மத்திய அரசின் அதிரடி சட்டம்... ஆட்டோ கட்டணம் தாறுமாறாக உயர்ந்தது... ஏன் தெரியுமா?

மத்திய அரசின் அதிரடி சட்டம் எதிரொலியாக ஆட்டோ கட்டணம் தாறுமாறாக உயர்ந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மத்திய அரசின் அதிரடி சட்டம்... ஆட்டோ கட்டணம் தாறுமாறாக உயர்ந்தது... ஏன் தெரியுமா?

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, புதிய மோட்டார் வாகன சட்டத்தை, கடந்த செப்டம்பர் 1ம் தேதி அமலுக்கு கொண்டு வந்தது. இதனால் வாகன ஓட்டிகள் தற்போது கதிகலங்கி போயுள்ளனர். போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகள் மிகவும் கடுமையாக உயர்த்தப்பட்டிருப்பதுதான் இதற்கு காரணம்.

மத்திய அரசின் அதிரடி சட்டம்... ஆட்டோ கட்டணம் தாறுமாறாக உயர்ந்தது... ஏன் தெரியுமா?

இந்தியாவில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைய வேண்டுமென்றால், இது போன்ற கடுமையான நடவடிக்கைகள் தேவை என இதற்கு ஆதரவும் இருக்கிறது. அதே சமயம் இது வாகன ஓட்டிகளை கடுமையாக பாதிக்கும் என எதிர்ப்பும் நிலவி வருகிறது. கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருந்தாலும், புதிய அபராத தொகைகளை போலீசார் தீவிரமாக அமல்படுத்தி வருகின்றனர்.

மத்திய அரசின் அதிரடி சட்டம்... ஆட்டோ கட்டணம் தாறுமாறாக உயர்ந்தது... ஏன் தெரியுமா?

பீகார் மாநிலம் பாட்னா நகரிலும், புதிய மோட்டார் வாகன சட்டத்தை போலீசார் கடுமையாக செயல்படுத்தி கொண்டுள்ளனர். இந்த சூழலில், புதிய மோட்டார் வாகன சட்டத்தின் கீழ், 2ம் கட்ட வாகன தணிக்கையை பாட்னா போக்குவரத்து போலீசார் கடந்த திங்கள் கிழமை தொடங்கினர். அன்று முதல் 100க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.

மத்திய அரசின் அதிரடி சட்டம்... ஆட்டோ கட்டணம் தாறுமாறாக உயர்ந்தது... ஏன் தெரியுமா?

பாட்னா நகரை பொறுத்தவரையில் பெரும்பாலான ஆட்டோ டிரைவர்களிடம், டிரைவிங் லைசென்ஸ், ஆர்சி, சட்டப்பூர்வமான பெர்மிட், மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் மற்றும் இன்சூரன்ஸ் போன்ற ஆவணங்கள் இல்லை. எனவே போலீசாரின் நடவடிக்கைகளுக்கு பயந்து கொண்டு பல டிரைவர்கள் ஆட்டோக்களை நிறுத்தியுள்ளனர்.

மத்திய அரசின் அதிரடி சட்டம்... ஆட்டோ கட்டணம் தாறுமாறாக உயர்ந்தது... ஏன் தெரியுமா?

இதன் மூலம் சட்டத்திற்கு புறம்பாக இயக்கப்படும் ஆட்டோக்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது. ஆனால் இது வேறு விதமான பின்விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. பாட்னா நகர சாலைகளில் தற்போது குறைவான எண்ணிக்கையில்தான் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. ஆவணங்கள் அனைத்தையும் சரியாக வைத்திருப்பவர்கள் மட்டும்தான் ஆட்டோக்களை இயக்கி வருகின்றனர்.

மத்திய அரசின் அதிரடி சட்டம்... ஆட்டோ கட்டணம் தாறுமாறாக உயர்ந்தது... ஏன் தெரியுமா?

ஆனால் அவர்கள் பயணிகளிடம் அதிகப்படியான கட்டணத்தை கேட்கின்றனர். பொதுவாகவே ஆட்டோ டிரைவர்கள் பயணிகளிடம் கட்டண கொள்ளையை அரங்கேற்றுவதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்த சூழலில் தற்போது ஆட்டோக்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால், அதை பயன்படுத்தி கொண்டு பல டிரைவர்கள் அதிக கட்டணத்தை வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.

மத்திய அரசின் அதிரடி சட்டம்... ஆட்டோ கட்டணம் தாறுமாறாக உயர்ந்தது... ஏன் தெரியுமா?

பாட்னா மகளிர் கல்லூரி மாணவியான மன்ஷி சின்ஹா என்பவர், கடந்த திங்கள் கிழமையன்று அலம்கானிஜில் இருந்து காந்தி மைதான் வரை பயணிக்க 20 ரூபாயை கட்டணமாக செலுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ''முன்பு இதே தொலைவு பயணிக்க 12 ரூபாய் மட்டுமே கட்டணமாக செலுத்துவேன்'' என்றார்.

மத்திய அரசின் அதிரடி சட்டம்... ஆட்டோ கட்டணம் தாறுமாறாக உயர்ந்தது... ஏன் தெரியுமா?

ஆனால் வேறு வழி இல்லாததால் அதிக கட்டணம் செலுத்தி பயணிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதாக பயணிகள் தெரிவிக்கின்றனர். எனவே கட்டண கொள்ளையை அரங்கேற்றும் ஆட்டோ டிரைவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பயணிகள் வலியுறுத்தியுள்ளனர். அதே சமயம் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆட்டோ டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்டோ சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசின் அதிரடி சட்டம்... ஆட்டோ கட்டணம் தாறுமாறாக உயர்ந்தது... ஏன் தெரியுமா?

இதனிடையே மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு, மேற்கு வங்கம், ராஜஸ்தான், கேரளா, பஞ்சாப், மத்திய பிரதேசம் போன்ற பல்வேறு மாநில அரசுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதுதவிர குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் அபராத தொகைகள் குறைக்கப்பட்டுள்ளன. இதேபோல் தமிழகம் உள்பட மேலும் சில மாநிலங்களிலும் அபராத தொகைகள் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
New Motor Vehicles Act: Autorickshaw Drivers Charge Higher Fares. Read in Tamil
Story first published: Thursday, September 26, 2019, 15:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X