ஆக.1 முதல் இந்த தேசிய நெடுஞ்சாலையில் 6 விதமான வாகனங்களுக்கு தடை! திடீர் உத்தரவால் வாகன ஓட்டிகள் கலக்கம்

வரும் ஆகஸ்ட் மாதம் 1 தேதி முதல் பெங்களூர்-மைசூர் எக்ஸ்பிரஸ் சாலையில் குறைவான வேகத்தில் செல்லும் பைக், ஆட்டோ, டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏன் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது? இதற்கான காரணம் என்ன? இது குறித்து விரிவாக காணலாம் வாருங்கள்.

மத்திய அரசு கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து மைசூருக்கு விரைவாக செல்ல புதிதாக எக்ஸ்பிரஸ் சாலை ஒன்றை அமைத்தது. இந்த எக்ஸ்பிரஸ் சாலை தற்போது முழு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. சுமார் 118 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த சாலை அமைக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் உள்ள கெங்கேரியிலிருந்து மைசூர் மணிபால் மருத்துவமனை ஜங்ஷன் வரை இந்த எக்ஸ்பிரஸ் சாலை உள்ளது.

ban on slow vehicles in this expressway

இந்த சாலையில் பயணிப்பது மூலம் மிக விரைவாக சுமார் 90 நிமிடத்தில் பெங்களூரிவில் இருந்து மைசூருக்கு சென்று விட முடியும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த சாலையின் வேகமாக மணிக்கு 80-100 கிலோமீட்டர் வேகம் வரை செல்லலாம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது இந்த சாலையை அனைத்து விதமான வாகன ஓட்டிகளும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலையில் பயணிக்கும் வாகனங்களுக்கு இதுவரை எந்த விதமான தடையும் விதிக்கப்படவில்லை. இந்நிலையில் இந்த சாலையை பயன்படுத்த தற்போது புதிய விதிமுறையை தேசிய நெடுஞ்சாலைத்துறை அறிவித்துள்ளது. அதற்காக புதிய அறிவிப்பைணையையும் வெளியிட்டுள்ளது.

ban on slow vehicles in this expressway

அதன்படி இந்த எக்ஸ்பிரஸ் சாலையில் ஆறு விதமான வாகனங்கள் இந்த சாலையை பயன்படுத்த ஆகஸ்ட் 1 தேதி முதல் தடை விதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. மோட்டார் சைக்கிள் (ஸ்கூட்டர்), மூன்று சக்கர வாகனங்கள், மோட்டார் பொருத்தப்படாத வாகனங்கள் டிராக்டர்கள், மல்டி ஆக்ஸில் ஹைட்ராலிக் டிரெய்லர்கள், குவார்ட்டி சைக்கிள்கள் ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வாகனங்கள் மெயின் எக்ஸ்பிரஸ்வே சாலையை பயன்படுத்த மட்டும் தான் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவர்கள் அதை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள சர்வீஸ் சாலையில் பயணிக்கலாம் அதில் எந்தவிதமான தடையும் கிடையாது. என அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால் இந்த ரக வாகன ஓட்டிகள் சர்வீஸ் சாலையில் தாராளமாக பயணிக்கலாம்.

ban on slow vehicles in this expressway

இந்த பெங்களூரு-மைசூரு எக்ஸ்பிரஸ் சாலை பயன்பாட்டுக்கு வந்த பிறகு இதுவரை 300 சாலை விபத்துக்கள் நடந்துள்ளன. இதில் சுமார் 100 பேர் வரை மரணம் அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகமான விபத்துக்கள் நடப்பதாலும் அதில் மரணங்கள் தொடர்வதாலும் சாலையின் பாதுகாப்பை அதிகரிக்க இப்படியான நடவடிக்கையை தேசிய நெடுஞ்சாலை துறையினர் எடுத்துள்ளனர்.

இது மட்டுமல்ல இனிய அந்த சாலையில் அதிக வேகமாக செல்லும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்த நெடுஞ்சாலை துறையினர் முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் அந்த சாலையில் விபத்துகளின் எண்ணிக்கையை குறைக்க முடியும் என நம்புகின்றனர்.

இதனால் பெங்களூர் வாசிகள் இனி சாலை வழியாக மைசூர் செல்லும் போது இந்த சாலையை பயன்படுத்தும் போது கவனமாக செல்லுங்கள். காரில் சென்றால் தாராளமாக இந்த சாலையை பயன்படுத்தலாம் அல்லது பைக், ஆட்டோ போன்ற வாகனங்களில் சென்றால் இந்த சாலையை பயன்படுத்தக் கூடாது. சர்வீஸ் சாலையை தான் பயன்படுத்த வேண்டும். மெயில் சாலையில் குறைந்த பட்ச வேகமாக 80 கி.மீ வேகத்தை பின்பற்றினால் சக வாகன ஓட்டிகளுக்கும் தொந்தரவாக இருக்காது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சாலையில் வாகனங்களுக்கான அதிகபட்ச வேகம் என்ற ஒரு வேகம் எப்படி நிர்ணயிக்கப்படுகிறதோ அதேபோல குறைந்தபட்ச வேகம் என்ற வேகமும் தேசிய நெடுஞ்சாலைகளில் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த குறைந்தபட்ச வேகத்தை பிக்கப் செய்ய முடியாத வாகனங்கள் எல்லாம் இந்த சாலையில் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. இதை புரிந்து கொண்டு வாகன ஓட்டிகள் இதற்கான ஒத்துழைப்பை தர வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Thursday, July 27, 2023, 14:10 [IST]
English summary
Nhai enforces a ban on the entry of slow moving vehicles on this expressway
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X