இன்னும் 15 நாள் தான் டோல் கேட்டை எல்லாம் தூக்க போறாங்க! அடுத்த அதிரடிக்கு தயாராகும் மத்திய அரசு!
இந்தியாவில் உள்ள சுங்கசாவடிகள் குறித்து அடுத்த 15 நாளில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகவுள்ளதாக அமைச்சர் நிதின்கட்கரி கூறியுள்ளார். இந்திய மக்களுக்கு டோல் கேட்கள் மூலம் சுங்க சாவடிகள் அமைப்பது மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. இந்த பிரச்சனைகளுக்கு முற்றி புள்ளி வைக்கும் வகையில் புதிய அறிவிப்புகள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் ஏற்ட்டுள்ளது. மத்திய அமைச்சர் சொன்ன புதிய அறிவிப்புகள் என்ன? எப்பொழுது இது வெளியாகும்? முழுமையான விபரங்களை காணலாம் வாருங்கள்.
சமீபத்தில் மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்கரி ஊடகங்கள் மத்தியில் பேசினார். அப்பொழுது அடுத்த 1 நாளில் இந்தியாவில் புதிய டோல் பாலிசி கொண்டுவர இருப்பதாக தெரிவித்தார். இந்த டோல்கேட் பாலிசி அமலுக்கு வந்துவிட்டால் இந்தியாவில் உள்ள சுங்கசாவடிகள் குறித்து யாரும் எந்த விதமான புகாரும் சொல்ல முடியாத அளவிற்கு சிறப்பாக மாறிவிடும் என தெரிவித்துள்ளார். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

புதிய டோல்கேட் பாலிசி வரும் மே மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இதில் பல்வேறு முக்கிய மாற்றங்கள் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. தற்போது இருக்கும் சுங்க கட்டண வசூல் முறையில் உள்ள பிரச்சனைகள் எல்லாம் இந்த பாலிசியின் கீழ் தீர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல் தொடர்ந்து ஏறிக்கொண்டே போகும் சுங்க கட்டண முறைகளிலும் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சுங்க சாவடிகளில் இனி வாகனம் கடந்து செல்வதற்காக வருடாந்திரம், மற்றும் லைஃப் டைம் பாஸ் ஒன்றை மத்திய அரசு அறிமுகப்படுத்தப்போவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்த அறிவிப்பு இந்த பாலிசியில் இடம் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. நமக்கு கிடைத்த தகவலின் படி லைஃப் டைம் பாஸ் தற்போது வழங்கப்பட மாட்டாது எனவும் வருடாந்திர பாஸ் குறித்த அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது எனவும் தெரிகிறது.

மேலும் ஏற்கனவே மத்திய அரசு திட்டத்தில் வைத்திருக்கும் சாட்டிலைட் டிராக்கிங் அடிப்படையிலான சுங்க கட்டண வசூல் முறையை அமலுக்கு கொண்டு வருவது குறித்த அறிவிப்புகளும் வெளியாக வாய்ப்பு உள்ளது. இதனால் சுங்கசாவடிகள் முழுவதும் அப்புறப்படுத்தப்பட்டு வாகனங்கள் எந்த இடத்தில் தேசிய நெடுஞ்சாலைக்குள் நுழைகின்றன. எந்த இடத்தில் வெளியேறுகிறது? எவ்வளவு தூரம் பயணித்துள்ளது? என்ன வகையான வாகனம் என்பதை வைத்து தானியங்கியாக சுங்க கட்டணம் கணக்கிடப்பட்டு நேரடியாக வாகன உரிமையாளரின் வங்கி கணக்கிலிருந்து வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வாகனங்களை கண்காணிக்க ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். இந்த கேமராக்கள் வாகனத்தின் நம்பர் பிளேட்டை புகைப்படம் எடுத்து கண்டறியும் திறன் கொண்டவையாக இருக்கும். இந்த கேமராக்கள் உதவி மூலமும் நேரடியாக பண வசூல் நடக்கும். இதனால் வாகன ஓட்டிகள் குறைவான தூர பயணத்திற்கு அதிக கட்டணம் செலுத்த தேவையில்லை. எவ்வளவு தூரம் பயணித்துள்ளார்களோ அதற்கு மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும் என்ற சூழ்நிலை உருவாகும்.
நீண்ட ஆண்டுகளாக சுங்க சாவடியில் அதிகமான கட்டணம் வசூலிக்கப்படுவதாக மக்கள் மத்தியில் குற்றச்சாட்டு இருக்கிறது. இந்த பிரச்சனையை சரி செய்வதற்காக இந்த புதிய பாலிசியை மத்திய அரசு கொண்டு வருகிறது. இதனால் நிச்சயம் மிகப்பெரிய அளவில் சுங்க கட்டண வசூல் முறையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இது நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சுங்கசாவடி கட்டண முறையில் பல்வேறு சிக்கல்கள் இருக்கிறது. இதனால் மக்கள் நீண்ட ஆண்டுகளாக பிரச்சனைகளை சந்தித்து வரும் நிலையில் மத்திய அரசின் இந்த நடவடிக்கை வரவேற்க்க தக்கது தான்.ஆனால் இதனால் சுங்கசாவடி கட்டணம் பெரிய அளவில் குறையுமா என்றால் கேள்வி குறிதான். என்ன நடக்கிறது என்பதை நாம் பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








