சுங்கசாவடிகளில் இன்று முதல் கட்டண குறைப்பு! ரூ200 செலுத்த வேண்டிய இடத்தில் ரூ125 செலுத்தினால் போதும்!
இன்று முதல் சுங்கசாவடிகளில் ஃபாஸ்ட்டேக் கார்டு இல்லாமல் பயணிப்பவர்கள் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தினால் குறைவான கட்டணம் செலுத்தினால் போதும் என்ற நடை முறை அமலுக்கு வந்துள்ளது. சுங்கசாவடிகளில் டிஜிட்டல் பண பரிவர்த்ததனைகளை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியா முழவதும் சுங்கசாவடிகளை கடந்து செல்லும் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் செலுத்த ஃபாஸ்ட் டேக் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஃபாஸ்ட்டேக் கார்டில் முன்னரே ரீசார்ஜ் செய்து வைத்துக்கொண்டால் சுங்கசாவடியில் ஃபாஸ்ட்டேக் கார்டை ஸ்கேன் செய்து நீங்கள் ரீசார்ஜ் செய்து வைத்த பணத்திலிருந்து கட்டணம் கழிக்கப்படும்.

கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் இந்தியாவில் சுங்கசாவடிகளில் தனிநபர் வாகனங்கள் அதாவது கார், ஜீப், வேன் போன்ற வாகனங்கள் கடந்து செல்வதற்காக வருடாந்திர பாஸ் முறை அமல்படுத்தப்பட்டது. இதன்படி வருடம் ரூ3000 செலுத்தினால் போதும் அதன் மூலம் 200 சுங்கசாவடிகளை கடந்து செல்ல ஃபாஸ்டேக் கார்டில் வருடாந்திர பாஸ் முறையை ஆக்டிவேட் செய்து கொள்ள முடியும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்க சாவடிகளில் மட்டுமே இது பொருந்தும்.
இந்நிலையில் ஃபாஸ்ட்டேக் கார்டு இல்லாத வாகன ஓட்டிகள் இரு மடங்கு சுங்க கட்டணத்தை செலுத்த வேண்டிய சூழ்நிலை இதுவரை இருந்தது. இந்தியாவில் உள்ள 98 சதவீத வாகன ஓட்டிகளிடம் ஃபாஸ்ட்டேக் கார்டு இருக்கிறது. ஒரு சிலரிடம் மட்டுமே இல்லை. அவர் சுங்கசாவடியை கடக்க அதிக கட்டணத்தை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இனி ஃபாஸ்ட்டேக் கார்டு இல்லாமல் முழு கட்டணத்தை செலுத்த முயற்சிக்கும் நபர்கள் இன்று முதல் சுங்கசாவடிகளில் அந்த கட்டணத்தை டிஜிட்டல் முறையில் செலுத்தினால் 2 மடங்கு தேவையில்லை 1.25 மடங்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 98 சதவீதமான மக்கள் ஃபாஸ்ட்டேக் பயன்படுத்துவதால் அது டிஜிட்டல் பரிவர்த்தனையாக மாறிவிடுகிறது.
பாக்கி உள்ள 2 சதவீத மக்களிடமிருந்து வசூலிக்கும் பணம் நேரடி பணமாக இல்லாமல் டிஜிட்டல் பணமாக இருக்கவே இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் இனி ஃபாஸ்ட்டேக் கார்டு இல்லாமல் பணம் செலுத்து நபர்கள் யூபிஐ, கார்டு மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்தால் குறைவான கட்டணத்தை செலு்ததினால் போதும்.

உதாரணமாக சாதாரணமாக ஒரு வாகனத்திற்கு ஃபாஸ்ட் டேக் கார்டு மூலம் ரூ100 கட்டணமாக இருந்தால் ஃபாஸ்ட்டேக் கார்டு இல்லாத நபர்களிடம் ரூ200 கட்டணம் வசூலிக்கப்படும். இது இனி கேஷாக வழங்கினால் மட்டுமே ரூ200 வசூலிக்கப்படும். அதே டிஜிட்டல் பரிவர்த்தனையில் பணம் செலுத்தினால் ரூ125 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பலர் பலன்பெறப்போகின்றனர். நீண்ட நாட்களாக மக்கள் பலர் அதிகமான கட்டணம் செலுத்தி அவதிப்பட்டு வந்த நிலையில் அதற்கு ஒரு தீர்வாக இருக்கிறது. ஃபாஸ்ட் டேக் கார்டு வைத்திருப்பவர்கள் ரீசார்ஜ் இல்லாத நிலையில் அவசரத்திற்கு சுங்கசாவடியை கடக்க அதிக கட்டணம் செலுத்தி வந்தனர். அந்த பாரம் தற்போது குறைந்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சுங்கசாவடிகளில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை அதிகரிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதனால் நிச்சயம் மக்களுக்கு பலன் அளிக்கும் பெரிய அளவில் இல்லாவிட்டாலும் குறைவான எண்ணிக்கையில் உள்ள மக்களையும் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு வரவைக்க இந்த முறை நிச்சயம் உதவியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications









