துணிச்சலின் புதிய உச்சம்... அடிக்கடி ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் வால்வோ!
உலகின் பாதுகாப்பான வசதிகள் கொண்டதாக வால்வோ கார்கள் வர்ணிக்கப்படுகின்றன. ஆனால், அதே நிறுவனத்தின் சொகுசு பஸ்கள் தீவிபத்தில் தொடர்ந்து சிக்கி வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது ஒருபுறம் இருந்தாலும், சிறந்த தொழில்நுட்பம் கொண்ட டிரக்குகளை தயாரிக்கும் நிறுவனமாக வால்வோ உலக அளவில் தலைசிறந்ததாக கருதப்படுகிறது.
இதனை மெய்ப்பித்துக் காட்டும் வகையில், அவ்வப்போது பல அபாயகரமான காட்சிகள் அடங்கிய விளம்பரங்களை வால்வோ வெளியிட்டு வருகிறது. Epic என்ற வரிசையில் வெளியிடப்பட்டு வரும் இந்த விளம்பரங்கள் பார்வையாளர்களின் இருதய வலிமையை சோதித்து பார்ப்பதாகவே இருக்கிறது. இந்த வரிசையில் தற்போது Epic வரிசையில் 5வது வீடியோ விளம்பரத்தை வால்வோ வெளியிட்டுள்ளது.
இந்த விளம்பரம் துணிச்சலின் மறுபக்கத்தை பார்வையாளர்களுக்கு காட்டுவதாக உள்ளது. முதல் ஸ்லைடில் புதிய விளம்பரத்தை வீடியோ இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து இதுவரை எபிக் வரிசையில் வந்த வீடியோ இணைப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன. மயிர்கூச்செரிய செய்யும் அந்த காணொளிகளை காணத் தவறாதீர்.
புதிய விளம்பரம்
பின்னோக்கி செல்லும் வால்வோ டிரக்குகளின் ரியர் வியூ கண்ணாடிகளில் கால்களை வைத்து துணிச்சலாக நிற்கும் ஹாலிவுட் நடிகர் வான் டேமியின் துணிச்சலை நிச்சயம் பாராட்டாமல் இருக்க முடியாது. வால்வோ டிரக்குகளின் தொழில்நுட்பம், நடிகர் டேமியின் துணிச்சலையும் தாண்டி அற்புதமான கேமரா கோணம், இசை என நம்மை புதிய உலகுக்குள் அழைத்துச் செல்கிறது இந்த வீடியோ. அடுத்தடுத்த ஸ்லைடுகளில் டிரக்குகளை வைத்து வால்வோ எடுத்த சாகசங்கள் நிறைந்த விளம்பரங்களை காணலாம்.
புடி புடி.. விடாத புடி
ஸ்பெயினில் புகழ்பெற்ற மாடு பிடிக்கும் போட்டியை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட த்ரில்லான வீடியோ.
டிரக் ஓட்டும் எலி
ஸ்பெயினில் உள்ள குவாரியில் வைத்து எடுக்கப்பட்ட எலி டிரக் ஓட்டும் விளம்பரம். முன்னரே, இதுபற்றிய செய்தியை வழங்கியுள்ளோம். பார்க்காதவர்களுக்கு இந்த சூப்பர் விளம்பரத்தை மீண்டும் இந்த தொகுப்பில் இணைத்துள்ளோம்.
கயிறில் ஊசலாடும் கன்னி
குரேஷியாவில் எடுக்கப்பட்ட சாகச விளம்பரம். சாலையில் சென்று கொண்டிருக்கும் இரண்டு டிரக்குகளுக்கு நடுவில் கயிறு கட்டி அதில், பெண் ஒருவர் கடக்கும் காட்சி.
ரிஸ்க் எல்லாம் ரஸ்க் போல...
மிகவும் ரிஸ்க் எடுத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்த வீடியோவையும் காணத் தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications








