இனி வீட்டு வாசலில் காரை நிறுத்தினாலும் பார்க்கிங் கட்டணம்... வருகிறது அரசின் புதிய திட்டம்???

வீட்டு வாசலில் வாகனங்களை நிறுத்தினாலும் பார்க்கிங் கட்டணம் செலுத்தும்விதமாக, புதிய பார்க்கிங் கட்டண திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் நடைமுறைக்குக் கொண்டு வர உள்ளது.

புதிய பார்க்கிங் கட்டண திட்டம்

வாகனம் வைத்திருப்பவரா நீங்கள்? வீட்டில் பார்க்கிங் வசதி இல்லாத காரணத்தால் உங்கள் வாகனத்தை உங்க வீட்டு வாசலிலேயே பார்க்கிங் செய்கிறீர்களா? அப்போ இனி நீங்க அரசுக்கு பார்க்கிங் கட்டணம் செலுத்தவேண்டி இருக்கும். ஆம் இந்த புதிய பார்க்கிங் கட்டண திட்டத்தின் மூலம், உங்களுடைய இரண்டு, மூன்று அல்லது நான்கு என எத்தனை சக்கர வாகனங்களாக இருந்தாலும் கட்டாயம் பார்க்கிங் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த புதிய திட்டத்தை மத்திய அரசு கொண்டு வர இருக்கிறது. இதனால், இனிமேல் நகரத்தின் எந்த சாலையிலும் உங்கள் வாகனத்தை இலவசமாக பார்க்கிங் செய்ய முடியாது.

புதிய பார்க்கிங் கட்டண திட்டம்

இந்த புதிய பார்க்கிங் கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை ஒரு தனியார் அமைப்பு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. அதன்படி, இத்திட்டத்தை அமல்படுத்த அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மேலும், இன்னும் சில மாதங்களில் இத்திட்டம் மாநில வாரியாக அமலுக்குக்கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெருகி வரும் மக்கள் தொகை, அதனால் நாளுக்கு நாளுக்கு அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கை நாட்டிற்கு பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தி வருகின்றன. அதன் ஒருபகுதியாக, பூதகரமாக கிளம்பியிருக்கிறது சுற்றுச்சூழல் மாசு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள்.

புதிய பார்க்கிங் கட்டண திட்டம்

மேலும், அதிகரித்து வரும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல், சாலை விபத்து உள்ளிட்ட சில பல்வேறு பிரச்னைகள் உருவெடுத்து வருகின்றன. மேலும், இது சம்பந்தப்பட்ட துறையைச் சார்ந்த அதிகாரிகளுக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்து வருகின்றது. இவற்றில் இருந்து தீர்வு காண்பது என்பது அவர்களுக்கு புரியாத புதிராகவே உள்ளது.

ஏற்கனவே, சாலை போக்குவரத்திற்காக பல்வேறு கடுமையான விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. இருப்பினும் இதனை சற்றும் கடைபிடிக்காத நாட்டின் குடிமகன்கள், அதனால் ஏற்படும் விபரீதங்களைச் சந்தித்து வருகின்றனர்.

புதிய பார்க்கிங் கட்டண திட்டம்

இந்நிலையில், சாலையில் போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணமாக இருக்கும் முறையற்ற வாகன பார்க்கிங் முறையை ஒழுங்குபடுத்தும் விதமாக புதிய பார்க்கிங் கட்டணம் திட்டம் அமலுக்குக் கொண்டுவரப்பட உள்ளது. அதன்படி, இந்த திட்டம் நடைமுறைக்கு வருமானால், சாலையில் மற்ற வாகனங்களுக்கும், பாதசாரிகளுக்கும் இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்படுவது தவிர்க்கப்படும்.

மேலும், கண்ட இடங்களில் காரை பார்க்கிங் செய்வதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும். இதைத்தொடர்ந்து, சாலையில் வாகனங்களை நிறுத்தும் முறையில் நல்ல முன்னேற்றத்தைக் காண முடியும். அதுமட்டுமின்றி, இத்திட்டத்தின் மூலம் அரசுக்கு கணிசமான அளவு வருவாய் ஈட்டமுடியும்.

புதிய பார்க்கிங் கட்டண திட்டம்

இதுகுறித்து யுடிடி-யின் கூடுதல் தலைமை செயலாளர் மஹேந்திரா ஜெயின் கூறியதாவது, "இந்த புதிய பார்க்கிங் கட்டண திட்டமானது சாலையில் முறையற்ற நிலையில், மற்ற வாகனங்களுக்கு இடையூறாக பார்க் செய்யப்படுவதைத் தவிர்க்கும் விதமாக கொண்டுவரப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் வசூலிக்கப்படும் கட்டண தொகையை நாட்டின் வளர்ச்சிப் பாதைக்காக பயன்படுத்தப்பட உள்ளது.

புதிய பார்க்கிங் கட்டண திட்டம்

அதன்படி, நகரப்பகுதியில் உள்ள முக்கிய சாலைகளை மேம்படுத்தவும், பாதசாரிகளுக்கான வசதியை ஏற்படுத்தி தரவும் பயன்படுத்தப்படும். இதுதவிர, பொதுமக்கள் அதிகம் புழங்கக்கூடிய இடங்களில் பலவாகனங்களைப் பார்க்கிங் செய்யும் அளவிற்கு மல்டி பார்க்கிங் இடவசதி ஏற்படுத்தப்படும்" என்றார்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
New Rule Parking Even In Front Of Your Home May No Longer Be Free. Read In Tamil.
Story first published: Friday, February 15, 2019, 18:38 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X