பழைய வாகனத்தை நெடுஞ்சாலைக்கு எடுத்து செல்லும்முன் இதை தெரிஞ்சிக்கோங்க!! மத்திய அரசு எடுக்கும் புதிய நடவடிக்கை
பழைய வாகனங்களையும் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவரும் விதமாக மத்திய அரசு புதிய நடவடிக்கை ஒன்றை கொண்டு வருகிறது.
Recommended Video
மத்திய அரசின் அந்த புதிய நடவடிக்கை என்ன? என்பதை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் கடந்த சில வருடங்களில் ஏகப்பட்ட புதிய நெடுஞ்சாலைகள் போடப்பட்டுள்ளன. இதில் சில சாலைகளில் சில பகுதிகள் மழையால் பெயர்த்து கொண்டு வெளியே வந்தாலும், இவ்வாறு நெடுஞ்சாலைகளை புதியவை புதியவைகளாக போடுவதற்கு சுங்க சாவடிகளின் மூலமாக கிடைக்க பெறும் கட்டணங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன.

தற்சமயம் இந்தியாவில் நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு 30 கிமீ தொலைவிற்கும் ஒரு சுங்க சாவடிகள் உள்ளன. இதில் சிலவற்றை நீக்கி 60கிமீ-க்குள் எந்தவொரு சுங்க சாவடியும் இல்லாத வகையில் மாற்றம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக ஏற்கனவே நமது செய்தி தளத்தில் கூறியிருந்தோம். அப்போ சுங்க கட்டணம் இல்லையா என உடனே சந்தோஷப்பட்டு கொள்ளாதீர்கள்.

ஏனெனில் சுங்க சாவடிகளின் எண்ணிக்கையை குறைத்து கட்டணத்தை செலுவதற்காக வாகனங்கள் வரிசைக்கட்டி நிற்பதை தவிர்ப்பதே மத்திய அரசின் திட்டமாக உள்ளது. இன்று சுங்க சாவடிகளில் பெரும்பான்மையான வாகன ஓட்டிகள் 2019இல் இருந்து கட்டமாயமாக்கப்பட்டு வருகின்ற பாஸ்டேக்கை பயன்படுத்துகின்றனர். இதனால் சுங்க சாவடியில் பணிப்புரிவோர்க்கு வேலை மிகவும் குறைகிறது.

இருப்பினும் மத்திய அரசு இன்னும் அட்வான்ஸாக யோசித்து, சுங்க சாவடி இல்லாமலேயே கட்டணத்தை வசூலிக்கும் முடிவிற்கு வந்துள்ளது. இதற்காக 2 யோசனைகள் முன்பு ஆலோசனைக்கப்பட்டு வந்தன. அந்த இரு யோசனைகளாக மத்திய போக்குவரத்து & நெடுஞ்சாலை துறை நிதின் கட்கரி கூறியதாவது, ஒன்று, ஜிபிஎஸ் வாயிலாக வாகன ஓட்டிகளின் வங்கி கணக்குகளில் இருந்து கட்டணத்தை பெறுவது.

மற்றொன்று, சுங்க சாவடிகள் (சில) இருக்கும் இடத்தில் கேமிராக்களை பொருத்தி, வாகனங்களின் நம்பர் ப்ளேட்டை காட்சிப்படுத்தி அதன் மூலம் வாகன ஓட்டியின் தரவுகளை பெற்று கட்டணத்தை எடுப்பது. இதில் ஒன்று இன்னும் 1 மாத காலத்தில் இறுதி செய்யப்படும் என அப்போது மத்திய அமைச்சர் தெரிவித்திருந்தார். ஆனால் இந்த விஷயத்தில் மத்திய அரசு சற்று விரைவாகவே முடிவை எட்டியுள்ளது.

அதேபோல் இந்த முடிவும் முன்பு மேற்கூறப்பட்ட 2 யோசனைகளில் இருந்து சற்று வேறுப்பட்டதாக உள்ளது. அதாவது, ஜிபிஎஸ் வாயிலாக கட்டணத்தை பெறுவதுதான். ஆனால் ஓட்டுனரை கவனித்து அல்ல. அதற்கு மாற்றாக வாகனத்தின் நம்பர் ப்ளேட்டை சாட்டிலைட் உதவியுடன் கண்காணித்து சுங்க கட்டணத்தை வசூலிப்பதாகும்.

டேம்பர் ப்ரூஃபில் அதி-பாதுக்காப்பான பதிவெண் தட்டுகளாக (HSRPs) 2019இல் இருந்து நாட்டில் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு வாகனத்திலும் புதிய நம்பர் ப்ளேட்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. இந்த புதிய நம்பர் ப்ளேட்டின் மூலமாக வாகனத்தை பற்றிய அனைத்து தகவல்களையும் அரசாங்கத்தில் அமைக்கப்பட்ட நிர்வாக குழுவினரால் பெற முடியும்.

இந்த நம்பர் ப்ளேட்டையே சுங்க சாவடிகளை நீக்குவதில் மத்திய அரசு துருப்பு சீட்டாக எடுத்துள்ளது. இதனாலேயே சாலையில் இயங்கும் பழைய வாகனங்கள் அனைத்திலும் பழைய நம்பர் ப்ளேட்டை கழற்றி 2019இல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த புதிய நம்பர் ப்ளேட்டை மாற்றும் நடவடிக்கையில் இறங்கவுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தற்போது தெரிவித்துள்ளார் .

அதாவது, 2019ஆம் ஆண்டிற்கு முன்பாக வாங்கப்பட்ட அனைத்து வாகனங்களிலும் புதிய நம்பர் ப்ளேட் பொருத்தப்படலாம். இவ்வாறு வாகனத்தின் நம்பர் ப்ளேட்டை கண்காணித்து ஜிபிஎஸ் வாயிலாக கட்டணத்தை வசூலிக்கும் முறையில் நீங்கள் நெடுஞ்சாலையில் 30கிமீ தொலைவிற்கு மட்டுமே பயணித்திருந்தால், பாதி கட்டணத்தை செலுத்தினால் போதுமானது.

தற்சமயம் 60கிமீ தொலைவ நெடுஞ்சாலை பயணத்திற்கு முழு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இவ்வாறு சுங்க சாவடிகளின் எண்ணிக்கையை ஒவ்வொன்றாக குறைத்துக்கொண்டு வந்து, இறுதியில் சுங்க சாவடியே இல்லாத நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும் என்பதில் மத்திய அரசு முனைப்புடன் உள்ளது. சுங்க சாவடி இல்லையென்றால், நெடுஞ்சாலை பயணம் தொந்தரவுகள் இல்லாமல் விரைவானதாக இருக்கும்.
Note: Images are representative purpose only.


Click it and Unblock the Notifications








