கார் ஷோரூமுக்கு மனைவியுடன் வந்தது போத்தீஸ் ஓனரோட பையனா.. ரெண்டு பேரும் சேர்ந்து என்ன காரை வாங்கினாங்க தெரியுமா

தமிழ்நாட்டின் பிரபலமான துணிக் கடைகளில் போத்தீஸ்-ம் ஒன்றாகும். தென்னிந்தியா முழுக்க இந்த துணிக் கடை நெட்வொர்க் தற்போது பரவிக் காணப்படுகின்றது. இந்த துணிக் கடையை உருவாக்கியவர் ஸ்ரீவில்லிபுத்தூரை பூர்வீகமாகக் கொண்ட கேவி போத்தி மூப்பனார் என்பது குறிப்பிடத்தகுந்து. ஆரம்பத்தில் சைக்கிளில் சென்றே இவர் துணிகளை விற்று வந்தார். ஆனால், இப்போது தமிழகம், கேரளா என தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளில் போத்தீஸ் ஜவுளிக் கடை செயல்பட்டு வருகின்றது. இத்தகைய ஜாம்பவான் ஜவுளிக் கடையைச் சேர்ந்தவரே நிலேஷ் போத்தி.

இவரே தன்னுடைய மனைவி ரிஷி கிருஷ்ணா உடன் கார் ஷோரூமுக்கே சென்று புதிய ஆடம்பர கார் ஒன்றை வாங்கி இருக்கின்றார். இங்கிலாந்து நாட்டு கார் தயாரிப்பு நிறுவனமான லேண்ட் ரோவர் (Land Rover)ன் அசத்தலான ஆடம்பர கார் மாடலான ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் (Range Rover Sport)-டையே இந்த ஜோடி வாங்கி இருக்கின்றது.

Nilesh pothys acquires range rover sport usv

இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் மற்றும் திரைப் பிரபலங்களின் மிகவும் பிரியமான கார் மாடலாக இந்த ஆடம்பர கார் மாடல் காட்சியளிக்கின்றது. இதையே போத்தீஸ் குழுமத்தைச் சேர்ந்த நிலேஷ் போத்தி வாங்கி இருக்கின்றார். இதன் ஒரே ஒரு யூனிட்டே ரூ. 2 கோடி வரையில் விற்பனைச் செய்யப்படுகின்றது.

இது ஆரம்ப நிலை தேர்வின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இதன் உயர் நிலை தேர்வு ரூ. 3 கோடிக்கும் அதிகமான விலையில் விற்கப்படுகின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த விலைக்கு ஏற்ப ஆடம்பர அம்சங்களை மிக தாராளமாக தன்னுள் இந்த கார் மாடல் கொண்டிருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.

இதேபோல், தொழில்நுட்ப வசதிகளும் மிக தாராளமாக இந்த காரில் இடம் பெற்றிருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. 13.1 அங்குல பிவி ப்ரோ டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 13.7அங்குல டிஜிட்டல் டிரைவர்களுக்கான திரை, ஹெட்ஸ்-அப் திரை, ஏர் ப்யூரிஃபையர் மற்றும் 29 ஸ்பீக்கர்கள் கொண்ட மெரிடியன் சவுண்ட் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன.

மேலும், இதன் கதவுகள் மெதுவாக மூடும் வசதியைக் கொண்டிருக்கின்றது. இந்த கதவுகள் வெளிப்புற இரைச்சலை தவிர்க்கும் வசதியைக் கொண்டதாக உள்ளது. ஆகையால், அமைதியான பயண மிகவும் சிறப்பாக கிடைக்கும். இத்துடன், மிக சௌகரியமான ரைடு அனுபவத்தை வழங்கும் பொருட்டு டைனமிக் ஏர் சஸ்பென்ஷன், அடாப்டீவ் க்ரூஸ் கன்ட்ரோல் போன்ற அம்சங்களும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன என்பது கவனிக்கத்தகுந்தது.

Pothys group land rover range rover sport

எனவே, இந்த காருக்குள் அமர்ந்து பயணிக்கும் போது கரடு - முரடான பாதையில் கார் பயணித்தாலும் அசௌகரியமான அனுபவம் ஏற்படாது. எஞ்சினைப் பொருத்த வரை ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் சொகுசு காரில் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய ஆப்ஷன்களில் விற்பனைக்கு வழங்கப்படுகின்றன.

Take a Poll

3.0 லிட்டர் பெட்ரோல் டைனமிக் எஸ்இ மற்றும் 3.0 லிட்டர் டீசல் டைனமிக் எஸ்இ ஆகியவையே அவை ஆகும். முதல் எஞ்சின் அதிகபட்சமாக 394 பிஎச்பி பவரையும், 550 என்எம் டார்க்கையும் உருவாக்கும் திறன் கொண்டது. இரண்டாவது எஞ்சின் அதிகபட்சமாக 346 பிஎச்பி மற்றும் 700 என்எம் டார்க்கை உருவாக்கும். இரண்டிலும் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் 4வீல் டிரைவ் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இத்தகைய ஆடம்பர காரையே நிலேஷ் போத்தி மற்றும் ரிஷி கிருஷ்ணா ஆகியோர் வாங்கி இருக்கின்றனர். இவர்களுக்கு சென்ற ஆண்டிலேயே திருமணம் நடைபெற்றது என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த புதிய கார் அவர்களின் பயணத்தை ரம்மியமானதாகவும், சொகுசானதாகவும் மாற்ற பெரும் உதவியாக இருக்கும் என நாங்கள் நம்புகின்றோம்.

FAQs
லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் எவ்வளவு மைலேஜ் தரும்?

இந்த கார் மாடல் லிட்டர் ஒன்றிற்கு 7.24 கிமீ முதல் 12.65 கிமீ வரையில் மட்டுமே மைலேஜ் தரும்.

லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் காரின் டாப் ஸ்பீடு எவ்வளவு?

இந்த கார் மணிக்கு 234 கிமீ முதல் 242 கிமீ வேகம் வரை ஓடும் திறன் கொண்டது. வேரியண்ட் மற்றும் எடிசனைப் பொருத்து வேக திறன் மாறுபடும்.

ரேஞ்ச் ரோவர் என்னென்ன மாடல்களில் விற்பனைக்கு கிடைக்கின்றது?

இந்தியாவில் பன்முக வெர்ஷன்களில் இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ரேஞ்ச் ரோவர், ரேஞ்ச் ரோவர் எவோக், ரேஞ்ச் ரோவர் வெலார் மற்றும் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் ஆகியவையே அவை ஆகும்.

DriveSpark Automotive

More from DriveSpark

Article Published On: Saturday, March 15, 2025, 17:13 [IST]
English summary
Nilesh pothys and rishi krishna celebrate new luxury acquisition with range rover sport
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+