டோல்கேட்டில் இனி வரிசையில் காத்திருக்காமல் தப்பிக்க புதிய ஐடியா.... மத்திய அரசின் தடாலடி அறிவிப்பு...

தேசிய நெடுஞ்சாலை சிசிடிவி கேமரா காட்சிகள் இனி லைவ்வாக இணையத்தளத்தில் பார்க்கும் வசதியைத் தேசிய நெடுஞ்சாலைத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்த முழு தகவல்களைக் காணலாம் வாருங்கள்.

டோல்கேட்டில் இனி வரிசையில் காத்திருக்காமல் தப்பிக்க புதிய ஐடியா

இந்த முழுவதும் அனைத்து பெரு நகரங்களையும் இணைக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் பயணிப்பதற்கான கட்டணங்கள் சுங்கச்சாவடிகள் மூலம் வசூலிக்கப்படுகிறது. இந்த வழியாக வாகனங்கள் கடந்து செல்லும்போது வாகனத்தின் தன்மைக்கு ஏற்ப கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு அதற்கான கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

டோல்கேட்டில் இனி வரிசையில் காத்திருக்காமல் தப்பிக்க புதிய ஐடியா

இதற்காக இந்தியா முழுவதும் 700 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. முதலில் இந்த சுங்கச்சாவடிகளில் பணமாகக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது வாகனங்களுக்காக பாஸ்ட் டேக் கார்டுகள் கட்டாயமாக்கப்பட்டு அதன் மூலம் வசூலிக்கப்படுகிறது.

டோல்கேட்டில் இனி வரிசையில் காத்திருக்காமல் தப்பிக்க புதிய ஐடியா

அந்த கார்டில் ரிசார்ஜ் வைத்து வைத்துக்கொண்டால் வாகனங்கள் சுங்கச்சாவடியை கடக்கும் போது சுங்கச்சாவடியில் பொருத்தப்பட்டுள்ள இயந்திரம் மூலம் ஃபாஸ்ட் டேக் கார்டை ஸ்கேன் செய்து அதிலிருந்து தானாக பணம் கழிந்து கொள்ளும் தொழிற்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டு அது அனைத்து வாகனங்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

டோல்கேட்டில் இனி வரிசையில் காத்திருக்காமல் தப்பிக்க புதிய ஐடியா

தற்போது இந்தியாவில் உள்ள பெரும்பாலான வாகனங்கள் பாஸ்ட் டேக் கார்டை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த டோல்கேட்டில் வாகனங்கள் நீண்ட நேரம் நிற்கவேண்டியது உள்ளதாக வாகன ஓட்டிகள் மத்தியில் புகார் எழுந்தது. ஃபாஸ்ட் டேக் என்பது வாகனம் நிற்கும் நேரத்தைத் தவிர்க்கவே கொண்டுவரப்பட்டதாகச் சொல்லப்பட்டது.

டோல்கேட்டில் இனி வரிசையில் காத்திருக்காமல் தப்பிக்க புதிய ஐடியா

ஆனால் ஃபாஸ்ட் டேக் வந்த பின்பும் பல வாகனங்கள் டோல்கேட்டில் வரிசை கட்டி நிற்க வேண்டிய நிலை இருப்பதாகப் பல புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் டோல்கேட்டில் வாகனங்கள் எவ்வளவு இருக்கிறது எவ்வளவு கூட்டம் நிற்கிறது என்பதைக் கண்காணிக்க ஒரு வசதியைச் செய்து தர வேண்டும் என்றும் மத்திய அரசிடம் மக்கள் கோரிக்கை வைத்தபடி இருந்தனர்.

டோல்கேட்டில் இனி வரிசையில் காத்திருக்காமல் தப்பிக்க புதிய ஐடியா

இந்நிலையில் இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இந்த பிரச்சனைகளுக்கு ஒருதீர்வு கொண்டு வரும் வகையில் தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகும் காட்சிகளை லைவ்வாக இண்டர்நெட்டில் வெளியிடத் திட்டமிட்டுள்ளது. அதனால் வாகன ஓட்டிகள் குறிப்பிட்ட டோல் கேட்டை கடக்கும் முன்பே அங்கு எவ்வளவு கூட்டம் இருக்கிறது என்பதை இண்டர்நெட் மூலம் அறிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போலப் பயணத் திட்டத்தை மாற்றியமைத்துக்கொள்ளலாம்.

டோல்கேட்டில் இனி வரிசையில் காத்திருக்காமல் தப்பிக்க புதிய ஐடியா

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஏற்கனவே தனது தளத்தில் "சிட்டிசன் சார்ட்டர்" என்ற ஒரு பகுதியை உருவாக்கியிருந்தது. அதில் தேசிய நெடுஞ்சாலைகளில் மக்களுக்கு ஏற்படும் சிரமங்களைப் பட்டியலிட்டால் அதற்கான நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்படும் என கூறியிருந்தது.அதில் வந்த புகார்கள் தான் நீண்ட நேரம் சுங்கச்சாவடியில் வரிசை கட்டி நிற்க வேண்டிய நிலைமை. இதற்குத் தீர்வாகவே இந்த திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

டோல்கேட்டில் இனி வரிசையில் காத்திருக்காமல் தப்பிக்க புதிய ஐடியா

முதற்கட்டமாக தற்பேஆது 214 சுங்கச்சாவடிகளின் காட்சிகள் மட்டும் லைவ்வாக இணையத்தளத்தில் ஸ்டிரீம் செய்யப்படுகிறது. இதைப் பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ளலாம். இது அடுத்த கட்டமாக 407 சுங்கச்சாவடிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டு விரைவில் 700 சுங்கச்சாவடி காட்சிகளும் லைவ்வாக ஸ்டிரீம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டோல்கேட்டில் இனி வரிசையில் காத்திருக்காமல் தப்பிக்க புதிய ஐடியா

இதற்கிடையில் மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி கடந்த மார்ச் மாதம் சுங்கச்சாவடிகளில் உள்ள கூட்ட நெரிசலைக் கணக்கிடும் குறியீடு ஒன்ற உருவாக்க ஒரு தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தமிட்டார். அந்நிறுவனம் தற்போது அதற்கான பணிகளைச் செய்து வருகிறது.

டோல்கேட்டில் இனி வரிசையில் காத்திருக்காமல் தப்பிக்க புதிய ஐடியா

அதன் மூலம் ஒவ்வொரு சுங்கச் சாவடிகளிலும் தினமும் எவ்வளவு வாகனங்கள் கடக்கிறது. எந்தெந்த நேரங்களில் கூட்டம் அதிகமாக இருக்கிறது. எந்த நேரத்தில் கூட்டம் குறைவாக இருக்கிறது. எந்த நாளில் கூட்டம் அதிகமாகிறது என்பதைக் கணக்கிட்டு இனி வரும் நாட்களில் எப்படியாக இருக்கக்கூடும் என அனுமானிக்கும் சிஸ்டமை தயாரித்து வருகின்றனர்.

டோல்கேட்டில் இனி வரிசையில் காத்திருக்காமல் தப்பிக்க புதிய ஐடியா

அந்த சிஸ்டம் நடைமுறைக்கு வந்தால் டோல்கேட்டில் கூட்ட நெரிசல் ஏற்படும் முன்பே அதைக் கணித்து அதற்குத் தகுந்தார் போல ஏற்பாடுகளைச் செய்து வைக்க முடியும் என மத்திய அரசு இதற்கான முயற்சியையும் கையில் எடுத்துள்ளது. ஏற்கனவே கூட்ட நெரிசலைத் தவிர்க்கத் தான் ஃபாஸ்ட் டேக் கார்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுக் கட்டாயப்படுத்தப்பட்டன.

டோல்கேட்டில் இனி வரிசையில் காத்திருக்காமல் தப்பிக்க புதிய ஐடியா

இதற்கிடையில் தற்போது ஃபாஸ்ட் டேக் கார்டுகள் 95 சதவீத வாகனங்களில் பயன்பாட்டிற்கு வந்த நிலையில் இதற்கு முன்னர் எவ்வளவு நெரிசல் இருந்தது தற்போது எவ்வளவு நெரிசல் இருக்கிறது என்பதற்கான ஒரு ஆய்வு நடந்தது. அந்த ஆய்வில் இந்தியா முழுவதும் அதிக கூட்ட நெரிசல் உள்ள 164 சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்ட் டேக் கார்டுகள் அதிகமாக்கப்பட்ட பின்பு கூட்ட நெரிசல் 31 சதவீதம் குறைந்துள்ளதாக அந்த ஆய்வு அறிக்கை சொல்கிறது.

டோல்கேட்டில் இனி வரிசையில் காத்திருக்காமல் தப்பிக்க புதிய ஐடியா

இந்நிலையில் சமீபத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி இந்தியாவில் விரைவில் சுங்கச் சாவடிகளில் ஃபாஸ்ட் டேக் முறை ஒழிக்கப்பட்டு ஜிபிஎஸ் முறையில் பணம் செலுத்தும் திட்டம் விரைவில் வெளியாகவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அதன் படி தற்போது ஒரு வாகனம் சுங்கச்சாவடியில் பணம் கட்டிவிட்டால் அது அந்த தேசிய நெடுஞ்சாலையை எவ்வளவு முழுவதுமாக பயன்படுத்தினாலும் சரி குறைவாகப் பயன்படுத்தினாலும் சரி முழு கட்டணம் செலுத்த வேண்டும் என்ற நிலை உள்ளது.

டோல்கேட்டில் இனி வரிசையில் காத்திருக்காமல் தப்பிக்க புதிய ஐடியா

ஆனால் ஜிபிஎஸ் முறையிலான கட்டணத்தில் எவ்வளவு தூரம் பயன்படுத்தியுள்ளோம் அதற்கு மட்டும் பணம் கட்டினால் போதும் என்கிற ரீதியில் இந்த முறை மாற்றியமைக்கப்படும் என தெரிவித்துள்ளார். இதற்கான நடைமுறை சிக்கல்கள், தொழினுட்ப தேவைகள் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. இந்த நடைமுறை ஏற்கனவே உலகில் பல நாடுகளில் நடைமுறையில் உள்ளது. இந்தியாவிலும் இதுநடை முறைக்கு வந்தால் இனி சுங்கச்சாவடிகளே இருக்காது என்ற நிலை ஏற்படும்.

Article Published On: Friday, May 6, 2022, 14:53 [IST]
English summary
NHAI Starts sharing live feeds from Toll plaza in their website
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+