அடுத்த அமெரிக்க அதிபருக்காக ரகசியமாக தயாராகும் பிரம்மாண்ட கார்!

By Saravana

வரும் நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. தற்போதைய அதிபர் ஒபாமா, இரண்டு முறை வென்று, முழுமையான பதவிக் காலத்தை பூர்த்தி செய்யும் நிலையில், விதிகளின்படி, அவர் இனி அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது. எனவே, புதிய வேட்பாளர்கள் களம் காண இருப்பதால், அமெரிக்காவின் புதிய அதிபர் குறித்து உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்தநிலையில், அமெரிக்காவின் புதிய அதிபருக்காக அமெரிக்க உளவுத் துறை பாதுகாப்பு மிக்க புதிய காரை ஆர்டர் செய்துள்ளது. அந்த கார் தற்போது ரகசியமாக உருவாக்கப்பட்டு வருவதுடன், தீவிர சாலை சோதனைகளும் நடந்து வருகிறது. அதுபோன்று, சாலை சோதனை செய்யப்பட்டுக் கொண்டிருந்த காரின் மோப்பம் பிடித்து எடுக்கப்பட்ட ஸ்பை படம் இணையதளங்களில் வெளியாகியுள்ளது. இந்த செய்தித் தொகுப்பில் அமெரிக்காவின் புதிய அதிபருக்காக தயாராகி வரும் காரின் விபரங்களை காணலாம்.

ஒபாமா கார் மாடல்

ஒபாமா கார் மாடல்

தற்போது அமெரிக்க அதிபர் ஒபாமா பயன்படுத்தி வரும் மாடல் கேடில்லாக் ஒன் அல்லது லிமோ ஒன் என்று குறிப்பிடப்படுகிறது. தி பீஸ்ட் என்ற செல்லமாக அழைக்கப்படுகிறது. செவர்லே கோடியாக் நடுத்தர வகை டிரக்கின் சேஸியில் இந்த கார் கட்டமைக்கப்பட்டது. புதிய மாடலும் கேடில்லாக் பிராண்டில்தான் உருவாகிறது.

 புதிய கார் மாடல்

புதிய கார் மாடல்

தற்போதைய மாடல் போன்றே புதிய காரும் கேடில்லாக் பிராண்டில்தான் உருவாகிறது. ஆனால், சமீபத்திய கேடில்லாக் கார்களின் டிசைன் அம்சங்களை பெற்றிருக்கும் என்பது ஸ்பை படத்தின் மூலமாக புலனாகிறது. புதிய கேடில்லாக் சிடி6 கார் மாடலின் தோற்றத்தை ஒத்திருக்கிறது. புதிய சின்னத்துடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Spy Photo Credit:Brian Williams / SpiedBilde

ரகசிய வசதிகள்

ரகசிய வசதிகள்

புதிய காரில் இடம்பெறப்போகும் பாதுகாப்பு மற்றும் சிறப்பு வசதிகள் குறித்த தகவல்களை அமெரிக்க புலனாய்வுத் துறை ரகசியமாக வைத்திருக்கிறது. ஆனால், குண்டு துளைக்காத கண்ணாடிகள், குண்டு வெடிப்புகளை தாங்கும் அடிப்பாகம், சுத்திகரிக்கப்பட்ட காற்றை வழங்கும் வசதி, தீயை அணைக்கும் வசதி, சாட்டிலைட் போன் உள்ளிட்டவை இருக்கும்.

 சேவைக்கு...

சேவைக்கு...

அடுத்த ஆண்டு துவக்கத்தில் அமரிக்காவின் புதிய அதிபர் பதவியேற்கும்போது, இந்த புதிய கார் அதிகாரப்பூர்வ பயன்பாட்டிற்கு வந்துவிடும். ஆக, இன்னும் சரியாக ஓர் ஆண்டில் புதிய கார் சேவைக்கு வந்துவிடும் என நம்பலாம்.

அமெரிக்க அதிபரின் கார்...

அமெரிக்க அதிபரின் கார்...

ரகசியங்கள் நிறைந்த அமெரிக்க அதிபர் ஒபாமாவின் கார் குறித்த தகவல்களை படிக்க க்ளிக் செய்க.

அமெரிக்க அதிபர் விமானம்

அமெரிக்க அதிபர் விமானம்

அமரிக்க அதிபர் ஒபாமாவின் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தின் சிறப்பம்சங்கள்

More from DriveSpark

Article Published On: Monday, January 25, 2016, 11:40 [IST]
English summary
Next US President's Limousine Spied.
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+