செதுக்கன சிலை மாதிரி இருக்காங்க! அவங்களா இது! புதுசா வாங்கன காரை பாக்கறதா இல்ல அவங்கள பாக்கறதானே தெரியல!
இந்தியாவை பொறுத்தவரையில் திரைத்துறையை சேர்ந்த நடிகர்,நடிகைகள் மற்றும் இயக்குனர்கள் பலரும் சொகுசு கார்களை அதிகம் விரும்ப கூடியவர்களாக உள்ளனர். அதிலும் பாலிவுட் திரையுலகம் என்றால், சொல்லவே வேண்டாம். பாலிவுட் திரையுலகை சேர்ந்தவர்களின் சொகுசு கார்களின் பட்டியல் மிகப்பெரியதாக இருக்கும். இதற்கு நிகிதா டட்டாவும் (Nikita Dutta) விதிவிலக்கு அல்ல.
இவர் பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமாக உள்ள நடிகைகளில் ஒருவர் ஆவார். இவர் தற்போது புத்தம் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். அது மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்சி (Mercedes-Benz GLC) கார் ஆகும். இந்த கார் சொகுசு எஸ்யூவி (Luxury SUV) ரகத்தை சேர்ந்தது. எனவே இந்த காரில் அதிநவீன சொகுசு வசதிகளுக்கு கொஞ்சம் கூட பஞ்சமே இல்லை. இதில், 11.9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், விமானங்களை போன்ற ஏர் வெண்ட்கள், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்றவை குறிப்பிடத்தக்கவை ஆகும்.

இதுதவிர 360 டிகிரி கேமரா, ஏர் ப்யூரிஃபையர், பனரோமிக் சன்ரூஃப் மற்றும் ஆம்பியண்ட் லைட்டிங் போன்ற வசதிகளும், மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்சி காரில் வழங்கப்பட்டுள்ளன. பாதுகாப்பை பொறுத்தவரையில், 7 ஏர்பேக்குகள் மற்றும் அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) போன்றவை மிகவும் முக்கியமான வசதிகளாக உள்ளன.
இவை எல்லாம் தவிர, க்ரவுண்ட் க்ளியரன்ஸை 20 மிமீ உயர்த்த கூடிய வகையிலான ஏர் சஸ்பென்ஸன் சிஸ்டமும், இந்த சொகுசு காரில் கொடுக்கப்பட்டுள்ளது. செயல்திறனை பொறுத்தவரையில், பெட்ரோல் மற்றும் டீசல் என 2 வகையான இன்ஜின் ஆப்ஷன்களும் இந்த காரில் இடம்பெற்றுள்ளன.

அவை 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் ஆகியவை ஆகும். இதில், பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 254 பிஹெச்பி பவர் மற்றும் 400 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் டீசல் இன்ஜினானது, அதிகபட்சமாக 194 பிஹெச்பி பவர் மற்றும் 440 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டிருக்கிறது. இந்த 2 இன்ஜின்களுடனும் 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. இது கூடுதலாக 22.6 பிஹெச்பி பவர் மற்றும் 200 என்எம் டார்க் திறனை உருவாக்கும்.
இந்த 2 இன்ஜின்கள் உடனும், 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சொகுசு எஸ்யூவி காரில், 4 மேட்டிக் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. எனவே இன்ஜின் உருவாக்கும் சக்தியானது, காரின் 4 சக்கரங்களுக்கும் செலுத்தப்படும்.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் இந்த காரின் ஆரம்ப விலை 74.45 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 75.45 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இந்த விலைக்கு இது மிகச்சிறந்த காராக கருதப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: நடிகை நிகிதா டட்டா, மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்சி காரின் எந்த வேரியண்ட்டை வாங்கியுள்ளார்? என்பது உறுதியாக தெரியவில்லை. எனினும் இந்த கார் நிகிதா டட்டாவிற்கு மிகவும் சௌகரியமான மற்றும் பாதுகாப்பான பயணத்தை வழங்கும் என நாம் உறுதியாக நம்பலாம்.


Click it and Unblock the Notifications








