ரோட்டுல இனி ஒரு குழி கூட பார்க்க முடியாது! 3டி சென்சார்கள் மூலம் கண்காணிக்க முடிவு!
தேசிய நெடுஞ்சாலைகளில் இனி குழிகளை கண்காணிக்க 3டி சென்சார் தொழிற்நுட்பத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள 23 மாநிலங்களில் இந்த தொழிற்நுட்பம் கொண்டு வரப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளை மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு பயணிக்க தேசிய நெடுஞ்சாலைகள் மிக முக்கியமான தேவையாக இருக்கிறது. மக்கள் விரைவான பயணங்களை மேற்கொள்ள தேசிய நெடுஞ்சாலைகளை அரசு பராமரித்து வரிகிறது. இதனால் சாலைகளை எப்பொழுதும் சிறப்பாக வைத்திருக்க அரசு தேவையான நடவடிக்கைகளை அவ்வப்போது எடுத்து வருகிறது.

இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலைகளில் தற்போது குழிகள், பள்ளங்கள், விரிசல், உள்ளிட்டவிஷயங்கள் ஏற்பட்டால் அதை மேனுவலாக கண்காணிக்கிறார்கள். குறிப்பிட்ட வாகனத்தில் ஊழியர்கள் ஏறி சாலையில் பயணித்து அங்கு குழிகள் இருந்தாலோ, அல்லது அது ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருந்தாலோ அல்லது சாலை மழையால் சேதமடைந்திருந்தாலோ உடனடியாக ரிப்போர்ட் செய்வார்கள்.
அதன் அடிப்படையில்அதற்கான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். ஆனால் மேனுவலாக கண்காணிப்பதில் பல சிக்கல்கள் உள்ளது. இப்படியாக ரிப்போர்ட் செய்யப்படும் இடம் குறித்த தெளிவான தகவல்கள் கிடைப்பது, ஊழியர்களின் கவனக்குறைவு காரணமாக சில குழிகள் மூடாமல் இருப்பது உள்ளிட்டசம்பவங்கள் நடந்துள்ளது.

இந்நிலையில் இதை கண்காணிக்க தற்போது தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தற்போது புதிய 3டி சென்சார் தொழிற்நுட்பத்தை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இதன்படி இதற்கான கருவிகள் வாகனங்களில் பொருத்தப்பட்டு வாகனம் சாலைவழியாக ஓட்டி செல்லப்படும் அப்பொழுது இந்த சாலை முழுவதும் டிஜிட்டல் மேப்பிங் செய்யப்படும். இந்த தகவலை வைத்து சாலையில் உள்ள குழிகள் கண்காணிக்கப்படும். இங்கு மேனுவல் சோதனைகள் நடத்தப்பட மாட்டாது.
இதனால் ரியல் டைமில் குழியின் அளவுகள், அதன் லோக்கேஷன் எல்லாம் நேரடியாக நெடுஞ்சாலை ஆணையத்திற்கு சென்று விடும். அவர்கள் இந்த தரவுகளை வைத்து பராமரிப்பு பணிகளை திட்டமிட முடியும். மேனுவலாக பல ஆயிரம் கி.மீ தூரத்தை கண்காணிப்பது சிரமம், ஆனால் மிஷின் மூலம் கண்காணிப்பது சுலபமான விஷயம் இதான். இந்த கருவி சாலையில் உள்ள பள்ள மேடு, கிராக், சாலையே மண் சரிவால் இறங்கி போவது, உள்ளிட்ட விஷயங்களை கண்காணிக்கும்.
முதற்கட்டமாக 10,000 கி.மீ தூர சாலையை மட்டுமே இப்படியாக கண்ணகாணிக்க திட்டமிடப்பட்டுள்ளுது. இதில் பெறப்படும் தரவுகள் நேரடியாக தேசிய நெடுஞ்சாலை கமெண்ட் சென்டருக்கு சென்றடையும், அஞஅக இவர்கள் செயற்கை நுண்ணறிவு தொழிற்நுட்பம் மூலம் மோசமான பகுதிகளை கண்டறிந்து அதற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பராமரிப்பு பணிகள் குறித்த திட்டங்களை போட்டு தரும். மேலும் சேதமான பகுதி குறித்த ஜிபிஎஸ் தரவுகளும் இருப்பதால் துள்ளியமாக இடத்தை கண்டறிய முடியும்.
இதில் சிறப்பான விஷயம் என்னவென்றால் இந்த சிஸ்டம் சிறிய வெடிப்பு உள்ளிட்ட விஷயங்களையும் கண்காணிக்கும். இதனால் விரிசல் பெரியதாகி பெரிய பாதிப்பு ஏற்படும் முன்னரே அதை கண்டறிந்து சரி செய்யமுடியும். குறிப்பாக மழை காலத்திற்கு முன்பு இப்படியான விஷயங்களை சரி செய்தாலே பெரிய அளவில் பிரச்சனைகள் வராது. மழை காலங்களில் சிறிய விரிசல்கள் தான் பெரிய அளவில் சோதாரத்தை ஏற்படுகிறது.
இது மட்டுமல்ல குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை சாலைகள் முழுவதுமாக ஸ்கேன் செய்யப்படும். இப்படியாக ஸ்கேன் செய்யப்படும் போது முந்தைய ஸ்கேன் தரவுகளை ஒப்பிட்டு பார்த்து சேதமடைய வாய்ப்புள்ள இடங்களை கண்டறியும். இதில் உள்ள மாற்றங்களை உணர்ந்து தேவையான நடவடிக்கைகளையும் இந்த தொழிற்நுட்பம் பரிந்துரை செய்யும். பெரிய சேதாரத்தை முன்னரே கண்டறிவதால் அடுத்து அதிகம் செலவு செய்ய வேண்டிய இடத்தில் தற்போது குறைவான செலவை செய்தாலே பெரிய செலவை தடுக்க முடியும்.
இந்த 3டி சென்சாரில் லேசர் லைட்டுகள் பயன்படுத்தப்படும். இந்த லைட்டுகள் சாலையில் உள்ள ஒவ்வொரு பகுதியையும் ஸ்கேன் செய்து மில்லி மீட்டர் அளவில் மாற்றம் இருந்தாலும் அதை தரவுகளாக சேமிக்கும். இது சாட்டிலைட் மூலம் பெறப்பட்ட தகவல்களையும் சேர்த்து இந்த சாலைக்கான டிஜிட்டல் டிவின்னை உருவாக்கும். இதன் மூலம் ரியல் டைமில் ஏற்பட்ட மாற்றங்கள் பள்ள மேடுகள், ஏற்ற இறக்கங்களை கண்காணிக்க முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த தொழிற்நுட்பம் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டுவெற்றி பெற்ற நிலையில் தான் இதற்கான அடுத்த கட்டமுயற்சியாக சோதனை முயற்சி கையில் எடுக்கப்பட்டுள்ளது. இதுவெற்றிமாக நிறைவடையும் பட்சத்தில் இந்தியாவில் உள்ள மொத்த தேசிய நெடுஞ்சாலைகளும் இப்படியாக சாலை பாராமிப்பில் சிறப்பாக செயல்படும் வகையில் சோதனை செய்யப்படும்.


Click it and Unblock the Notifications








