புதிய ஆப்பு... ஏப்ரல் 1 முதல் டோல்கேட் கட்டணத்தை உயர்த்த அரசு திட்டம்?.. எவ்வளவு உயர போகுது தெரியுமா?..

ஏப்ரல் 1ம் தேதி முதல் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டோல்கேட் கட்டணத்தை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

மற்றுமொரு சிக்கல்!.. ஏப்ரல் 1 முதல் டோல்கேட் கட்டணத்தை உயர்த்த அரசு திட்டம்?.. எவ்வளவு உயர இருக்கின்றது?..

பெட்ரோல், டீசல் மட்டுமில்லைங்க இனி தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிப்பதும் காஸ்ட்லியான ஒன்றாக மாற இருக்கின்றது. வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் டோல்கேட்டுகளில் வசூலிக்கப்படும் கட்டணம் உயர இருப்பதாக ப்பாதக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மற்றுமொரு சிக்கல்!.. ஏப்ரல் 1 முதல் டோல்கேட் கட்டணத்தை உயர்த்த அரசு திட்டம்?.. எவ்வளவு உயர இருக்கின்றது?..

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (National Highway Authority of India) சுமார் 5 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டிருப்பதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அண்மையில் பெட்ரோல், டீசல் வரியை உயர்த்தியது.

மற்றுமொரு சிக்கல்!.. ஏப்ரல் 1 முதல் டோல்கேட் கட்டணத்தை உயர்த்த அரசு திட்டம்?.. எவ்வளவு உயர இருக்கின்றது?..

இதனால், அன்றாட தேவைகளான அத்தியாவசியப் பொருட்களின் விலை மிகக் கடுமையாக உயர்ந்திருக்கின்றது. இதனால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில், கூடுதல் சுமையை ஏற்படுத்தும் வகையில் தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் டோல் கட்டணத்தை உயர்த்த அரசு திட்டமிட்டிருக்கின்றது.

மற்றுமொரு சிக்கல்!.. ஏப்ரல் 1 முதல் டோல்கேட் கட்டணத்தை உயர்த்த அரசு திட்டம்?.. எவ்வளவு உயர இருக்கின்றது?..

இது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. தொடர்ந்து, மாத பாஸ் கட்டணத்திலும் ரூ. 10 முதல் 20 ரூபாய் வரை கட்டணம் உயர இருக்கின்றன. ஒவ்வொரு நிதியாண்டிலும் தேசிய நெடுஞ்சாலைகளின் டோல் கட்டணத்தை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உயர்த்துவது வழக்கம். அந்தவகையிலேயே வரும் ஏப்ரல்1ம் தேதி முதல் கட்டணம் உயர இருக்கின்றது.

மற்றுமொரு சிக்கல்!.. ஏப்ரல் 1 முதல் டோல்கேட் கட்டணத்தை உயர்த்த அரசு திட்டம்?.. எவ்வளவு உயர இருக்கின்றது?..

இதனால், ரூ. 5 முதல் ரூ. 30 வரை கட்டணம் உயரும் அபாயம் ஏற்பட்டிருக்கின்றது. அண்மையில், டோல்கேட் கட்டணத்தை எளிமையாக்கும் வகையில் மத்திய அரசு அனைத்து வாகனங்களிலும் ஃபாஸ்டேக் கட்டாயம் என அறிவித்தது. இதனைப் பயன்படுத்தாத வாகனங்களிடம் இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

மற்றுமொரு சிக்கல்!.. ஏப்ரல் 1 முதல் டோல்கேட் கட்டணத்தை உயர்த்த அரசு திட்டம்?.. எவ்வளவு உயர இருக்கின்றது?..

இதனைத் தொடர்ந்து, அனைத்து வாகன உரிமையாளர்களும் ஃபாஸ்டேக் கட்டணத்திற்கு மாற தொடங்கிவிட்டனர். இதனால், நாள்தோறும் வசூலிக்கப்படும் கட்டணத்தின் தொகை அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்த நிலையிலேயே புதிய கட்டண உயர்வு பற்றிய தகவல் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றது.

மற்றுமொரு சிக்கல்!.. ஏப்ரல் 1 முதல் டோல்கேட் கட்டணத்தை உயர்த்த அரசு திட்டம்?.. எவ்வளவு உயர இருக்கின்றது?..

ஃபாஸ்டேக்கால் டோல்கேட் செலவிடப்படும் நேரம் குறைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், வாகன ஓட்டிகளால் எரிபொருள் மிச்சம் செய்யப்படுவதாக அண்மையில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியிருந்தார். இதனால், ஆண்டு ஒன்றிற்கு ரூ. 20 ஆயிரம் கோடி மதிப்பிலான எரிபொருள் மிச்சமாகும் என்ற புள்ளி விபரங்களையும் அவர் வெளியிட்டார்.

மற்றுமொரு சிக்கல்!.. ஏப்ரல் 1 முதல் டோல்கேட் கட்டணத்தை உயர்த்த அரசு திட்டம்?.. எவ்வளவு உயர இருக்கின்றது?..

Source: HT Auto

இதுமட்டுமின்றி தேசிய நெடுஞ்சாலைகளில் ஃபாஸ்டேக் செய்யப்படும் கட்டண வசூல் நாள் ஒன்றிற்கு ரூ. 104 கோடியாக உயர்ந்திருப்பதாகவும் அமைச்சர் தகவல் வெளியிட்டிருந்தார். கடந்த பிப்ரவரி 16ம் தேதியில் இருந்து ஃபாஸ்டேக் கட்டாயமாகியிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
National Highway Authority of India Is Set To Increase Toll Rates By 5 Percent. Read In Tamil.
Story first published: Monday, March 15, 2021, 17:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X