ஸ்கூட்டர் விலையே 15 ஆயிரம்தான்... அபராதத்தை கேட்டு அதிர்ச்சியில் உறைந்த இளைஞர்... எவ்வளவு தெரியுமா

வெறும் 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஸ்கூட்டருக்கு, புதிய விதிமுறைகளின்படி மிக கடுமையான அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஸ்கூட்டர் விலையே 15 ஆயிரம்தான்... அபராதத்தை கேட்டு அதிர்ச்சியில் உறைந்த வாலிபர்... எவ்வளவு தெரியுமா

மோட்டார் வாகன சட்டத்தை மத்திய அரசு தற்போது திருத்தியமைத்துள்ளது. இதில், போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராத தொகை முன்பு இருந்ததை காட்டிலும் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் அனைவரையும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற வைப்பதற்கான நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஸ்கூட்டர் விலையே 15 ஆயிரம்தான்... அபராதத்தை கேட்டு அதிர்ச்சியில் உறைந்த வாலிபர்... எவ்வளவு தெரியுமா

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரியின் தீவிர முயற்சியின் காரணமாகதான், மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. திருத்தியமைக்கப்பட்ட மோட்டார் வாகன சட்டம் கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

ஸ்கூட்டர் விலையே 15 ஆயிரம்தான்... அபராதத்தை கேட்டு அதிர்ச்சியில் உறைந்த வாலிபர்... எவ்வளவு தெரியுமா

எனவே போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகள் தற்போது ஒரே அடியாக உயர்ந்துள்ளன. மேற்கு வங்கம், ராஜஸ்தான், பஞ்சாப், மத்திய பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய 5 மாநிலங்கள் தவிர எஞ்சிய அனைத்து மாநிலங்களிலும் புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்துள்ளது. மேற்கண்ட 5 மாநிலங்கள் மட்டும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

ஸ்கூட்டர் விலையே 15 ஆயிரம்தான்... அபராதத்தை கேட்டு அதிர்ச்சியில் உறைந்த வாலிபர்... எவ்வளவு தெரியுமா

அபராத தொகைகள் மிக கடுமையாக இருப்பதால் சாதாரண வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுவார்கள் எனவும், இது ஊழலுக்கு வழி வகுத்து விடும் எனவும் மேற்கண்ட 5 மாநிலங்களும் அச்சம் தெரிவித்துள்ளன. ஆம், அபராத தொகைகள் உயர்த்தப்பட்டுள்ளதை காரணம் காட்டி, வாகன ஓட்டிகளிடம் போலீசார் வசூல் வேட்டையில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளும் இருக்கவே செய்கின்றன.

ஸ்கூட்டர் விலையே 15 ஆயிரம்தான்... அபராதத்தை கேட்டு அதிர்ச்சியில் உறைந்த வாலிபர்... எவ்வளவு தெரியுமா

இருந்தபோதும் டெல்லி, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் புதிய மோட்டார் வாகன சட்ட விதிமுறைகள் மிக கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் டெல்லியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு ஹரியானா மாநிலம் குருகிராம் போலீசார் புதிய விதிகளின்படி 23 ஆயிரம் ரூபாயை அபராதமாக விதித்துள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

ஸ்கூட்டர் விலையே 15 ஆயிரம்தான்... அபராதத்தை கேட்டு அதிர்ச்சியில் உறைந்த வாலிபர்... எவ்வளவு தெரியுமா

குருகிராம் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த சமயத்தில், டெல்லியை சேர்ந்த தினேஷ் மதன் என்ற இளைஞர் ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தார். அவர் ஹெல்மெட் அணியவில்லை. எனவே போலீசார் அவரை நிறுத்தி விசாரித்தனர். அப்போது லைசென்ஸ், ஆர்சி புக், மூன்றாம் நபர் காப்பீடு மற்றும் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் எதுவும் தினேஷ் மதனிடம் இல்லை என்பது தெரியவந்தது.

ஸ்கூட்டர் விலையே 15 ஆயிரம்தான்... அபராதத்தை கேட்டு அதிர்ச்சியில் உறைந்த வாலிபர்... எவ்வளவு தெரியுமா

இதுதவிர அவர் ஹெல்மெட் வேறு அணியவில்லை. எனவே மேற்கண்ட 5 விதிமுறை மீறல்களுக்கும் ஒன்றாக சேர்த்து ஒட்டுமொத்தமாக 23 ஆயிரம் ரூபாயை போலீசார் அவருக்கு அபராதமாக விதித்துள்ளனர். தினேஷ் மதனுக்கு எதற்காக 23 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது? என்ற தகவல்களை நீங்கள் கீழே காணலாம்.

ஸ்கூட்டர் விலையே 15 ஆயிரம்தான்... அபராதத்தை கேட்டு அதிர்ச்சியில் உறைந்த வாலிபர்... எவ்வளவு தெரியுமா

டிரைவிங் லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக 5 ஆயிரம் ரூபாய்

ஆர்சி புக் கொண்டு வராததற்காக 5 ஆயிரம் ரூபாய்

இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டியதற்காக 2 ஆயிரம் ரூபாய்

மாசு கட்டுப்பாட்டு விதிகளை மீறியதற்காக 10 ஆயிரம் ரூபாய்

ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டியதற்காக ஆயிரம் ரூபாய்

ஸ்கூட்டர் விலையே 15 ஆயிரம்தான்... அபராதத்தை கேட்டு அதிர்ச்சியில் உறைந்த வாலிபர்... எவ்வளவு தெரியுமா

ஆக மொத்தம் 23 ரூபாய் என்ற அபராத தொகையை கேட்டு தினேஷ் மதன் அதிர்ச்சியில் உறைந்து விட்டார். இதுகுறித்து தினேஷ் மதன் கூறுகையில், ''நான் கடுமையாக அதிர்ச்சியடைந்து விட்டேன். என்னால் இரவில் தூங்க கூட முடியவில்லை. ஏனெனில் இது சிறிய தொகை கிடையாது. நான் ஆவணங்களை கையில் வைத்திருக்கவில்லைதான். அவை அனைத்தும் வீட்டில் இருந்தன.

ஸ்கூட்டர் விலையே 15 ஆயிரம்தான்... அபராதத்தை கேட்டு அதிர்ச்சியில் உறைந்த வாலிபர்... எவ்வளவு தெரியுமா

இதை நான் போலீசாரிடமும் கூறினேன். ஆனால் வெறும் பத்தே நிமிடங்களில் அவற்றை இங்கு கொண்டு வர வேண்டும் என போலீசார் தெரிவித்தனர். நான் டெல்லியை சேர்ந்தவன். ஆனால் இந்த சம்பவம் நடந்ததோ குருகிராமில். அப்படி இருக்க வெறும் பத்தே நிமிடத்தில் என்னால் எப்படி ஆவணங்களை கொண்டு வர முடியும்?

ஸ்கூட்டர் விலையே 15 ஆயிரம்தான்... அபராதத்தை கேட்டு அதிர்ச்சியில் உறைந்த வாலிபர்... எவ்வளவு தெரியுமா

இதனை நான் போலீசாரிடமும் தெரிவித்தேன். ஆனால் அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அத்துடன் எனது ஸ்கூட்டர் சாவியை கேட்டனர். ஆனால் நான் தர மறுத்து விட்டேன். அதன்பின் போலீசார் உடனடியாக எனக்கு அபராதம் விதித்து பிரிண்ட் செய்யப்பட்ட ரசீதை வழங்கி விட்டனர். அத்துடன் எனது ஸ்கூட்டரையும் பறிமுதல் செய்து விட்டனர்.

ஸ்கூட்டர் விலையே 15 ஆயிரம்தான்... அபராதத்தை கேட்டு அதிர்ச்சியில் உறைந்த வாலிபர்... எவ்வளவு தெரியுமா

எனது ஸ்கூட்டரின் மதிப்பே வெறும் 15 ஆயிரம் ரூபாய்தான் (செகண்ட் ஹேண்ட்). இந்த ஸ்கூட்டரின் ஆர்சி புக் நகலை வாட்ஸ்அப் மூலமாக எனது வீட்டில் இருந்து பெற்று விட்டேன். ஆனால் அதற்குள்ளாக எனக்கு அபராதம் விதிக்கப்பட்டு விட்டது. எனக்கு அபராதம் விதித்த போலீஸ்காரர் சிறிது நேரம் காத்திருந்தால், அபராத தொகை சற்று குறைவாக இருந்திருக்கலாம்.

ஸ்கூட்டர் விலையே 15 ஆயிரம்தான்... அபராதத்தை கேட்டு அதிர்ச்சியில் உறைந்த வாலிபர்... எவ்வளவு தெரியுமா

எனவே அபராத தொகையை குறைக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன். அத்துடன் இனி மேல் எனது வாகனத்தின் ஆவணங்கள் அனைத்தையும் எப்போதுமே வைத்து கொள்கிறேன்'' என்றார். 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஸ்கூட்டருக்கு 23 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த சம்பவம் தற்போது இந்திய அளவில் கவனம் பெற்றுள்ளது.

ஸ்கூட்டர் விலையே 15 ஆயிரம்தான்... அபராதத்தை கேட்டு அதிர்ச்சியில் உறைந்த வாலிபர்... எவ்வளவு தெரியுமா

ஸ்கூட்டரின் விலையே 15 ஆயிரம் ரூபாய்தான் என்பதால், தினேஷ் மதன் அபராதம் செலுத்த மறுத்து, ஸ்கூட்டரை போலீசாரிடமே விட்டு விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக கூடுதல் தகவல்கள் வெளியாகும் பட்சத்தில், உங்களுக்கு தெரியப்படுத்துகிறோம். இந்த சம்பவம் தொடர்பான உங்கள் கருத்துக்களை கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
New Motor Vehicles Act Implemented: Gurugram Police Fines Delhi Scooter Rider Rs.23,000 For Traffic Violations. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X