10, 15 ஆண்டுகளான டீசல், பெட்ரோல் வாகனங்களுக்கு தடை?

சிஎன்ஜி வாகனங்களுக்கு மானியம் வழங்க உத்தரவிட வலியுறுத்தி, உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பதில் அளிக்கும்படி, அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

By Arun

சிஎன்ஜி வாகனங்களுக்கு மானியம் வழங்க உத்தரவிட வலியுறுத்தி, உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பதில் அளிக்கும்படி, அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

சிஎன்ஜி வாகனங்களுக்கு மானியம் கிடைக்குமா? ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தாக்கல்...

குஜராத் மாநில உயர்நீதிமன்றத்தில், மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிஎன்ஜி எனப்படும் நிலைப்படுத்தப்பட்ட இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் வாகனங்களை வாங்குபவர்களுக்கு மானியம் வழங்க உத்தரவிடக்கோரி, இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சிஎன்ஜி வாகனங்களுக்கு மானியம் கிடைக்குமா? ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தாக்கல்...

அத்துடன் 10 ஆண்டுகளான டீசல் வாகனங்கள் மற்றும் 15 ஆண்டுகளான பெட்ரோல் வாகனங்களை நீக்கக்கோரியும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மிகப்பெரும் பிரச்னையாக உருவெடுத்து வரும் காற்று மாசுபாட்டினை குறைப்பதற்காக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சிஎன்ஜி வாகனங்களுக்கு மானியம் கிடைக்குமா? ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தாக்கல்...

சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கு எதிராக போராடி வரும் பர்யவரன் மித்ரா என்ற என்ஜிஓ இந்த பொதுநல வழக்கை தொடர்ந்துள்ளார். என்ஜிஓ பர்யவரன் மித்ரா சார்பாக அவரது வக்கீல் நிமேஷ் கபாடியா என்பவர் இந்த மனுவை குஜராத் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

சிஎன்ஜி வாகனங்களுக்கு மானியம் கிடைக்குமா? ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தாக்கல்...

குஜராத் மாநிலத்தின் தொழில் நகரங்களான வாப்பி, அங்கேலேஸ்வர் மற்றும் வத்வா ஆகிய நகரங்களுடன் சேர்த்து, மக்கள் அதிகம் வசிக்கும் மற்றும் வணிக நகரங்களான சூரத், வதோதரா, அகமதாபாத், ராஜ்கோட் ஆகிய நகரங்களிலும் காற்றின் தரம் மோசமடைந்து விட்டதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.

சிஎன்ஜி வாகனங்களுக்கு மானியம் கிடைக்குமா? ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தாக்கல்...

குஜராத் மாசு கட்டுப்பாட்டு வாரியம் (GPCB) வெளியிட்டுள்ள புள்ளி விபரங்களிலேயே, இந்த தகவல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மனுவை, குஜராத் உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.

சிஎன்ஜி வாகனங்களுக்கு மானியம் கிடைக்குமா? ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தாக்கல்...

குஜராத் மாநில போக்குவரத்து துறை மூலம் கிடைத்த தகவல்களின்படி, மாநிலத்தில் மொத்தம் 65 சதவீத ஆட்டோ ரிக்ஸாக்கள் சிஎன்ஜி மூலம் இயங்கி வருவது தெரியவந்துள்ளதாக மனுதாரர் தெரிவித்துள்ளார். ஆனால் சிஎன்ஜி சப்ளை போதுமான அளவிற்கு இல்லை எனவும் அவர் மனுவில் கூறியுள்ளார்.

சிஎன்ஜி வாகனங்களுக்கு மானியம் கிடைக்குமா? ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தாக்கல்...

எனவே காற்று மாசுபாட்டை தடுக்க வேண்டுமானால், சிஎன்ஜி மூலம் இயங்கும் வாகனங்கள் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு அரசு நிதியில் இருந்து மானியம் வழங்க வேண்டும் என மனுதாரர் வலியுறுத்தியுள்ளார்.

சிஎன்ஜி வாகனங்களுக்கு மானியம் கிடைக்குமா? ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தாக்கல்...

அத்துடன் சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறுபவர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்க வேண்டும் எனவும் மனுதாரர் பர்யவரன் மித்ரா தெரிவித்துள்ளார். முதற்கட்ட விசாரணைக்கு பின், சம்பந்தப்பட்ட துறைகளுக்கு குஜராத் உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சிஎன்ஜி வாகனங்களுக்கு மானியம் கிடைக்குமா? ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தாக்கல்...

இந்த மனு தொடர்பாக பதில் அளிக்கும்படி, குஜராத் மாநில அரசு, குஜராத் மாசு கட்டுப்பாட்டு வாரியம் (GPCB), போக்குவரத்து துறை கமிஷனர் ஆகியோருக்கு குஜராத் உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சிஎன்ஜி வாகனங்களுக்கு மானியம் கிடைக்குமா? ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தாக்கல்...

பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. அத்துடன் பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களால் சுற்றுச்சூழலுக்கும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே எலக்ட்ரிக் மற்றும் சிஎன்ஜி வாகனங்களுக்கு மாற வேண்டிய சூழல் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, July 13, 2018, 8:30 [IST]
English summary
NGO files plea in Gujarat High Court seeking subsidy for CNG vehicles. Read in tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+