நீலகிரி மலை பாதையில் விரைவில் ஓட இருக்கும் ஹைட்ரஜன் பவர்டு ரயில்கள்.. அப்போ டாய் டிரெயினை இனி பார்க்க முடியாதா

இந்தியன் ரயில்வேஸ் விரைவில் 'ஹைட்ரஜன் ஃபார் ஹெரிடேஜ்' (Hydrogen for Heritage) எனும் திட்டத்தின்கீழ் நாட்டில் உள்ள பாரம்பரியமான மலை ரயில் பாதைகளில் ஹைட்ரஜனை எரிபொருளாகக் கொண்டு இயங்கும் ரயில் (Hydrogen Powered Train)-களைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதன்படி, ஒட்டுமொத்தமாக 8 பாரம்பரியமான மலை பாதை வழித்தடங்களில் மொத்தமாக 35 ஹைட்ரஜனில் இயங்கும் ரயில்கள் பயன்பாட்டிற்குக் களமிறக்கப்பட உள்ளன. இந்த எட்டு இடங்களில் நீலகிரி மலைத்தொடர் ரயில்பாதையும் ஒன்று என கூறப்படுகின்றது. மிகப் பெரிய வரலாற்றைக் கொண்டிருக்கும் மலை ரயில் பாதையே இதுவாகும்.

Nilgiri mountain railways

குறிப்பாக, உலகின் மிகவும் அழகிய மலைத்தொடர்களில் ஒன்றாக நீலகிரி இருக்கின்றது. புதிதாக திருமணம் செய்தவர்கள் தொடங்கி நண்பர்களுடன் டூர் செல்ல விருபம்புவோர்களுக்கு மிக சிறந்த டூரிஸ்ட் ஸ்பாட்டாக நீலகிரி உள்ளது. குறிப்பாக, ஊட்டிக்கு செல்லும் ரயிலில் பயணிக்க வேண்டும் என்பதற்காகவே பலர் அங்கு சுற்றுலா சென்றுக் கொண்டிருக்கின்றனர்.

இங்கு 'ரேக்' ரக ரயிலே பயன்பாட்டில் உள்ளது. இந்தியாவில் பயன்பாட்டில் இருக்கும் ஒரே ரேக் ரயில் இதுவே ஆகும். சிறுவர்கள் மத்தியில் இந்த ரயிலுக்கு அதிக வரவேற்பு உண்டு. ஏன் பெரியவர்களுக்கும் இந்த ரயில் மிகவும் பிடிக்கும். மிகவும் குட்டியாகவும், ஆமை வேகத்தில் இந்த ரயில் ஊர்ந்து செல்லும்.

இருப்பினும், இந்த ரயிலில் பயணிக்க பலர் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். இதற்கு ரயிலின் பாரம்பரியமான வழித் தடமே காரணமாக இருக்கின்றது. அது பயணிக்கும் பாதை இயற்கை எழில் கொஞ்சும் மலைப் பாதை ஆகும். ஒட்டுமொத்தமாக 46 கிமீ தூரம் கொண்டதே இந்த ரயில் பாதை ஆகும்.

ஆனால், இந்த தூரத்தை கடப்பதற்கு, அதாவது, ஊட்டியின் டாப் பாயிண்டை அடைவதற்கு அந்த ரயில் கிட்டத்தட்ட 5 மணி நேரத்தை எடுத்துக் கொள்ளும். மிகவும் ஆபத்தான ரூட் இது என்பதால் மழை காலத்தில் இந்த ரயில் இயக்கத்திற்கு அனுமதி கிடையாது. 1000 மிமீ நீளம் கொண்ட மீட்டர் கேஜ் ரயில் பாதையிலேயே இந்த ரயில் இயங்கிக் கொண்டிருக்கின்றது.

தற்போது இந்த வரலாற்று சிறப்புமிக்க ரயில் பாதையிலேயே ஹைட்ரஜனில் இயங்கும் ரயில் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட உள்ளது. ஆகையால், தற்போது பயன்பாட்டில் இருக்கும் ரேக் ரக பயன்பாட்டில் இருந்து அகற்றப்படுவதற்கான சூழல் உருவாகி இருக்கின்றது. ஹைட்ரஜன் ரயில்கள் ஓர் ஈகோ ஃப்ரண்ட்லி ரயில் ஆகும்.

நீலகரி மலைப் பாதையில் மட்டும் இல்லைங்க மாதேரன் மலை ரயில், டார்ஜிலிங் இமயமலை, கல்கா சிம்லா, காங்க்ரா பள்ளத்தாக்கு, பில்மோரா வாகாய், படபல்பனி கலகுண்ட், மார்வார்-கோரம் ஆகிய மலை ரயில் பாதைகளிலும் ஹைட்ரஜனில் இயங்கும் ரயில் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது.

இந்தியாவில் உள்ள மலைப் பாதை ரயில்களை நவீன மயமாக்கும் நோக்கிலும், கூடுதல் பசுமையானதாக மாற்றும் நோக்கிலும் இந்த முயற்சியில் இந்தியன் ரயில்வேஸ் களமிறங்கி இருப்பது குறிப்பிடத்தகுந்தது. ஒரு ரயிலை ரூ. 80 கோடி மதிப்பீட்டில் உருவாக்க இருக்கின்றனர். இதேபோல், நில கட்டமைப்பை ரூ. 70 கோடியில் உருவாக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

இதுமட்டுமில்லைங்க, டீசலில் இயங்கும் ரயில் எஞ்ஜின்களை மின்சார எஞ்ஜினாக கன்வெர்ட் அல்லது ரெட்ரோஃபிட் செய்யும் முயற்சியையும் சோதனையோட்டமாக இந்தியன் ரயில்வேஸ் தொடங்க இருக்கின்றது. இதற்காக ரூ. 111.83 கோடி ஒதுக்கப்பட உள்ளது. இதனால் வடக்கு ரயில்வேயின் ஜின்ட்-சோனிபட் பிரிவு பலனடைய உள்ளது. ஆறு பெட்டிகள் கொண்ட ஹைட்ரஜன் ரயில்களே விரைவில் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட உள்ளன. 2023-24 ஆம் ஆண்டிற்குள் இந்த ரயில்கள் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என கூறப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒரு சிலர் மத்தியில் இந்த தகவல் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும், பலரிடையே புதிய ஹைட்ரஜன் ரயில் வருகை சோகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. டாய் டிரெயின் நம்மை பயன்பாட்டில் இருந்து அகற்றப்படும் சூழல் உருவாகி இருப்பதே இதற்கு காரணம் ஆகும்.

Article Published On: Tuesday, August 15, 2023, 9:23 [IST]
English summary
Nilgiri mountain railways soon to get hydrogen powered trains
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+