இனி ரவுடிகள் யாரும் வாலாட்ட முடியாது! சுங்கசாவடியில் புதிய செக் வைத்த மத்திய அரசு!
சுங்கச்சாவடியில் ஊழியர்கள் தங்கள் உடம்பில் பணி நேரத்தின் போது கேமராவை பொருத்திக் கொள்ள வேண்டும் என தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் மத்திய அரசு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் சுங்கச்சாவடிகளை அமைத்து அங்கு கடந்து செல்லும் வாகனங்களிடம் சுங்க கட்டணங்களை வசூல் செய்து வருகின்றனர். தற்போது ஃபாஸ்ட் டேக் முறையில் தான் சுங்க கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள கார்களுக்கு தற்போது ஃபாஸ்ட் டேக் கட்டாயமாக்கப்பட்டுவிட்டது.

இந்நிலையில் சுங்கச்சாவடிகளில் அவ்வப்போது சுங்க கட்டணம் கட்டுவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு வருகிறது. பலர் ஃபாஸ்ட் டேக் பேலன்ஸ் இருந்தும் சரியாக வேலை செய்யாமல் போகிறது, சில நேரம் ஃபாஸ்ட் டேக் கார்டில் பேலன்ஸ் ஏறுவதில் பிரச்சனை இருக்கிறது. சிலர் பேலன்ஸ் இல்லாமல் பணம் செலுத்தும் இடத்திற்கு வந்து விடுகின்றனர். இப்படியாக பல்வேறு சிக்கல்களை சுங்கச்சாவடி ஊழியர்கள் சந்தித்து வருகின்றனர்.
இதனால் அவ்வப்போது சுங்கச்சாவடிகளில் பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. இந்த பிரச்சனை மிகப்பெரிய சட்ட விரோத செயல்களிலும் வன்முறைகளிலும் சென்று விட முடிகிறது. இந்நிலையில் இப்படியான பிரச்சனைகளை தவிர்க்க தற்போது தேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் சுங்கச்சாவடிகளுக்கான செயல்பாட்டு வழிமுறைகளை வழங்கி உள்ளது. இதன்படி சுங்கச்சாவடி ஊழியர்கள் இப்படி தான் செயல்பட வேண்டும் என தெளிவாக விளக்கமளித்துள்ளது.

இப்படியாக ஒவ்வொரு சுங்க சாவடியிலும் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் தான் ஏதாவது ஒரு வாகனத்தால் பிரச்சனை இருந்தால் அந்த பிரச்சனையை நேரடியாக சென்று அதைக் கேட்டறிந்து அதற்கு தீர்வுக்கு கொண்டு வர வேண்டும் என இந்த செயல்முறை வழிகாட்டியில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படியாக பிரச்சனைகளை தீர்க்க செல்லும் கண்காணிப்பாளர் உடம்பில் நிச்சயம் கேமரா பொருத்தப்பட்டு அது ரெக்கார்டிங்கில் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு பிரச்சினையை சந்திக்க செல்லும் கண்காணிப்பாளர் அங்கு நடக்கும் விஷயங்களை எல்லாம் கேமராவில் பதிவு செய்வதால் எதிர்காலத்தில் இது வன்முறையில் போக வாய்ப்பு இல்லாமலோ அல்லது இதற்கு காரணமானவர்களை கண்டறியவோ எளிதாக இருக்கும் என்பதால் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

மேலும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் "சுங்கச்சாவடிகளில் அமைதி" என்ற புதிய முன்னெடுப்பு ஒன்றை எடுத்துள்ளது. அதன்படி நெடுஞ்சாலை துறை அமைச்சகம் சில சைக்காலஜி மருத்துவர்களிடம் சென்று அவர்களை அழைத்து வந்து அவர்களை வைத்து சுங்கச்சாவடியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கோபத்தை கட்டுப்படுத்துவது குறித்த பயிற்சிகளை அழிக்க திட்டமிட்டுள்ளனர்.
இந்த பயிற்சியின் போது எப்படி சுங்கச்சாவடி ஊழியர்கள் கோபத்தை கட்டுப்படுத்தி பிரச்சினையை சமாளிக்க வேண்டும் என்றும், அவர்கள் தானாக வாய்விட்டு பிரச்சினையை வளர்க்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் பயிற்சிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரச்சனை எல்லையை மீறி போகும்போது உடனடியாக போலீஸையோ அல்லது உடன் இருக்கும் ஏதாவது ஒரு சட்ட அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படியாக சட்ட விதிமுறை மீறல்கள் நடந்தால் போலீசிற்கு போகும்போது அங்கு ஆதாரமாக இந்த கண்காணிப்பாளர் உடம்பில் பொருத்திருக்கும் கேமராவில் உள்ள வீடியோ ஆதாரங்களை சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்வு கண்டு இதுபோன்ற பிரச்சனைகள் எதிர்காலத்தில் நடக்காதவாறு தவிர்க்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சாலையில் வாகனம் ஓட்டும் வாகனம் ஓட்டி யாராவது பிரச்சனை செய்து சுங்கச்சாவடியின் பொருளுக்கு சேதம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டால் சுங்கச்சாவடியை நடத்தி வரும் ஏஜென்சியினர் உடனடியாக இது குறித்து போலீசில் போதிய ஆதாரங்களுடன் புகார் அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சுங்கச்சாவடிகள் நடக்கும் பிரச்சனை ஒரு அன்றாட பிரச்சனையாக மாறிவிட்டது. தினந்தோறும் இதை ஏதாவது சுங்கச்சாவடிகளில் பிரச்சனை நடந்து கொண்டே தான் இருக்கிறது. இதற்கு தீர்வாக கண்காணிப்பாளர்கள் அதற்கு கேமரா வழங்கியுள்ளது வரவேற்கத்தக்க விஷயம் தான். ஆனால் அதைவிட இதற்கு நிரந்தர தீர்வாக தானியங்கியாக சுங்கச்சாவடிகள் செயல்படும் வகையில் சுங்கச்சாவடிகளை கட்டமைக்க வேண்டும். இதுதான் நிரந்த தீர்வாக இருக்கும்.


Click it and Unblock the Notifications
