சூப்பர் ஸ்டாரே வந்து"லெட்சுமி ஸ்டார்ட் ஆகிடுன்னு" சொன்னாலும் நடக்காது!சரக்கு அடிச்சுட்டு கார் ஓட்டுனா ஆப்பு!

வாகனங்களில் டிரைவர் போதையில் இருந்தால எச்சரித்து காரை நிறுத்தும் கருவி ஒன்று அமெரிக்காவில் உள்ள கார்களுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது குறித்த விபரங்களை காணலாம் வாருங்கள்.

சூப்பர் ஸ்டாரே வந்து

1935ம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் படிக்காதவன் திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் கார் டிரைவராக இருப்பார். இந்த திரைப்படத்தில் அவர் ஓட்டும் காருக்கு லக்ஷ்மி என பெயர் வைத்திருப்பார். அந்த திரைப்படத்தின் காட்சியின்படி அவர் வைத்திருக்கும் கார் அவர் கெட்டதுக்காக காரை எடுக்க நினைக்கும் போது எல்லாம் கார் ஸ்டார்ட் ஆகாது. ஆனால் அவர் நல்ல விஷயங்களுக்கு காரை எடுக்க நினைத்தால் கார் ஸ்டார்ட் ஆகிவிடும்.

சூப்பர் ஸ்டாரே வந்து

இப்படியான ஒரு அம்சம் காரில் உண்மையிலேயே இருக்கும் என சிறு வயதில் அந்த படத்தை பார்த்த பலரும் நினைத்திருப்பர். ஆனால் அன்றைய காலகட்டத்தில் இருந்த தொழிற்நுட்பத்தில் இது எல்லாம் சாத்தியமே இல்லை. இது வெறும் சினிமாவிற்காக மக்கள் ரசிப்பதற்காக கொண்டு வரப்பட்டது தான். ஆனால் இந்த தொழிற்நுட்பம் அன்று வேண்டுமானால் சாத்தியமாகாமல் இருந்திருக்கலாம். ஆனால் இன்று சாத்தியம் தான்.

சூப்பர் ஸ்டாரே வந்து

இன்று கார்களில் டிரைவர் சோர்வாக தூக்க கலக்கத்துடன் இருப்பதை கண்காணிக்கும் கருவி வந்துவிட்டது. இப்படியாக டிரைவர் தூக்க கலக்கத்துடன் இருந்தால் உடனடியாக எச்சரிக்கை அலாரம் அடிக்கும்படி பாதுகாப்பு கருவிகள் எல்லாம் இன்று இந்திய கார்களில் வந்துவிட்டன. அதன்படி அமெரிக்காவில் தயாராகும் பல கார்களில் டிரைவர் மது போதையில் இருக்கிறாரா என்பதை கண்காணிக்கும் கருவிகள் இருக்கிறது.

சூப்பர் ஸ்டாரே வந்து

இந்த கருவிகள் அந்நாட்டில் தற்போது உயர் ரக கார்களில் மட்டும் பொருத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்நாட்டின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் தற்போது ஒரு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

சூப்பர் ஸ்டாரே வந்து

அதன்படி இனி அந்நாட்டின் வெளியாகும் எல்லா கார்களிலும்,எல்லா வேரியன்ட்களிலும் டிரைவர் இந்த மது போதையில் இருப்பதை கண்காணிக்கும் கருவி கட்டாயம் இருக்கவேண்டும் என கூறியுள்ளது.

சூப்பர் ஸ்டாரே வந்து

இதன் முக்கியமான நோக்கம் விபத்தை குறைப்பது தான். உலகம் முழுவதும் நடக்கும் விபத்துக்களுக்கு முக்கியமான காரணம் மது போதையில் வாகனம் ஓட்டுவது தான் முக்கியமான காரணமாக கூறப்படுகிறது. குறிப்பாக கிறிஸ்துமஸ் புத்தாண்டு காலங்களில் மது போதையால் நடக்கும் விபத்துக்கள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. அமெரிக்காவில் மட்டும் கடந்த 2020ம் ஆண்டு மது போதை விபத்தால் 11 ஆயிரம் பேர் மரணமடைந்துள்ளனர்.

சூப்பர் ஸ்டாரே வந்து

படிக்காதவன் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த், லெட்சுமி என்ற காரை பயன்படுத்தும் போது எப்படி அவர் கெட்ட விஷயங்களை செய்ய நினைக்கும் போது கார் ஸ்டார்ட் ஆகாதோ அதே போல இந்த டிரைவர் மது போதையில் இருப்பதை அறிந்தால் கார் உடனடியாக காரில் எச்சரிக்கை அலாரம் ஒலித்து காரின் வேகம் குறைந்து, ஒரு கட்டத்தில் கார் நின்றுவிடும்.

சூப்பர் ஸ்டாரே வந்து

இப்படியாக டிரைவர் மது போதையில் இருப்பதை அவரது முகத்தை கண்காணித்து அதை வைத்தே டிடெக்ட் செய்துவிடும். கிட்டத்தட்ட டிரைவர் சோர்வாக இருக்கிறாரா என்பதை எந்த தொழிற்நுட்பத்தில் கண்காணிக்கிறதோ அதே தொழிற்நுட்பத்தில் தான் இதுவும் நடக்கிறது. இந்த தொழிற்நுட்பம் இந்திய கார்களுக்கு வந்தால் எப்படி இருக்கும்? இந்தியாவில் விபத்துக்களை குறைக்க இந்த தொழிற்நுட்பம் உதவுமா? உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
New technology prevent drunk drivers to drive a car
Story first published: Wednesday, September 21, 2022, 15:22 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X