கோவிலுக்கு வந்த எல்லார் கண்ணும் பைக் மேல தான்! சுஸுகி ஹயபுஸா பைக்கை வாங்கியவர் வீட்டுக்கு போய் சுத்தி போடனும்!
சுஸுகி ஹயபுஸா (Suzuki Hayabusa) போன்றதான சூப்பர்பைக்கை நேரில் காண்பதே நம்மில் நிறைய பேருக்கு கனவாக இருக்கும் சூழலில், இத்தகைய விலையுயர்ந்த பைக்கை வாங்குவோரும் நம் நாட்டில் நிறைய பேர் இருக்க தான் செய்கின்றனர். குறிப்பாக, இளம் வயதிலேயே அதிக வருவாயை ஈட்டும் இளைஞர்கள் மத்தியில் ஹயபுஸா பைக்கை வாங்குவது ஒரு டிரெண்ட்டாக மாறி வருகிறது. அவ்வாறு, வெள்ளை நிறத்தில் சுஸுகி ஹயபுஸா பைக்கை வாங்கிய இளைஞர் ஒருவர் அதனை கோவிலுக்கு கொண்டு சென்று பூஜை செய்தது பார்ப்போரை வசீகரித்துள்ளது.
புதியதாக வாங்கும் வாகனங்களை இறைவன் தந்த பரிசாக பார்க்கும் வழக்கம் நம் இந்திய மக்களிடையே கொஞ்சம் அதிகம் என்றுதான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு வருடமும் ஆயுத பூஜை அன்று வாகனத்தை கழுவி சுத்தம் செய்து, மாலை அணிவித்து வணங்குவது மட்டுமின்றி, புதியதாக ஏதேனும் வாகனத்தை வாங்கினால் அதனை முதலாவதாக கோவிலுக்கு கொண்டு சென்று பூஜை போடும் பழக்கமும் நம்மிடையே காலங்காலமாக உள்ளது.

அவ்வாறுதான், கர்நாடகாவின் மைசூரை சேர்ந்த இந்த ஹயபுஸா பைக் ஓனர் பைக்கை ஷோரூமில் இருந்து டெலிவிரி பெற்றதும் அக்ரஹாரா என்கிற பகுதியில் உள்ள கோடி ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி திருக்கோயிலுக்கு கொண்டு சென்று அர்ச்சகர் முன்னிலையில் மாலை அணிவித்து பூஜை செய்துள்ளார். பல இலட்ச ரூபாய் விலை கொண்ட பைக்கிற்கு குடும்பத்தார் உடன் கோவிலுக்கு கொண்டு சென்று பூஜை செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், இந்த வெள்ளை நிற சுஸுகி ஹயபுஸா பைக்கிற்கு பின்னால் சிவப்பு நிறத்தில் ஃபோஸ்வேகன் போலோ ஜிடி (Volkswagen Polo GT) கார் ஒன்று நிற்பதை காணலாம். இவ்வாறு, தினந்தோறும் நிறைய எண்ணிக்கையிலான வாகனங்கள் இந்த ஆஞ்சநேயா கோவிலில் பூஜை செய்யப்படுவதால், இது நம்ம சென்னை பாடிகார்ட் முனீஸ்வரர் கோவில் போன்று உள்ளது.

ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடி கார் தற்சமயம் விற்பனையில் இல்லை. ஆதலால், வீடியோவில் காட்சித்தரும் சிவப்பு நிறத்திலான போலோ ஜிடி கார் ஆனது செகண்ட்-ஹேண்ட் காராகவே இருக்க கூடும். சுஸுகி ஹயபுஸாவை பற்றி சொல்ல வேண்டுமென்றால், உலகளவில் மிக பிரபலமான சூப்பர் பைக்குகளுள் இதுவும் ஒன்றாகும். பாலிவுட் (Bollywood) திரைப்படங்களில் காட்சி தர ஆரம்பித்த பிறகு இந்தியாவிலும் ஹயபுஸாவிற்கு என குறிப்பிட்ட ரசிகர் கூட்டம் உருவானது.
தற்சமயம் இந்தியாவில் விற்பனையில் இருப்பது 3ஆம் தலைமுறை சுஸுகி ஹயபுஸா ஆகும். இதனை கடந்த 2021ஆம் ஆண்டில் சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்தியாவில் ஸ்டாண்டர்ட் வேரியண்ட்டில் ஹயபுஸா பைக் விற்பனை செய்யப்படுகிறது. இது இல்லாமல், கடந்த 2024இல் இருந்து ஆனிவர்சரி செலெபிரேஷன் எடிசனிலும் இந்த பைக் விற்பனை செய்யப்படுகிறது.
இதில் ஸ்டாண்டர்ட் வேரியண்ட்டில் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.16.90 லட்சம் மற்றும் ஆனிவர்சரி செலபிரேஷன் எடிசனில் ரூ.17.70 லட்சம் ஆகும். சுஸுகி ஹயபுஸா பைக்கில் பொருத்தப்படும் 1340சிசி, லிக்யுடு-கூல்டு, இன்லைன்-4 சிலிண்டர் என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. 266 கிலோ எடை கொண்ட ஹயபுஸா பைக்கில் தரையில் இருந்து ரைடர் இருக்கை 800மிமீ உயரத்தில் வழங்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சுஸுகி ஹயபுஸா பைக்குகளை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பதற்கு இவ்வாறான வீடியோக்களே சாட்சியாகும். மிகுந்த செல்வந்தர்கள் மட்டுமே ஒரு சமயத்தில் ஹயபுஸா போன்றதான விலையுயர்ந்த பைக்குகளை வாங்கி வந்த நிலையில், தற்போது அப்பர் மிடில்-கிளாஸ் மக்களும் இவ்வாறான பைக்குகளை அதிகம் வாங்க ஆரம்பித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications








