இனி இந்த இடத்துல விபத்தே நடக்க கூடாது... முக்கிய நபர் பலியான இடத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் சூப்பரான கருவி

நாட்டையே உலுக்கிய விபத்து சம்பவங்களில் சைரஸ் மிஸ்த்ரியின் விபத்து நிகழ்வும் ஒன்று. டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் சேர்மனான இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உறவினர் ஒருவரின் இறுதிச் சடங்கில் கலந்துவிட்டு வீடு திரும்பும் ஏற்பட்ட கார் விபத்தில், சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.

இதற்கு முன்பு பல்வேறு விபத்து சம்பவங்கள் இந்த நாட்டில் அரங்கேறியிருந்தாலும், இந்த விபத்து நிகழ்வு பெருத்த அதிர்வலையை ஏற்படுத்தியது. காரணம், சைரஸ் மிஸ்த்ரி காரின் பின்னிருக்கையில் அமர்ந்திருந்ததுதான். சைரஸ் மிஸ்த்ரி மட்டுமின்றி அவருடன் இன்னும் சிலரும் இறுதிச் சடங்கில் கலந்துக் கொள்வதற்காக பயணித்திருந்தனர். அந்தவகையில், நண்பர்கள் இருவர் முன்னிருக்கையில் அமர்ந்திருக்க சைரஸ் மிஸ்த்ரியும் மற்றும் ஒருவரும் பின்னிருக்கையில் அமர்ந்து பயணித்திருக்கின்றனர். இந்த இருவர் மட்டுமே இறந்தனர்.

கிராஷ் குஷன்

முன்னிருக்கையில் அமர்ந்திருந்த இருவரும் காயங்களுடன் உயிர் தப்பினர். இதுவே அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கார் மோதியது முன் பக்கத்தில், பெரியளவு சேதமும் அதன் முன் பக்கத்திலேயே ஏற்பட்டது. இவ்வாறு இருக்கு முன்னிருக்கையில் இருந்த இருவரும் உயிர் தப்பியிருக்கின்றனர். ஆனால் பின்னிருக்கையில் இருந்தவர்கள் மட்டும் எப்படி உயிரிழந்தனர் என்கிற சந்தேகமே அனைவரின் மனதிலும் எழும்பியது. குறிப்பாக சைரஸ் மிஸ்த்ரியும் அவர்களது நண்பர்களும் பயணித்தது அதி நவீன பாதுகாப்பு வசதிகள் கொண்ட பென்ஸ் சொகுசு காராகும்.

இந்த காரில் பயணிக்கும்போது ஏற்பட்ட விபத்தின்போதே பின்னிருக்கையில் அமர்ந்திருந்தவர்கள் இறந்தனர். இது காரின் தரத்தின்மீதும் கேள்வி குறியை எழுப்பியது. இந்த நிலையிலேயே பின்னிருக்கையில் அமர்ந்திருந்தவர்கள் இருவரும் சீட் பெல்ட் அணியவில்லை. இதன் காரணத்தினாலேயே அவர்கள் இறந்திருக்கின்றனர் என்கிற அதிர்ச்சி தகவல் வெளியாகியது. இந்த அதிர்ச்சி தகவலே பின்னாளில் நாட்டில் பல்வேறு புதிய ரூல்கள் உருவாக காரணமாக அமைந்தது. ஆம், காரில் முன் இருக்கையில் அமர்பவர்கள் மட்டுமல்ல பின் இருக்கையில் அமர்பவர்களும் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும்.

கிராஷ் குஷன்

இல்லை எனில் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சில மாநில அரசுகள் உடனடியாக இந்த விதியை நடைமுறைப்படுத்தி, அபராத வசூலில் ஈடுபட்டது. இந்தமாதிரியான அதிரடி நடவடிக்கைகளோடு அரசுகள் நிறுத்திக் கொள்ளவில்லை. அவை பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கைகளிலும் களமிறங்கின. அந்தவகையில், விபத்து சம்பவம் நடைபெற்ற இடத்தை மிக ஆபத்தான இடமாக கருதி, இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

விபத்து மெத்தைகள் (crash cushions) எனும் புதிய அம்சத்தை தற்போது அந்த பகுதியில் ஆணையம் பொருத்தி உள்ளது. இதனை கிராஷ் அட்டென்யூட்டர் (crash attenuator) என்றும் கூறலாம். இதன் முக்கிய பணியே தன்மீது வந்து மோதும் எந்த வாகனத்தையும் பெரும் சேதத்தில் இருந்து பாதுகாப்பதே ஆகும். குஷன் போலவே இவை செயல்படும் என்பதாலேயே இதற்கு விபத்து மெத்தைகள் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. விபத்துகளின்போது ஏற்படும் பெருத்த சேதங்களையும், உயிரிழப்புகளையும் தவிர்க்கும் பொருட்டு இந்த கருவியை ஆணையம் நிறுவியுள்ளது.

இதுபோன்று ஆபத்து நிறைந்த பகுதிகள் நாடு முழுவதும் கண்டறியப்பட்டு அந்த பகுதிகளிலும் கிராஷ் குஷன்களை நிறுவ இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆற்று பாலங்கள் இருக்கும் பகுதிகளிலும் இந்த புதிய அம்சத்தை பயன்படுத்த திட்டமிடப்பட்டிருக்கின்றது. விபத்துகளை குறைக்கும் பொருட்டு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன. அவற்றில் ஒன்றாக இந்த கிராஷ் குஷன் அமைந்துள்ளது.

ஏற்கனவே விபத்துகள் அரங்கேறும் இடங்கள் கண்டறியப்பட்டு அந்த இடங்களில் விபத்தைக் குறைக்கக் கூடிய நடவடிக்கைகளில் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மேற்கொண்டு வருகின்றது. முன் கூட்டியே இந்த பகுதி விபத்து பகுதி என்கிற எச்சரிக்கை மற்றும் வேகத்தைக் குறைப்பதற்கான தடைகள் போன்றவற்றை அது மேற்கொண்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே விபத்தைச் சந்தித்தாலும் பெரியளவில் சேதம் ஏற்படாத வண்ணம் பாதுகாக்கக் கூடிய கிராஷ் குஷன்களை ஆணையம் பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றது.

இதன் வாயிலாக எதிர்காலத்தில் விபத்துகள் அரங்கேறினாலும் உயிர் சேதங்கள் ஏற்படுவது தவிர்க்கப்படும் என நம்பப்படுகின்றது. சைரஸ் மிஸ்த்ரியின் இறப்பிற்கு அவர் சீட் பெல்ட் அணியாததது மட்டுமே காரணம் அல்ல, அந்த கார் அதிக வேகத்தில் பயணித்ததும் ஓர் முக்கிய காரணம் என கூறப்படுகின்றது. விபத்து நடைபெற்ற போது மணிக்கு சுமார் 120 கிமீ வேகத்தில் அந்த கார் பயணித்திருக்கலாம் என கூறப்படுகின்றது. இத்தகைய அதிகபட்ச வேகம் இந்திய சாலைகளில் மிகுந்த ஆபத்தானது.

சமீபத்தில்கூட சென்னை தரமணி சாலையில் அதிக வேகத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த இரு இளைஞர்கள் குறுக்கே திடீரென மினி லோடு வேன் வந்ததனால் இருவரும் விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர். மிதமிஞ்சிய வேகமே இந்த உயிரிழப்புக்கும் காரணமாக உள்ளது. ஒவ்வொரு விபத்திற்கு வெவ்வேறு விதமான காரணங்கள் கூறப்பட்டாலும் அதி-வேகமே பெரும்பாலான விபத்துகளுக்கு காரணமாக இருக்கின்றது. வேகம் என்ற இந்த ஒன்றை தவிர்த்தாலே விபத்துகளும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் பெருமளவில் குறையும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Nhai installs crash cushion
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X