சீனா, ஜப்பான் கூட செய்யாத சாதனை! இந்தியா இந்த விஷயத்தை செய்யும்ன்னு யாருமே நெனைக்கல!காலரைத் தூக்கி விடுங்க

மத்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையகம் 100 மணி நேரத்தில் 100 கி.மீ தூரம் எக்ஸ்பிரஸ் சாலையைக் கட்டமைத்து புதிய உலக சாதனை படைத்துள்ளது. காஸியாபாத் - அலிஹ்ரா இடையே கட்டமைக்கப்பட்ட இந்த சாலை சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகள் முக்கியமான கட்டுமானமாக வளர்ந்துள்ளது. இந்தியாவின் முக்கியமான நகரங்களை இந்த சாலைகள் இணைக்கிறது. இதன் மூலம் அந்த நகரங்களுக்கு இடையே போக்குவரத்து சுலபமாகிறது. இதனால் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி என்பது ஏற்படுகிறது. இந்நிலையில் மத்திய அரசு தேசிய நெடுஞ்சாலைத் துறை மூலம் இந்தியாவில் நெடுஞ்சாலைகளைக் கட்டமைத்து வருகிறது இதற்காகத் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தை உருவாக்கியுள்ளது.

100 km road in 100 hours

இந்நிலையில் தற்போது உ.பி மாநிலம் காஸியாபாத் பகுதியிலிருந்து அலிஹ்ரா பகுதிவரை எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கும் பணிநடந்து வருகிறது. இந்த நெடுஞ்சாலையைக் கட்டமைக்கும் பணியை எல் அண்ட் டி மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்த க்யூப் ஹைவேஸ் ஆகிய நிறுவனங்கள் இணைத்து இந்த பணியைச் செய்கிறது. இந்நிலையில் இந்த எக்ஸ்பிரஸ் சாலைக்காக 100 மணிநேரத்தில் 100 கி.மீ தூரத்திற்குச் சாலை அமைத்து சாதனை செய்துள்ளது.

இந்த எக்ஸ்பிரஸ் சாலை கோல்டு சென்ட்ரல் பிளான்ட் ரீசைக்கிளிங் டெக்னாலஜி மூலம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதனால் கார்பன் வெளியேற்றம் வெகுவாக குறையும். இந்த இரு நகரங்களுக்கும் இடையே 118 கி.மீ தூரம் சாலை அமைக்கப்பட வேண்டும். இந்த சாலை தாத்ரீ, நொய்டா, சிக்கந்திராபாத், புலந்த்ஷாகர், குர்ஜா ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள தொழிற்வளர்ச்சிக்காகவும், விவசாய வளர்ச்சிக்காகவும், கல்வி வளர்ச்சிக்காகவும் இந்த சாலை உதவும் எனக் கூறப்பட்டுள்ளது.

100 km road in 100 hours

100 மணி நேரத்தில் இந்த 100 கி.மீ சாலை அமைக்க மொத்தம் 80,000 பணியார்கள் பணியாற்றினர். 200 ரோடு ரோலர்கள் பயன்படுத்தப்பட்டன. இதன் மூலம் விரைவாக சாலைகள் அமைக்கப்பட்டன. இந்த சாலை கட்டமைக்கப்படுவதால் இந்த இரு நகரங்களுக்கு இடையேயான பயண நேரம் வெகுவாக குறையும்.

இதற்கு முன்னர் தேசிய நெடுஞ்சாலைத் துறை கின்னஸ் சாதனையாக ஒரே மூச்சில் 75 கி.மீ ஒரே கான்கிரிட் சாலையை அமராவதியிலிருந்து அகோடா வரை 105 மணி நேரம் 33 நிமிடத்தில் கட்டமைத்து முடித்தது. அதன் பிறகு தற்போது 100 மணி நேரத்தில் 100 கி.மீ சாலையைக் கட்டமைத்துள்ளது.

100 km road in 100 hours

இது குறித்து மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின்கட்கரி கூறும் போது : "இந்த சாதனை இந்தியாவின் சாலை கட்டமைப்பு துறையின் விடாத உழைப்பிற்குக் கிடைத்த வெற்றிக்காகத் தான் பார்க்க வேண்டும். இந்த சாலை மக்களுக்கும் சரக்கு போக்குவரத்திற்கும் அதிக உதவியாக இருக்கும்.

இதனால் அப்பகுதியில் உள்ளூர் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடையும். தொழில் நிறுவனங்கள் வளர்ச்சியைச் சந்திக்கும், விவசாய நிலங்களில் உற்பத்தியை வெளியூர்களுக்குச் சுலபமாகக் கொண்டு செல்ல முடியும். கல்வி, பொருளாதாரம், வியாபாரம், தனி நபர் வருமானம் என அனைத்தும் வளர்ச்சி பெறும் " எனக் காணலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒரு நாட்டிற்கு நெடுஞ்சாலை வசதி என்பது மிக முக்கியமான, நல்ல சாலை வசதி கொண்ட நாடுகள் தான் பொருளாதார மட்டுமல்லாமல் எல்லா விதத்திலும் வளர்ச்சியைச் சந்தித்துள்ளன. இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாட்டில் இப்படியான ஒரு நெடுஞ்சாலை ஆணையம் துரிதமாக இருப்பது வரவேற்கப்பட வேண்டியது.

More from DriveSpark

Article Published On: Friday, May 19, 2023, 21:00 [IST]
English summary
Nhai sets world record of constructing 100 km express road in 100 hours know full details
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X