எலெக்ட்ரிக் சைக்கிள் காதலர்களை கவர 4 புதிய தேர்வுகள் அறிமுகம்.. இவ்ளோ விலை குறைவா! ஆளுக்கு ஒன்னு வாங்கிக்கலாம்

நெக்ஸு மொபிலிட்டி, இது ஓர் மின்சாரத்தில் இயங்கும் மிதிவண்டிகளை தயாரிக்கும் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனமே இந்தியாவில் நான்கு புதிய வேரியண்டுகள் இ-சைக்கிள்களை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றன. அதன் முன்னணி எலெக்ட்ரிக் சைக்கிள் மாடல்களான ரோம்பஸ் பிளஸ், பசிங்கா மற்றும் ரோட்லார்க் ஆகியவற்றிலேயே புதிய தேர்வுகளை நெக்ஸு மொபிலிட்டி விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.

புதிய தேர்வுகளில் 5.2 Ah மற்றும் 8.7 Ah ஆகிய பேட்டரி பேக் தேர்வுகளே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. புதிய வேரியண்டுகளாக ரோம்பஸ் பிளஸ் 5.2 Ah, பசிங்கா 8.7 Ah தேர்வு மற்றும் 5.2 Ah ஆகியவையே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன.

Nexzu mobility e-cycle

இத்துடன், ரோட்லார்க் மாடலில் 8.7 Ah பேட்டரி தேர்வு புதிய தேர்வாக இணைக்கப்பட்டு உள்ளது. அனைத்தும் ஸ்வாப்பபிள் பேட்டரி பேக் வசதிக் கொண்டவை ஆகும். தன்னுடைய தயாரிப்புகள் குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைப்பதை உறுதிச் செய்யும் பொருட்டே நிறுவனம் புதிய தேர்வுகளை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

அந்தவகையில், இப்போதைய நிலவரப்படி நிறுவனத்தின் மலிவு விலை எலெக்ட்ரிக் சைக்கிளாக ரோம்பஸ் பிளஸ் இருக்கின்றது. இதனை இரண்டு விதமான தேர்வுகளில் இந்தியர்களால் வாங்கிக் கொள்ள முடியும். இரண்டு தேர்வுகளிலுமே 5.2 Ah பேட்டரி பேக்கே வழங்கப்படுகின்றது. ரூ. 29,900 மற்றும் 32,950 என்கிற விலையில் இது விற்பனைக்குக் கிடைக்கிறது.

இதற்கு அடுத்தபடியாக பசிங்கா மாடல் இருக்கின்றது. இந்த மாடலில் 8.7 Ah பேட்டரி பேக் (விலை ரூ. 35,950), 14.5 Ah பேட்டரி பேக் (விலை ரூ. 35,950) மற்றும் 5.2 Ah பேட்டரி பேக் தேர்வு (விலை ரூ. 32,950) வழங்கப்படுகின்றது. இறுதியாக ரோட்லார்க் இருக்கின்றது.

இதில் இரண்டு விதமான பேட்டரி பேக் தேர்வுகள் வழங்ப்படுகின்றன. 8.7 Ah (விலை ரூ. 35,950) மற்றும் 14.5 Ah (விலை ரூ. 39,950) ஆகியவையே அவை ஆகும். இதில் 5.2Ah பேட்டரி பேக் கொண்ட தேர்வு ஓர் முழு சார்ஜில் 30 கிமீ ரேஞ்ஜையும், 8.7Ah பேட்டரி பேக் கொண்ட தேர்வு ஓர் முழு சார்ஜில் 45 கிமீ ரேஞ்ஜையும் வழங்கும்.

அதேவேளையில் 14.5 Ah பேட்டரி பேக் கொண்ட தேர்வோ அதிகபட்சமாக ஓர் முழு சார்ஜில் 100 கிமீ ரேஞ்ஜ் வரையில் வழங்கும் திறனைக் கொண்டிருக்கின்றது. அதிக ரேஞ்ஜைப் போலவே அதிக சிறப்பு தொழில்நுட்ப வசதிகளைத் தாங்கியதாகவும் இந்த நெக்ஸூ நிறுவனத்தின் எலெக்ட்ரிக் சைக்கிள் காட்சியளிக்கின்றன.

அந்தவகையில், எல்இடி லைட், குட்டி டிஸ்பிளே, டிஸ்பிளே, நீடித்து உழைக்கும் பேட்டரி மற்றும் மின்சார மோட்டார் ஆகியவையே இந்த எலெக்ட்ரிக் சைக்கிள்களில் வழங்கப்பட்டு இருக்கின்றது. குறிப்பாக, நெக்ஸுவின் உயர்நிலை தேர்வு அதிக சிறப்பு வசதிகளைத் தாங்கியதாகக் காட்சியளிக்கின்றது. குறிப்பாக நிறுவனத்தின் ரோட்லார்க் மாடலே அதிக பிரீமியம் வசதிகளைத் தாங்கியதாகக் காட்சியளிக்கிறது.

நெக்ஸு நிறுவனம் ஹோலி பண்டிகையை முன்னிட்டு தற்போது அதன் எலெக்ட்ரிக் சைக்கிள்களுக்கு 300 ஆயிரம் ரூபாய் வரை சிறப்பு சலுகைகளை அறிவித்து இருக்கின்றது. இந்த நிறுவனம் தனி நபர் பயன்பாட்டிற்கான எலெக்ட்ரிக் சைக்கிள் மட்டுமின்றி டெலிவரி சேவைக்கான இ-சைக்கிள்களையும் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே மின்சார சைக்கிள் விரும்பிகளைத் தன் வசம் ஈர்க்கும் பொருட்டு நெக்ஸு புதிய தேர்வுகளை அதன் முன்னணி இ-சைக்கிள் மாடல்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இது நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருக்கும் என நம்பப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, March 21, 2024, 19:38 [IST]
English summary
Nexzu mobility rolls out four new varients in electric cycles
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+