ஒரு மணி நேரத்தில் 400 கி.மீ: புல்லட் இரயில் தொழில்நுட்பத்தில் சீனாவின் அடுத்த இலக்கு

Written By:

இந்தியர்களாகிய நாம் இன்னும் புல்லட் இரயிலையே பார்த்ததில்லை, ஆனால் சீனா அடுத்த தலைமுறைக்கான புல்லட் இரயில் தயாரிப்பதில் மும்முரமாக இறங்கியுள்ளது.

அடுத்த தலைமுறைக்கான புல்லட் இரயிலை அறிமுகப்படுத்தும் சீனா

ஒரு மணி நேரத்தில் 400 கிலோ மீட்டர் தூரத்தை கடக்கும் வகையில் புதிய தொழில்நுட்பம் கொண்டு புல்லட் இரயில்களை தயாரிக்க சீனா திட்டமிட்டு வருகிறது.

அடுத்த தலைமுறைக்கான புல்லட் இரயிலை அறிமுகப்படுத்தும் சீனா

இதற்கான அனைத்து வேலைகளும் 2020ம் ஆண்டிற்குள் முடிக்கப்பட்டு அதே ஆண்டில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என புல்லட் இரயில்களை தயாரிக்கும் சி.ஆர்.சி.சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அடுத்த தலைமுறைக்கான புல்லட் இரயிலை அறிமுகப்படுத்தும் சீனா

சி.ஆர்.சி.சி நிறுவனம் புதிய புல்லட் இரயில்களை கார்பன் ஃவைபர் மற்றும் அலுமினியம் அலாய்களை கொண்டு தயாரிக்க திட்டமிட்டு வருகிறது.

அடுத்த தலைமுறைக்கான புல்லட் இரயிலை அறிமுகப்படுத்தும் சீனா

இதனால் தற்போது பயன்பாட்டிலிருக்கும் புல்லட் இரயில்களை விட, புதிய இரயில்கள் எடையில் குறைவாகவும், ஆற்றலில் அதிகமாகவும் இருக்கும் என சி.ஆர்.சிசி தெரிவித்துள்ளது.

அடுத்த தலைமுறைக்கான புல்லட் இரயிலை அறிமுகப்படுத்தும் சீனா

இதுகுறித்து பேசிய சி.ஆர்.சி.சி நிறுவனத்தின் தலைமை பொறியாளர் க்கியா ஃபெங், இரயில்களுக்கான பொருட்கள் அனைத்திலும் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு அதன்பிறகே தயாரிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படும் என்று தெரிவித்தார்.

அடுத்த தலைமுறைக்கான புல்லட் இரயிலை அறிமுகப்படுத்தும் சீனா

சீனாவில் பயன்பாட்டில் உள்ள புல்லட் இரயில்கள் அனைத்தும் அதிகபட்சமாக ஒரு மணி நேரத்தில் 350 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறன் பெற்றவை.

அடுத்த தலைமுறைக்கான புல்லட் இரயிலை அறிமுகப்படுத்தும் சீனா

ஆனால் சி.ஆர்.சி.சி நிறுவனம் தயாரிக்கவுள்ள புதிய ரக புல்லட் இரயில்கள் ஒரு மணி நேரத்தில் 400 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறன் பெற்றவை.

அடுத்த தலைமுறைக்கான புல்லட் இரயிலை அறிமுகப்படுத்தும் சீனா

இந்த கூடுதல் திறனால் பயணிகளின் நேரம் விரயம் குறையும் என்கிறது சி.ஆர்.சி.சி. மேலும், சாலை மற்றும் அதை சார்ந்து நடக்கும் அனைத்து வர்த்தகத்தையும் இதன்மூலம் ஒரே முறையில் கொண்டுவரவும் சி.ஆர்.சி.சி திட்டமிட்டு வருகிறது.

அடுத்த தலைமுறைக்கான புல்லட் இரயிலை அறிமுகப்படுத்தும் சீனா

2020ம் ஆண்டிற்குள் இதற்கான அனைத்து கட்டமைப்பு பணிகளும் முடிக்கப்பட்டால், சீனா இந்த போக்குவரத்து பயன்பாட்டை வைத்து மற்ற நாடுகளுடன் தனது பொருளாதாரத்தை மேம்படுத்த கைகோர்க்கும்.

அடுத்த தலைமுறைக்கான புல்லட் இரயிலை அறிமுகப்படுத்தும் சீனா

சீனாவின் இந்த போக்குவரத்து சாதனத்தை மற்ற நாடுகளும் பயன்படுத்தும் பட்சத்தில், புதிய வேலை வாய்ப்புகள், வியாபார கட்டமைப்புகள் உருவாகும்.

அடுத்த தலைமுறைக்கான புல்லட் இரயிலை அறிமுகப்படுத்தும் சீனா

அடுத்த தலைமுறைக்கான புல்லட் இரயில்கள் பயன்பாட்டிற்கு வந்தால், அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் தூரம் என்பது சுருங்கும்.

அடுத்த தலைமுறைக்கான புல்லட் இரயிலை அறிமுகப்படுத்தும் சீனா

இதன்மூலம் அதிக தூரம் பயணிக்கும் ஊர்திகளை நம்பியிருக்காமல், இதுபோன்ற அதிவேக போக்குவரத்து சாதனங்கள் தனிநபர் முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும்.

அடுத்த தலைமுறைக்கான புல்லட் இரயிலை அறிமுகப்படுத்தும் சீனா

மத்திய மற்றும் தென்கிழக்கு ஆசிய பகுதிகளுடன், ஐரோப்பிய நாடுகளிலும் இந்த ரயில்சேவையை உருவாக சி.ஆர்.சி.சி நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.

அடுத்த தலைமுறைக்கான புல்லட் இரயிலை அறிமுகப்படுத்தும் சீனா

இதன் மூலம் அந்நாடுகளின் போக்குவரத்து தரத்தை உயர்த்தவும், தொழில்நுட்ப வளர்ச்சி சார்ந்த நாடாக அதை அமைக்கவும் சீனா விருப்பம் தெரிவித்துள்ளது.

அடுத்த தலைமுறைக்கான புல்லட் இரயிலை அறிமுகப்படுத்தும் சீனா

மேலும் அடுத்த தலைமுறைக்கான புல்லட் இரயில்கள் மக்களின் பயன்பாட்டிற்கு வரும் முன், அதற்கான சோதனைகளை மிக கடினமான முறையில் நடத்தவுள்ளது சீனா.

அடுத்த தலைமுறைக்கான புல்லட் இரயிலை அறிமுகப்படுத்தும் சீனா

இதற்காக பெய்ஜிங் முதல் ஷெஹ்யாங் வரை அடுத்த தலைமுறைக்கான இரயில்வே டிராக் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அடுத்த தலைமுறைக்கான புல்லட் இரயிலை அறிமுகப்படுத்தும் சீனா

இந்த கட்டமைப்பு பணிகள் அனைத்தும் நிறைவுப்பெற்று, 2019ம் ஆண்டில் அடுத்த தலைமுறைக்கான சி.ஆர்.சி.சி நிறுவனத்தின் புல்லட் இரயில்கள் சோதனையில் ஈடுபடுத்தப்படும்.

அடுத்த தலைமுறைக்கான புல்லட் இரயிலை அறிமுகப்படுத்தும் சீனா

ஒரு மணிநேரத்தில் 400 கிலோ மீட்டரை கடக்க வல்ல இரயில்களை உருவாக்கும் சி.ஆர்.சி.சி நிறுவனத்தின் முயற்சிகள் வெற்றியடையுமா என்ற விவாதங்களும் தற்போது முளைத்துள்ளன.

அடுத்த தலைமுறைக்கான புல்லட் இரயிலை அறிமுகப்படுத்தும் சீனா

இது குறித்து சீனாவின் முக்கிய பொறியாளர்களில் ஒருவரான லியூ யோமை, தற்போதைய பொருளாதாரம் புதிய தொழில்நுட்பத்திலான புல்லட் ரயில்களை கட்டமைப்பதில் பலன் தருமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அடுத்த தலைமுறைக்கான புல்லட் இரயிலை அறிமுகப்படுத்தும் சீனா

மேலும், இது நடைமுறைக்கு வந்தால் புல்லட் இரயில்கள் ஓட பயன்தரும் பொருட்கள் எல்லாம் எளிதில் தேய்மானம் அடையும் என்றும், அதற்கான அனைத்து கட்டமைப்புகளும் அடிக்கடி மாற்றும் சூழ்நிலை உருவாகும் எனவும் லியூ யோமை கூறுகிறார்.

அடுத்த தலைமுறைக்கான புல்லட் இரயிலை அறிமுகப்படுத்தும் சீனா

பொறியாளர் லியூ யோமையின் சந்தேகங்களை குறித்து பல தெளிவான பதிலை சி.ஆர்.சி.சியின் தலைமை பொறியாளர் க்கியா ஃபெங் முன்வைக்கிறார்.

அடுத்த தலைமுறைக்கான புல்லட் இரயிலை அறிமுகப்படுத்தும் சீனா

உபகரணங்களின் தேய்மானம் என்பது அடுத்த தலைமுறைக்கான புல்லட் இரயில் தொழில்நுட்பத்தில் நடைபெற சாத்தியமே இல்லை என்கிறார்.

அடுத்த தலைமுறைக்கான புல்லட் இரயிலை அறிமுகப்படுத்தும் சீனா

தற்போது பயன்பாட்டில் இருக்கும் புல்லட் இரயில்கள் வெளிவந்த பொழுது இதே கருத்து தான் முன்வைக்கப்பட்டதாகவும், ஆனால் அவற்றை கடந்த புல்லட் இரயில் போக்குவரத்து வெற்றிக்கண்டதாக க்கியா ஃபெங் கூறியுள்ளார்.

அடுத்த தலைமுறைக்கான புல்லட் இரயிலை அறிமுகப்படுத்தும் சீனா

புதிய தொழில்நுட்பத்தில் இயங்கும் புல்லட் இரயில்களுக்கான இரும்புகளை தாய்கூர்ன் ஐயர்ன் என்ற பிரபலமான நிறுவனம் தான் வழங்கவுள்ளது.

அடுத்த தலைமுறைக்கான புல்லட் இரயிலை அறிமுகப்படுத்தும் சீனா

தற்போது சீனாவில் இயங்கும் அனைத்து புல்லட் இரயில்களில் கட்டுமானத்திலும் இந்நிறுவனத்தின் இரும்பு தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அடுத்த தலைமுறைக்கான புல்லட் இரயிலை அறிமுகப்படுத்தும் சீனா

இந்நிறுவனத்தின் இரும்புகளின் தரம் உலகளவில் அறிந்தது. அதனால் பல பொறியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் கருதுவது போல தேய்மானம் என்பது இத்தொழில்நுட்பத்தில் சாத்தியமே இல்லை என்பது சி.ஆர்.சி.சி நிறுவனத்தின் எண்ணமாக உள்ளது.

அடுத்த தலைமுறைக்கான புல்லட் இரயிலை அறிமுகப்படுத்தும் சீனா

அதி வேக அடுத்த தலைமுறைக்கான புல்லட் இரயில்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஆசியாவில் மிகப்பெரிய நாடாக சீனாவால் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முடியும் சாத்தியக் கூறுகள் உருவாகும் வாய்ப்பு அதிகரிக்கும்.

அடுத்த தலைமுறைக்கான புல்லட் இரயிலை அறிமுகப்படுத்தும் சீனா

அண்டை நாடுகளுக்கு இந்த சேவையை உருவாக்கி தருவதன் மூலம், பல அரசியல் காரணங்களையும், தேவைகளையும் உருவாக்கி ஆசியாவில் வல்லரசாக நீடிப்பதே சீனாவின் எண்ணமாக இருக்கிறது.

அடுத்த தலைமுறைக்கான புல்லட் இரயிலை அறிமுகப்படுத்தும் சீனா

இந்தியாவில் புல்லட் இரயில்கள் கட்டமைப்பது குறித்த அறிவிப்பு வெறும் அறிவிப்புகளாகவே இருக்கிறது. இன்று பொருளாதாரத்தில் உலகில் 2ம் நிலை நாடாக உள்ள சீனா, முதன்முதலாக புல்லட் இரயில் சேவையை உருவாக்கிய போது பொருளாதார வளர்ச்சி பெற்றிருக்கவில்லை.

அடுத்த தலைமுறைக்கான புல்லட் இரயிலை அறிமுகப்படுத்தும் சீனா

இந்தியாவிலும் மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில் போக்குவரத்து பயன்பாடு அது சாந்த துறைகளில் நிச்சயம் வளர்ச்சி தேவை அதிகரித்து வருகிறது. இதுபோன்ற போக்குவரத்து சாதனங்கள் இந்தியாவிற்குள்ளும் நுழைந்தால் அது நிச்சியம் மற்ற நாடுகளை விட இந்தியாவிற்கு நிச்சயம் உயர்வை தரும்.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Next generation Chinese bullet trains that can reach 400km per hour. Read for more details
Story first published: Thursday, May 11, 2017, 8:30 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos