ரொம்ப பாதுகாப்பானது... 1 கோடி ரூபாய்க்கு வால்வோ கார் வாங்கிய பிரபல டிவி நடிகை... யார்னு தெரியுமா?

பிரபல தொலைக்காட்சி நடிகை ஒருவர், 1 கோடி ரூபாய் மதிப்புள்ள வால்வோ காரை வாங்கியுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ரொம்ப பாதுகாப்பானது... 1 கோடி ரூபாய்க்கு வால்வோ கார் வாங்கிய பிரபல டிவி நடிகை... யார்னு தெரியுமா?

இந்தியாவின் முன்னணி தொலைக்காட்சி நடிகைகளில் ஒருவர் நியா ஷர்மா (Nia Sharma). இவர் சமூக வலை தளங்களிலும் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறார். தற்போது புத்தம் புதிய வால்வோ எக்ஸ்சி90 டி5 இன்ஸ்க்ரிப்ஷன் (Volvo XC90 D5 Inscription) கார் ஒன்றை நியா ஷர்மா வாங்கியுள்ளார். இது மிகவும் பிரபலமான எஸ்யூவி ரக கார் ஆகும்.

ரொம்ப பாதுகாப்பானது... 1 கோடி ரூபாய்க்கு வால்வோ கார் வாங்கிய பிரபல டிவி நடிகை... யார்னு தெரியுமா?

வால்வோ எக்ஸ்சி90 டி5 இன்ஸ்க்ரிப்ஷன் காரின் எக்ஸ் ஷோரூம் விலையே 87.90 லட்ச ரூபாய் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஆன் ரோடு விலை 1 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வரும். இவ்வளவு விலை உயர்ந்த காரை வாங்கியதற்காக சமூக வலை தளங்கள் மூலம் நியா ஷர்மாவிற்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ரொம்ப பாதுகாப்பானது... 1 கோடி ரூபாய்க்கு வால்வோ கார் வாங்கிய பிரபல டிவி நடிகை... யார்னு தெரியுமா?

மும்பையில் உள்ள ஒரு வால்வோ ஷோரூமில் எக்ஸ்சி90 டி5 இன்ஸ்க்ரிப்ஷன் காரை நியா ஷர்மா டெலிவரி எடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதனுடன், ''நீங்கள் மகிழ்ச்சியை வாங்க முடியாது. ஆனால் கார்களை வாங்கலாம். அவை இரண்டுமே ஒரு விஷயம்தான்'' என எழுதியுள்ளார்.

ரொம்ப பாதுகாப்பானது... 1 கோடி ரூபாய்க்கு வால்வோ கார் வாங்கிய பிரபல டிவி நடிகை... யார்னு தெரியுமா?

இதன் மூலம் அவர் கார்களை அதிகம் நேசிக்க கூடியவர் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. Khatron Ke Khiladi என்ற ஸ்டண்ட் ரியாலிட்டி ஷோவின் வெற்றியாளரான நியா ஷர்மா, கார்களில் சொகுசு மட்டுமின்றி பாதுகாப்பிற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்க கூடியவராக உள்ளார். பொதுவாக வால்வோ நிறுவனத்தின் கார்கள் மிகவும் பாதுகாப்பானவை என்பது நம் அனைவருக்குமே தெரியும்.

ரொம்ப பாதுகாப்பானது... 1 கோடி ரூபாய்க்கு வால்வோ கார் வாங்கிய பிரபல டிவி நடிகை... யார்னு தெரியுமா?

ஆனால் இந்திய பிரபலங்களில் சிலர் மட்டுமே வால்வோ கார்களை வாங்குகின்றனர். சினிமா உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மிகவும் பிரபலமாக உள்ள பெரும்பாலான நபர்கள் தங்களின் பயணங்களுக்கு மெர்சிடிஸ்-பென்ஸ், பிஎம்டபிள்யூ மற்றும் ஆடி போன்ற நிறுவனங்களின் கார்களைதான் தேர்வு செய்கின்றனர்.

ரொம்ப பாதுகாப்பானது... 1 கோடி ரூபாய்க்கு வால்வோ கார் வாங்கிய பிரபல டிவி நடிகை... யார்னு தெரியுமா?

ஆனால் நியா ஷர்மா சற்று வித்தியாசமாக வால்வோ காரை தேர்வு செய்துள்ளார். வால்வோ நிறுவனம் தங்களது நிறுவன தயாரிப்புகளின் பாதுகாப்பு அம்சங்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கி வருகிறது. இதற்காக மிகவும் கடுமையான சோதனைகளுக்கு வால்வோ நிறுவனம் தங்களது கார்களை உட்படுத்துகிறது.

ரொம்ப பாதுகாப்பானது... 1 கோடி ரூபாய்க்கு வால்வோ கார் வாங்கிய பிரபல டிவி நடிகை... யார்னு தெரியுமா?

இந்த வகையில் வால்வோ எக்ஸ்சி90 காரும் மிகவும் பாதுகாப்பானது. உலகின் பல்வேறு அமைப்புகள், பாதுகாப்பு திறன்களுக்காக வால்வோ எக்ஸ்சி90 காரை பாராட்டியுள்ளன. அத்துடன் நீண்ட ஆயுட்காலத்திற்காகவும் பலரின் பாராட்டுக்களை வால்வோ எக்ஸ்சி90 கார் குவித்துள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

ரொம்ப பாதுகாப்பானது... 1 கோடி ரூபாய்க்கு வால்வோ கார் வாங்கிய பிரபல டிவி நடிகை... யார்னு தெரியுமா?

வால்வோ எக்ஸ்சி90 டி5 இன்ஸ்க்ரிப்ஷன் காரில், 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 4250 ஆர்பிஎம்மில் 235 பிஎச்பி பவரையும், 1750 ஆர்பிஎம்மில் 480 என்எம் டார்க் திறனையும் வாரி வழங்க கூடியது. இந்த இன்ஜின் உடன் 8 ஸ்பீடு கியர் பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு மட்டுமின்றி டிசைன் மற்றும் சொகுசு வசதிகளிலும், இந்த கார் அசத்துகிறது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Nia Sharma Buys New Volvo XC90 D5 Inscription - Here Are All The Details. Read in Tamil
Story first published: Saturday, January 16, 2021, 10:05 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X