3டி பிரிண்டரில் உருவாகும் அசத்தலான அஸ்டன் மார்ட்டின் கார்
உலக அளவில் 3டி பிரிண்டர்களில் பொருட்களை உருவாக்கும் முயற்சிகள் பிரபலமாகியுள்ளன. காபி கப், விளையாட்டு சாமான்கள் தொடங்கிய இந்த 3டி பிரிண்டர் சாமான்கள் ஜுரம் தற்போது கார் வரை பற்றிக் கொண்டுள்ளது.
ஆம், நியூசிலாந்து நாட்டை சேர்ந்த கம்ப்யூட்டர் வல்லுனர் ஒருவர் 3டி பிரிண்டரில் அஸ்டன் மார்ட்டின் டிபி4 காரின் மாதிரி மாடலை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். 3டி பிரிண்டரில் உருவாக்கும் கார் சாலையில் ஓட்ட முடியுமா என்று மனதில் எழும் கேள்விக்கும் பதலளித்துள்ளார். இந்த காரில் எஞ்சினை பொருத்தி சாதாரண கார் போலவே ஓட்ட முடியுமாம்.
தனது வலைப்பூவில் இந்த கார் உருவாக்கும் திட்டத்தை பற்றிய தகவல்களை அவர் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். தற்போது 80 சதவீத பணிகள் பூர்த்தியாகிவிட்டதாக தெரிவித்துள்ளார். இந்த காரை பற்றிய கூடுதல் படங்கள், செய்திகளை ஸ்லைடரில் பார்க்கலாம்.

ஏற்கனவே ஃபெராரி
நியூசிலாந்தின் ஆக்லாந்து பகுதியை சேர்ந்த இவான் சென்ஞ்ச்தான் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளார். இதற்கு முன்னதாக ஃபெராரி 250 ஜிடிஓ காரின் மாதிரி மாடலை வைத்துள்ளார். ஆனால், அஸ்டன் மார்ட்டின் டிபி4 கார்தான் முதன்முறையாக 3டி பிரிண்டர் துணையுடன் உருவாக்கி வருகிறார்.

விண்டேஜ் டிசைன்
இந்த காரின் டிசைன் 1961ம் ஆண்டு சீரிஸ் 2 அஸ்டன் மார்ட்டின் டிபி4 மாடலை அடிப்படையாகக் கொண்டது. கார்ட்போர்ட் அட்டையில் மாதிரி மாடலை செய்து அதில் 3டி பிரிண்டரில் இருந்து எடுக்கப்படும் மோல்டிங்குகளை ஒருங்கிணைத்து வருகிறார்.

நிசான் கார் பாகங்கள்
இந்த காரை சாலையில் செல்லத்தக்கதாக உருவாக்கப்படுவதால், பயன்படுத்தப்பட்ட நிசான் ஸ்கைலைன் ஜிடிஎஸ்25டி காரின் எஞ்சின், டிரான்ஸ்மிஷன், சஸ்பென்ஷன் ஆகியவற்றை எடுத்துப் பயன்படுத்த உள்ளார். பயன்படுத்தப்பட்ட நிசான் காருக்கு ரூ.1.91 லட்சம் கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.

3டி பிரிண்டர்
பிளாஸ்டிக் மூலப்பொருட்களை உருக்கி கம்ப்யூட்டரில் வரையப்படும் டிசைன்களை அப்படியே வார்ப்பு தொழில்நுட்பம் மூலம் வெளியில் கொடுக்கும் சாதனமே 3டி பிரிண்டர். நம்முடைய இஷ்டம்போல் பொருட்களை வடிவமைத்து 3டி பிரிண்டர் மூலம் பெற முடியும். இந்த 3டி பிரிண்டர் ரூ.30,000 விலையில் கிடைக்கிறது.

இதுதான் கதவு
இந்த காருக்கு 64 கிலோ பிளாஸ்டிக் மூலப்பொருள் தேவைப்படுமாம். இது உயர்தர பிளாஸ்டிக் என்பதால், இதற்காக ரூ.1,08 லட்சம் செலவாகும் என்று தெரிவித்துள்ளார். படத்தில் காரின் 3டி பிரிண்டரில் உருவாக்கப்பட்ட கதவை காணலாம்.

பானட் பலகை
படத்தில் பார்ப்பது காரின் பானட் பலகை. 3டி பிரிண்டரில் சிறிய சிறிய பாகங்களாக வார்த்து வரும் பாகங்களை அவர் ஒருங்கிணைத்து வருகிறார்.

சாஃப்ட்வேர் டிசைன்
இந்த காரை ஆட்டோடெஸ்க் 3டிஎஸ் மேக்ஸ் 2011 கணினி மென்பொருள் மூலம் டிசைன் செய்துள்ளார். இதிலிருந்து ஒவ்வொரு பாகத்தின் வடிவமும் பிரிண்டருக்கு சென்று 3டி பிரிண்டரில் இருக்கும் வார்ப்பு மூலம் பாகமாக வெளிவரும்.

சவால்கள்
படத்தில் சென்ஞ்ச் உருவாக்கி வரும் காருக்கு 3டி பிரிண்டர் மூலம் வார்த்து எடுக்கப்பட்ட பின்புற பகுதியை காண்கிறோம். கடந்த ஆண்டு டிசம்பரில் துவங்கப்பட்ட இந்த கார் வடிவமைக்கும் பணிகளில் பல்வேறு சவால்களை எதிர்கொள்வதாக அவர் தனது வலைப்பூ பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய படம்
சென்ஞ்ச் வலைப்பூவில் கடந்த மாதம் 26ந் தேதி வெளியிட்டுள்ள படத்தைத்தான் பார்க்கிறீர்கள். 72 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்த காரின் பணிகள் முழுமையடைவதை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பதாக தெரிவித்துள்ளார். நாங்களும்தான்...!!

முழு உருவம்
3டி பிரிண்டர் மூலம் எடுக்கப்படும் பாகங்களை ஒருங்கிணைத்தவுடன், வடிவத்திற்காக பயன்படுத்தப்பட்டிருக்கும் கார்ட்போர்டு எனப்படும் திண்மமான அட்டைகளை நீக்கிவிடுவேன் என்று செனஅஞ்ச் கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications








