல்களால் விபத்து, டிராஃபிக் என பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு வருகின்றன. இவற்றில் இருந்து நாட்டை மீட்டெடுக்கும் பொருட்டே உச்சபட்ச அபராதம் விதிக்கப்பட்டு வருகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மார்ச் 1 முதல் இந்த அதிகபட்ச அபராதம் விதி கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்த கடுமையான அபராதத்தில் இருந்து தப்பிக் வேண்டுமானால் கட்டாயம் போக்குவரத்து விதிகளை கடைபிடித்தே ஆக வேண்டும். ஆங்காங்கே, சாலைகளில் ஏஐ வசதிக் கொண்ட கேமிராக்களை நிறுவி காவல்துறை அபராதங்களை விதித்து வருகின்றது. ஆகையால், சாலையில் பயணிக்கும்போது கவனத்துடன் பயணிக்கவும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 19, 2025, 13:20 [IST]
English summary
New motor vehicle fines in 2025 up to 10 times increase for major traffic violations
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+