பழைய வாகன பதிவெண்ணை புதிய வாகனத்திற்கு மாற்றும் வசதி அறிமுகம்... அதிரடி அறிவிப்பு! எங்கு தெரியுமா?

பழைய வாகனத்தில் இருக்கும் பதிவெண்ணை புதிய வாகனத்திற்கு மாற்றிக்கொள்ளும் வசதியை இந்தியாவின் குறிப்பிட்ட மாநிலம் ஒன்று அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

பழைய வாகனத்தின் பதிவெண்ணை புதிய வாகனத்திற்கு மாற்றும் வசதி அறிமுகம்... அதிரடி அறிவிப்பு! எங்கு தெரியுமா?

பழைய வாகனத்தின் பதிவெண்ணை புதிய வாகனத்திற்கு மாற்றிக் கொள்ளும் வசதியை இந்தியாவில் உள்ள குறிப்பிட்ட மாநிலம் ஒன்று அறிமுகம் செய்துள்ளது. வாகன உரிமையாளர்கள் பல காலமாக விடுத்து வந்த கோரிக்கையின் அடிப்படையில் இந்த வசதியை அறிமுகப்படுத்தியிருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

பழைய வாகனத்தின் பதிவெண்ணை புதிய வாகனத்திற்கு மாற்றும் வசதி அறிமுகம்... அதிரடி அறிவிப்பு! எங்கு தெரியுமா?

முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி செய்து வரும் உபி மாநிலத்தில்தான் இந்த அதிரடி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே, அம்மாநில வாசிகளால் தங்களின் பழைய வாகனத்தில் இருக்கும் பதிவெண்ணை இனி அப்படியே புதிய வாகனத்திற்கு மாற்றிக் கொள்ள முடியும்.

பழைய வாகனத்தின் பதிவெண்ணை புதிய வாகனத்திற்கு மாற்றும் வசதி அறிமுகம்... அதிரடி அறிவிப்பு! எங்கு தெரியுமா?

இந்த வசதி கார்களுக்கு மட்டுமின்றி பைக்குகளுக்கும் பொருந்தும் என உபி வாகன பதிவுத்துறை அறிவித்துள்ளது. ஆனால், காரின் பதிவெண்ணை பைக்கிற்கோ அல்லது பைக்கின் பதிவெண்ணை காருக்கோ மாற்ற முடியாது. மேலும், ஓர் காரின் பதிவெண்ணை வர்த்தக ரீதியாக பயன்படும் சரக்கு வாகனத்திற்கு மாற்ற முடியும்.

பழைய வாகனத்தின் பதிவெண்ணை புதிய வாகனத்திற்கு மாற்றும் வசதி அறிமுகம்... அதிரடி அறிவிப்பு! எங்கு தெரியுமா?

எனவே, காரின் பதிவெண்ணானது மற்றொரு காருக்கு மட்டுமே மாற்ற முடியும். இதுதவிர கார் அல்லாத பெரிய வாகனங்களுக்கு அவற்றை மாற்ற இயலாது. இந்த சிறப்பு சேவையை கட்டணத்தின் அடிப்படையில் செய்ய இருப்பதாக உபி ஆர்டிஓ துறை அறிவித்துள்ளது. இதன்படி, ஓர் பைக்கில் இருந்து வேறொரு பைக்கிற்கு பதிவெண்ணை மாற்ற ரூ. 1,000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பழைய வாகனத்தின் பதிவெண்ணை புதிய வாகனத்திற்கு மாற்றும் வசதி அறிமுகம்... அதிரடி அறிவிப்பு! எங்கு தெரியுமா?

இதேபோன்று, பழைய காரில் இருந்து புதிய காருக்கு பதிவெண்ணை மாற்ற உச்சபட்ச தொகையாக ரூ. 25,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வசதி பேன்சி எண்ணை பிற வாகனத்தில் மாற்றுவதற்கும் பொருந்தும் என உபி போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

பழைய வாகனத்தின் பதிவெண்ணை புதிய வாகனத்திற்கு மாற்றும் வசதி அறிமுகம்... அதிரடி அறிவிப்பு! எங்கு தெரியுமா?

வாகனத்திற்கான பதிவெண்ணை ஒரு சிலர் பேன்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக பல லட்சங்கள் செலவு செய்து அதைப் பெறுகின்றனர். இவ்வாறான பதிவெண்ணை பழைய வாகனத்தோடு அழியவிட விரும்பாதவர்களுக்கு உதவும் விதமாக இந்த அறிவிப்பை உபி அரசு வெளியிட்டுள்ளது.

பழைய வாகனத்தின் பதிவெண்ணை புதிய வாகனத்திற்கு மாற்றும் வசதி அறிமுகம்... அதிரடி அறிவிப்பு! எங்கு தெரியுமா?

ஆனால், பேன்சி எண்ணுக்கு முன்பு எவ்வளவு கட்டணம் செலுத்தப்பட்டதே அதில் 25 சதவீத கட்டணத்தை மீண்டும் செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அதாவது, ஓர் நபர் தனது பழைய காருக்கு ரூ. 1 லட்சம் செலவில் பேன்சி எண்ணை வாங்கியிருந்தால், ரூ. 25 ஆயிரம் மற்றும் புதிய காருக்கு பழைய பதிவெண்ணை மாற்றுவதற்கான கட்டணம் ரூ. 25 ஆயிரம் ஆகிய இரண்டையும் சேர்த்துச் செலுத்த வேண்டும் என கூறப்பட்டிருக்கின்றது.

பழைய வாகனத்தின் பதிவெண்ணை புதிய வாகனத்திற்கு மாற்றும் வசதி அறிமுகம்... அதிரடி அறிவிப்பு! எங்கு தெரியுமா?

இதேபோன்று பைக்கின் பேன்சி எண்ணை மாற்றக் கொள்ள விரும்பினால் கூடுதலாக 20 சதவீத தொகையுடன் பதிவெண் மாற்றுவதற்கான கட்டணத்தையும் சேர்த்து செலுத்த வேண்டும் என கூறப்பட்டிருக்கின்றது. இதுமட்டுமின்றி, பிற மாநிலத்தில் இருந்து பெறப்பட்ட பதிவெண்ணைக்கூட புதிய வாகனத்தில் மாற்றிக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

பழைய வாகனத்தின் பதிவெண்ணை புதிய வாகனத்திற்கு மாற்றும் வசதி அறிமுகம்... அதிரடி அறிவிப்பு! எங்கு தெரியுமா?

இதற்கு, உரிய மாவட்ட நிர்வாகம் அல்லது மாநிலத்திடம் இருந்து ஆட்சேபனை இல்லா சான்றினை வாங்கி சமர்பிக்க வேண்டும் கூறியிருக்கின்றது. வெகு நீண்ட நாட்களாக வாகன உரிமையாளர்களின் எதிர்பார்ப்பில் இருந்த இந்த சிறப்பு வசதியை புதிய விதிகளின்கீழ் உபி அரசு கொண்டு வந்திருக்கின்றது.

பழைய வாகனத்தின் பதிவெண்ணை புதிய வாகனத்திற்கு மாற்றும் வசதி அறிமுகம்... அதிரடி அறிவிப்பு! எங்கு தெரியுமா?

இந்தியாவில் பலர் ஜோதிடம், ஆன்மீகத்தில் அதிகம் நம்பிக்கைக் கொண்டவர்களாக இருக்கின்றனர். அத்தகையோர் தங்கள் பயன்படுத்தும் செல்போன் எண் முதல் வாகன பதிவெண் வரை அனைத்தையும் ஜோதிடத்தின் அடிப்படையிலேயே தேர்வு செய்து பயன்படுத்தி வருகின்றனர்.

பழைய வாகனத்தின் பதிவெண்ணை புதிய வாகனத்திற்கு மாற்றும் வசதி அறிமுகம்... அதிரடி அறிவிப்பு! எங்கு தெரியுமா?

இதற்காக லட்ச கணக்கில் அவர்கள் செலவழிப்பதுண்டு. இவ்வாறு பார்த்து பார்த்து வாங்கப்படும் பதிவெண் புதிய வாகனத்திற்கு மாறும்போது பழைய வாகனத்தோடு சேர்த்து விட்டுவிடும் சூழல் ஏற்படுகின்றது. இம்மாதிரியான அவலைநிலையைப் போக்கும் விதமாக உபி அரசு இந்த சிறப்பு திட்டத்தை அம்மாநிலத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
New Vehicles Can Retain Old Registration Numbers In UP Details. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X