சொகுசு கார்களில் ஆடம்பரம் காட்டாத ரிஷி சுனக்!! புதிய பிரிட்டன் பிரதமரின் லக்சரி கார்கள் லிஸ்ட்...

புதிய பிரிட்டன் பிரதமராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ள ரிஷி சுனக் வைத்துள்ள லக்சரி கார்களுள் முக்கியமான சிலவற்றை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

சொகுசு கார்களில் ஆடம்பரம் காட்டாத ரிஷி சுனக்!! புதிய பிரிட்டன் பிரதமரின் லக்சரி கார்கள் லிஸ்ட்...

1980இல் பிரிட்டனின் சவுதாம்ப்டன் நகரத்தில் பிறந்து தற்போது அந்த நாட்டின் பிரதமராக அரியணையில் ஏறி இருப்பவர் ரிஷி சுனக். இந்திய-ஆப்பிரிக்க பின்புலத்தை கொண்ட யாஷ்விர் சுனக் மற்றும் உஷா தம்பதியினருக்கு பிறந்த இவரின் தாத்தா மற்றும் பாட்டி சுதந்திரம் வாங்குவதற்கு முன் இருந்த ஒருங்கிணைந்த இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள்.

சொகுசு கார்களில் ஆடம்பரம் காட்டாத ரிஷி சுனக்!! புதிய பிரிட்டன் பிரதமரின் லக்சரி கார்கள் லிஸ்ட்...

1960ஆம் ஆண்டுக்கு பிறகு ரிஷி சுனக்கின் தாத்தாவும் பாட்டியும் கென்யாவுக்கு குடிபெயர, ரிஷி சுனக்கின் தந்தை யாஷ்விர் சுனக் பிரிட்டனில் தேசிய சுகாதார மையத்தில் சேர்கிறார். தாய் உஷாவும் பிரிட்டனில் ஒரு மருந்தகம் நடத்தி வந்தார். தற்சமயம் 42 வயதாகும் ரிஷி சுனக், உலகளவில் புகழ்பெற்ற வின்செஸ்டர் கல்லூரி மற்றும் பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகங்களில் தனது கல்லூரி படிப்புகளை மேற்கொண்டவர்.

சொகுசு கார்களில் ஆடம்பரம் காட்டாத ரிஷி சுனக்!! புதிய பிரிட்டன் பிரதமரின் லக்சரி கார்கள் லிஸ்ட்...

கல்லூரியை முடித்த பின்னர் பிரிட்டன் அரசின் பல்வேறு துறைகளில் பல்வேறு உயர் பொறுப்புகளை வகித்துள்ள ரிஷி சுனக்கிடம் தற்சமயம் லேண்ட் ரோவர் டிஸ்கவரி, ஜாகுவார் எக்ஸ்.ஜே மற்றும் ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் எம்கே6 ஜிடிஐ என 3 பிரபலமான லக்சரி கார்கள் உள்ளன. அவற்றை பற்றிய விரிவான விபரங்கள்...

சொகுசு கார்களில் ஆடம்பரம் காட்டாத ரிஷி சுனக்!! புதிய பிரிட்டன் பிரதமரின் லக்சரி கார்கள் லிஸ்ட்...

லேண்ட் ரோவர் டிஸ்கவரி

ரிஷி சுனக்கின் கேரேஜில் உள்ள ஆற்றல்மிக்க எஸ்யூவி கார் ஆகும். பின்பக்கத்தில் நிலையான பனோராமிக் கண்ணாடி சன்ரூஃப்-ஐயும், முன்பக்கத்தில் ஸ்லைடிங் பனோராமிக் சன்ரூஃப்-ஐயும் அசரடிக்கக்கூடிய அம்சங்களாக டிஸ்கவரி காரில் லேண்ட் ரோவர் நிறுவனம் வழங்குகிறது. இவ்வாறு சவுகரியத்தில் மட்டுமில்லாமல், வலிமையான என்ஜினினாலும் டிஸ்கவரி அறியப்படுகிறது.

சொகுசு கார்களில் ஆடம்பரம் காட்டாத ரிஷி சுனக்!! புதிய பிரிட்டன் பிரதமரின் லக்சரி கார்கள் லிஸ்ட்...

இந்த லேண்ட் ரோவர் எஸ்யூவி காரில் 3.0 லிட்டர் 6-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் மூலமாக அதிகப்பட்சமாக 355 எச்பி வரையிலான இயக்க ஆற்றலை பெற முடியும். இந்த எஸ்யூவி காரில் 0வில் இருந்து 96kmph வேகத்தை குறைந்தப்பட்சமாக வெறும் 7.6 வினாடிகளில் எட்டிவிட முடியும். காரின் டாப்-ஸ்பீடு மணிக்கு 193கிமீ ஆகும்.

சொகுசு கார்களில் ஆடம்பரம் காட்டாத ரிஷி சுனக்!! புதிய பிரிட்டன் பிரதமரின் லக்சரி கார்கள் லிஸ்ட்...

ஜாகுவார் எக்ஸ்.ஜே

பிரிட்டனில் உருவாக்கப்படும் அதி செயல்திறன்மிக்க ஜாகுவார் தயாரிப்புகளுள் ஒன்று. குறிப்பாக, பிரிட்டனில் ஜாகுவார் கார்கள் மிக பிரபலமானவைகளாக விளங்குகின்றன. இதனாலேயே ஜாகுவார் கார்களின் விலை அங்கு அதிகமாக உள்ளதால், ரிஷி சுனக் வைத்திருக்கும் மிகவும் விலைமிக்க கார்களுள் ஒன்று ஜாகுவார் எக்ஸ்.ஜே ஆகும்.

சொகுசு கார்களில் ஆடம்பரம் காட்டாத ரிஷி சுனக்!! புதிய பிரிட்டன் பிரதமரின் லக்சரி கார்கள் லிஸ்ட்...

பிரிட்டனில் இந்த ஜாகுவார் காரின் ஆரம்ப விலை 76,995 டாலர்களாக உள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ரூ.63.54 லட்சம். லேண்ட் ரோவர் டிஸ்கவரிக்கு இணையாக இந்த காரிலும் 3 லிட்டர் வி6 டர்போசார்ஜ்டு என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் மூலமாக அதிகப்பட்சமாக 225எச்பி வரையிலான இயக்க ஆற்றலை கார் பெற முடியும். ஜாகுவார் எக்ஸ்.ஜே மாடலின் டாப்-ஸ்பீடு 254kmph ஆகும்.

சொகுசு கார்களில் ஆடம்பரம் காட்டாத ரிஷி சுனக்!! புதிய பிரிட்டன் பிரதமரின் லக்சரி கார்கள் லிஸ்ட்...

ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் எம்கே6 ஜிடிஐ

உலகளவில் பிரபலமான ஃபோக்ஸ்வேகன் ஹேட்ச்பேக் கார்களுள் ஒன்று கோல்ஃப் எம்கே6 ஆகும். இதற்கு முக்கிய காரணம், இந்த காரின் குறைவான விலையும், அதேநேரம் ஆற்றல்மிக்க என்ஜினும் ஆகும். பிரிட்டன் நாட்டில் கோல்ஃப் எம்கே6 காரின் விலைகள் வெறும் 29 ஆயிரம் டாலர்களில் இருந்து ஆரம்பிக்கின்றன. இந்திய ரூபாயில் பார்த்தோமேயானால், இதன் மதிப்பு ரூ.24 லட்சம் மட்டுமே.

சொகுசு கார்களில் ஆடம்பரம் காட்டாத ரிஷி சுனக்!! புதிய பிரிட்டன் பிரதமரின் லக்சரி கார்கள் லிஸ்ட்...

பிரிட்டன் பொருளாதாரத்தை பொருத்தவரையில் விலை இவ்வளவு குறைவாக இருப்பினும், இந்த காரில் ஆற்றல்மிக்க 2 லிட்டர் இன்லைன் 4-சிலிண்டர் டர்போ என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜினில் இருந்து அதிகப்பட்சமாக 207 எச்பி வரையிலான இயக்க ஆற்றலை பெறலாம். இதனாலேயே இந்த காரில் என்ஜினை ஸ்டார்ட் செய்து 96kmph வேகத்தை குறைந்தப்பட்சமாக வெறும் 6.9 வினாடிகளில் அடைந்துவிட முடியும். ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் எம்கே6 காரை அதிகப்பட்சமாக மணிக்கு 240கிமீ வேகத்தில் இயக்கி செல்ல முடியும்.

சொகுசு கார்களில் ஆடம்பரம் காட்டாத ரிஷி சுனக்!! புதிய பிரிட்டன் பிரதமரின் லக்சரி கார்கள் லிஸ்ட்...

இவ்வாறான ஆற்றல்மிக்க கார்களையும், அதேநேரம் எளிமையான கார்களையும் வைத்துள்ள ரிஷி சுனக் முந்தைய பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இடத்தை அலங்கரிக்க உள்ளார். பிரிட்டனின் செல்வ செழிப்பான மனிதர்கள் அட்டவணையை சமீபத்தில் அங்குள்ள ஓர் பிரபலமான செய்தி நிறுவனம் வெளியிட்டது. அதில் மொத்தம் 730 மில்லியன் யூரோக்கள் உடன் ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி அக்‌ஷதா மூர்த்தி 222வது இடத்தை பிடித்துள்ளனர்.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 26, 2022, 11:33 [IST]
English summary
New uk prime minister rishi sunak car collection range rover to jaguar xj
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+