வீடியோ: 500 கிமீ தூரம் ஒற்றை சக்கரத்தில் வீலீங் செய்து புதிய உலக சாதனை..!

Written By:

இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்வது என்பது ஓரு கலையாகவும், சாகச விளையாட்டாகவும் பார்க்கப்படுகிறது. முன்சக்கரத்தை தூக்கி பின்சக்கரத்தில் மட்டுமே பைக்கை ஓட்டுவதே வீலிங் சாகசமாகும்.

வீடியோ: 500 கிமீ வீலிங் செய்து புதிய உலக சாதனை.!

ஒற்றை வீலில் பைக்கை பேலன்ஸ் செய்வது மிகவும் சிரமம் என்பதால் வீலிங் என்பது சில அடிகள் தூரம் அல்லது சில மீட்டர்கள் தூரம் மட்டுமே செய்ய இயலும்.

வீடியோ: 500 கிமீ வீலிங் செய்து புதிய உலக சாதனை.!

இந்நிலையில், ஜப்பானைச் சேர்ந்த வீலிங் வித்தகரான மசாரு அபே என்பவர் வீலிங் செய்வதில் உலக சாதனை படைக்க ஆசைப்பட்டுள்ளார்.

வீடியோ: 500 கிமீ வீலிங் செய்து புதிய உலக சாதனை.!

இதற்காக கடினமாக உழைத்து வந்த அபே, உலக சாதனைக்கு முன்னோட்டமாக பரிட்சார்த்த முயற்சியாக ஒரு முறை மும்பை முதல் கோவா வரை வீலிங் செய்தவாரே கடந்தார்.

வீடியோ: 500 கிமீ வீலிங் செய்து புதிய உலக சாதனை.!

உலக சாதனைக்காக சிறப்பான முறையில் தயாரான 33 வயது அபே, தனது உலக சாதனையை நிகழ்த்த ஜப்பானில் உள்ள சைதமா நகரில் உள்ள கவாகுச்சி பந்தய திடலை தேர்ந்தெடுத்தார்.

வீடியோ: 500 கிமீ வீலிங் செய்து புதிய உலக சாதனை.!

சாதனை முயற்சியை தொடங்கிய அபேவுக்கு, ஆரம்பகட்டத்தில் எந்த வித பிரச்சனையும் ஏற்படவில்லை. எனினும் போகப்போக முதுகுத் தண்டில் மிகவும் வலி ஏற்பட்டுள்ளது.

வீடியோ: 500 கிமீ வீலிங் செய்து புதிய உலக சாதனை.!

எனினும், அதனை பொருட்படுத்தாமல் வலியுடனே தனது லட்சியத்தை நோக்கி பயணித்த அபே, முந்தைய வீலிங் சாதனையான 331.0195 கிமீ தூரத்தை 18 மணிநேரங்களில் கடந்தார்.

வீடியோ: 500 கிமீ வீலிங் செய்து புதிய உலக சாதனை.!

இந்த முக்கிய கட்டத்தை எட்டியதும் தனது கையை மேலே உயர்த்தி வெற்றியை பகிர்ந்தார். தொடர்ந்து உற்சாகமாக அவர் இலக்காக நிர்னயித்த 600 கிமீ தூரத்திற்கு வீலிங் செய்ய தீர்மானித்தார்.

வீடியோ: 500 கிமீ வீலிங் செய்து புதிய உலக சாதனை.!

அயினும், 12 மணி நேரங்களாக தொடர்ந்து வீலிங் செய்ததில் கடுமையான முதுகுவலியால் அவதிப்பட்டார் அபே. மேற்கொண்டு ஒரு மணி நேரம் தொடர்ந்து வீலிங் செய்து தனது சாதனையை நிறைவுசெய்தார் அவர்.

வீடியோ: 500 கிமீ வீலிங் செய்து புதிய உலக சாதனை.!

மொத்தம் 500.5322 கிமீ தூரத்திற்கு ஒற்றை சக்கரத்தில் வீலிங் செய்து இவர் வீலிங்கில் புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார். வீலிங் ராஜா என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார் அபே.

வீடியோ: 500 கிமீ வீலிங் செய்து புதிய உலக சாதனை.!

மொத்தம் 13மணி நேரங்கள் தொடர்ந்து வீலிங் லிங் செய்த அபே, பந்தய திடலை மொத்தம் 727 ரவுண்டுகள் சுற்றி வந்து பார்வையாளர்களை மலைக்க வைத்தார்.

வீடியோ: 500 கிமீ வீலிங் செய்து புதிய உலக சாதனை.!

மணிக்கு 40 கிமீ வேகத்தில் பயணித்த அவர் தனது வீலிங் சாதனையை யமஹா ஜோக் ஸ்கூட்டரில் நிகழ்த்தினார்.

வீடியோ: 500 கிமீ வீலிங் செய்து புதிய உலக சாதனை.!

முன்னதாக வீலிங்கில் ஜப்பானைச் சேர்ந்த யசுயுகி குடோ என்பவர் 1991 ஆம் ஆண்டு 331.0195 கிமீ செய்ததே உலக சாதனையாக இருந்து வந்தது அதனை தற்போது அபே முறியடித்துள்ளார்.

வீடியோ: 500 கிமீ வீலிங் செய்து புதிய உலக சாதனை.!

தனது சாதனை தொடர்பாக அபே கூறுகையில், "600 கிமீ தூரம் வீலிங் செய்ய வேண்டும் என்பதே இலக்காக எனக்கு இருந்தது"

வீடியோ: 500 கிமீ வீலிங் செய்து புதிய உலக சாதனை.!

"எனினும், நேரம் செல்ல செல்ல மிகவும் கடுமையான சோர்வும், வலியும் சேர்ந்து ஆட்படுத்தியதால் கைகள் மற்றும் கால்கள் மரத்துப் போனது"

வீடியோ: 500 கிமீ வீலிங் செய்து புதிய உலக சாதனை.!

"இதற்கு முன்னர் இப்படி ஒரு வலியை அனுபவித்ததே இல்லை, வலியில் கண்கள் பார்வையை இழந்தது, தொடர்ந்த பயணத்தால் சுயநினைவை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டேன்"

வீடியோ: 500 கிமீ வீலிங் செய்து புதிய உலக சாதனை.!

"என் வாழ்வில் இதற்கு முன் இப்படி ஒரு உணர்வை அனுபவித்ததே இல்லை, ஒருவழியாக இந்த சாதனையை நிகழ்த்தியிருப்பது மகிழ்ச்சியை தருகிறது" என்று மேலும் தெரிவித்தார் அபே.

வீலிங்கில் புதிய உலக சாதனை படைக்கப்பட்ட வீடீயோவை மேலே உள்ள ஸ்லைடரில் காணுங்கள்..

English summary
Read in Tamil about new wheelie record set by japanese rider abe.
Story first published: Monday, May 8, 2017, 11:45 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark