உலக நாடுகள் பிரம்மிப்பு... யாரும் நினைத்து கூட பார்க்காத அதிசயத்தை நிகழ்த்திய மோடி! என்னனு தெரியுமா?

யாரும் நினைத்து கூட பார்க்காத அதிசயத்தை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நிகழ்த்தியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உலக நாடுகள் பிரம்மிப்பு... யாரும் நினைத்து கூட பார்க்காத அதிசயத்தை நிகழ்த்திய மோடி! என்னனு தெரியுமா?

உலகிலேயே சாலை பாதுகாப்பு மிகவும் மோசமாக இருக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சக தரவுகளின்படி பார்த்தால், இந்தியாவில் கடந்த 2018ம் ஆண்டில் மட்டும் 4,67,044 சாலை விபத்துக்கள் நடைபெற்றுள்ளன. இதில், 1.50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

உலக நாடுகள் பிரம்மிப்பு... யாரும் நினைத்து கூட பார்க்காத அதிசயத்தை நிகழ்த்திய மோடி! என்னனு தெரியுமா?

உலக சாலை புள்ளி விபரங்கள் 2018-ன்படி, உலகில் உள்ள 199 நாடுகளில், சாலை விபத்துக்கள் தொடர்பான மரணங்கள் அதிகமாக நிகழ்வது இந்தியாவில்தான். இந்தியா முதலிடம் வகிக்க, சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் அதற்கு அடுத்த இடங்களில் உள்ளன. மேலும் உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையும் நாம் கவலை கொள்ள வேண்டிய ஒன்றாக உள்ளது.

உலக நாடுகள் பிரம்மிப்பு... யாரும் நினைத்து கூட பார்க்காத அதிசயத்தை நிகழ்த்திய மோடி! என்னனு தெரியுமா?

உலக சுகாதார நிறுவனத்தின் சாலை பாதுகாப்பு 2018 பற்றிய உலக அறிக்கையில், உலகில் நடக்கும் சாலை விபத்துக்கள் தொடர்பான மரணங்களில், இந்தியாவின் பங்களிப்பு ஏறத்தாழ 11 சதவீதமாக உள்ளது என கூறப்பட்டுள்ளது. எனவே இந்தியாவில் சாலை பாதுகாப்பை மேம்படுத்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தீவிரமாக முயன்று வருகிறது.

உலக நாடுகள் பிரம்மிப்பு... யாரும் நினைத்து கூட பார்க்காத அதிசயத்தை நிகழ்த்திய மோடி! என்னனு தெரியுமா?

குறிப்பாக சாலை விபத்துக்கள் மற்றும் சாலை விபத்துக்களால் நிகழும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையை குறைப்பதில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி மிக தீவிரமாக இருக்கிறார். வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதே இந்தியாவில் சாலை விபத்துக்கள் அதிகமாக நடப்பதற்கு காரணமாக உள்ளது.

உலக நாடுகள் பிரம்மிப்பு... யாரும் நினைத்து கூட பார்க்காத அதிசயத்தை நிகழ்த்திய மோடி! என்னனு தெரியுமா?

எனவே வாகன ஓட்டிகள் அனைவரையும், போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற வைக்கும் விதமாக புதிய மோட்டார் வாகன சட்டத்தை, கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் மத்திய அரசு இந்தியாவில் அமல்படுத்தியது. இதில், போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகள் மிகவும் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன.

உலக நாடுகள் பிரம்மிப்பு... யாரும் நினைத்து கூட பார்க்காத அதிசயத்தை நிகழ்த்திய மோடி! என்னனு தெரியுமா?

இதன்படி குடி போதையில் வாகனங்களை இயக்குபவர்களுக்கான அபராத தொகை தற்போது 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த குற்றத்திற்கு இதற்கு முன்பு வெறும் 2,000 ரூபாய் மட்டுமே அபராத தொகையாக வசூலிக்கப்பட்டு வந்தது. இதேபோன்று சீட் பெல்ட் அணியாமல் பயணம் செய்பவர்களுக்கு முன்பு வெறும் 100 ரூபாய் மட்டுமே அபராதமாக விதிக்கப்பட்டது.

உலக நாடுகள் பிரம்மிப்பு... யாரும் நினைத்து கூட பார்க்காத அதிசயத்தை நிகழ்த்திய மோடி! என்னனு தெரியுமா?

ஆனால் மத்திய அரசு கொண்டு வந்த புதிய மோட்டார் வாகன சட்டத்தில், இதற்கான அபராத தொகை 1,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோன்று பல்வேறு வகையான போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராத தொகைகளும் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் இதற்கு வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

உலக நாடுகள் பிரம்மிப்பு... யாரும் நினைத்து கூட பார்க்காத அதிசயத்தை நிகழ்த்திய மோடி! என்னனு தெரியுமா?

அபராத தொகைகளை உயர்த்தியதற்கு, வாகன ஓட்டிகள் மட்டுமல்லாது, ஒரு சில மாநில அரசுகள் கூட கடும் எதிர்ப்புகளை பதிவு செய்தன. ஆனால் மத்திய அரசின் அதிரடி நடவடிக்கைக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. ஆம், புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்த முதல் 5 மாதங்களில் இந்தியாவில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை 10 சதவீதம் குறைந்துள்ளது.

உலக நாடுகள் பிரம்மிப்பு... யாரும் நினைத்து கூட பார்க்காத அதிசயத்தை நிகழ்த்திய மோடி! என்னனு தெரியுமா?

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி இந்த மகிழ்ச்சியான தகவலை கூறியுள்ளார். புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்ததில் இருந்து முதல் ஐந்து மாதங்களில், குஜராத், உத்தர பிரதேசம், ஜம்மு காஷ்மீர் மற்றும் சண்டிகர் ஆகிய மாநிலங்களில், சாலை விபத்துக்களின் எண்ணிக்கை 12-14 சதவீதம் குறைந்துள்ளது.

உலக நாடுகள் பிரம்மிப்பு... யாரும் நினைத்து கூட பார்க்காத அதிசயத்தை நிகழ்த்திய மோடி! என்னனு தெரியுமா?

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி பாராளுமன்றத்தில் இந்த தகவலை கூறியுள்ளார். 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தரவுகளை ராஜ்யசபாவில் அவர் வெளியிட்டார். இதில், 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கு (அபராத தொகைகள் உயர்த்தப்பட்ட மாதம்) முந்தைய 5 மாதங்களுடன் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை ஒப்பிடப்பட்டிருந்தது.

உலக நாடுகள் பிரம்மிப்பு... யாரும் நினைத்து கூட பார்க்காத அதிசயத்தை நிகழ்த்திய மோடி! என்னனு தெரியுமா?

இதன்படி 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை, டெல்லி, ஹரியானா ஆகிய மாநிலங்களில், சாலை விபத்துக்களின் எண்ணிக்கை முறையே 1.8 சதவீதமும், 1 சதவீதமும் குறைந்துள்ளன. ஆனால் அஸ்ஸாம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் இதே கால கட்டத்தில், விபத்துக்களின் எண்ணிக்கை முறையே 7.2 சதவீதமும், 4.9 சதவீதமும் உயர்ந்துள்ளது.

உலக நாடுகள் பிரம்மிப்பு... யாரும் நினைத்து கூட பார்க்காத அதிசயத்தை நிகழ்த்திய மோடி! என்னனு தெரியுமா?

அதே சமயம் மஹாராஷ்டிரா, சட்டீஸ்கர், ஆந்திர பிரதேசம் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கையானது முறையே 5.4 சதவீதமும், 4.7 சதவீதமும், 6.4 சதவீதமும், 3.4 சதவீதமும் குறைந்துள்ளது. மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டம் எதிரொலியால், இந்தியாவில் வரும் காலங்களில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை இன்னும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலக நாடுகள் பிரம்மிப்பு... யாரும் நினைத்து கூட பார்க்காத அதிசயத்தை நிகழ்த்திய மோடி! என்னனு தெரியுமா?

ஏனெனில் அபராத தொகைகள் மிக கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளதால், அதற்கு பயந்து கொண்டு வாகன ஓட்டிகள், போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்ற தொடங்கியுள்ளனர். எது எப்படியோ இந்தியாவில் நல்லது நடந்தால் சரி. உயிர்களை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக, எதிர்ப்புகளை பொருட்படுத்தாமல், அபராத தொகைகளை உயர்த்திய மத்திய அரசின் நடவடிக்கை பாராட்டுக்குரியது.

உலக நாடுகள் பிரம்மிப்பு... யாரும் நினைத்து கூட பார்க்காத அதிசயத்தை நிகழ்த்திய மோடி! என்னனு தெரியுமா?

இந்தியாவில் பெரும்பாலான வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை பின்பற்ற மாட்டார்கள் என்பது இந்த உலகமே அறிந்த ஒரு விஷயம்தான். இந்தியர்களின் இந்த செய்கைகளை, வெளிநாடுகளில் கிண்டலடிக்கும் நிலை காணப்படுகிறது. அத்துடன் விபத்துக்களால் அதிகம் பேர் உயிரிழப்பது, சர்வதேச அரங்கில் இந்தியாவிற்கு தலைகுனிவை ஏற்படுத்தும் ஒரு விஷயமாக உள்ளது.

உலக நாடுகள் பிரம்மிப்பு... யாரும் நினைத்து கூட பார்க்காத அதிசயத்தை நிகழ்த்திய மோடி! என்னனு தெரியுமா?

இப்படிப்பட்ட சூழலில்தான் மத்திய அரசின் அதிரடியால் இந்தியாவில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை குறைய தொடங்கியுள்ளது. சர்வதேச நாடுகள் மத்தியில் இது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தால், சர்வதேச அரங்கில் மத்திய அரசுக்கு பாராட்டுக்கள் குவியும் என்பதில் சந்தேகமில்லை.

மத்திய அரசு தற்போது செய்துள்ள சாதனை பார்ப்பதற்கு சாதாரணமாக தோன்றலாம். ஆனால் விபத்துக்களில் தங்களுக்கு விருப்பமானவரை பறிகொடுத்தவர்களுக்கு இந்த சாதனையின் மகத்துவம் நன்றாக புரியும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
5 Months Since New Motor Vehicles Act, Accidents Come Down By 10 Per cent, Says Road Transport And Highways Minister Nitin Gadkari. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X