சாகச பயண பிரியர்களுக்காக உருவாக்கப்பட்ட ஓர் அசத்தலான மைக்ரோ பஸ்!
சாகச பயண பிரியர்களின் எதிர்பார்ப்புகளையும், தேவைகளையும் கச்சிதமாக பூர்த்தி செய்யும் விதத்தில், அனைத்து சாலைகளிலும் செல்வதற்கான ஓர் மைக்ரோ பஸ்சின் உருமாதிரியை பிரேசில் நாட்டை சேர்ந்த எடுவார்டோ கால்வனி என்ற டிசைனர் உருவாக்கியிருக்கிறார்.
சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், சாகச பயணங்களுக்கு ஏதுவான அம்சங்கள் கொண்ட இந்த மைக்ரோ பஸ்சுக்கு நிம்பஸ் என்று பெயரிட்டுள்ளார். இந்த அசத்தலான மைக்ரோ பஸ் கான்செப்ட மாடலின் படங்களையும், கூடுதல் விபரங்களையும் ஸ்லைடரில் காணலாம்.

இருக்கை வசதி
இந்த மைக்ரோ பஸ்சில் 5 பேர் பயணிப்பதற்கான மிக தாராளமான இடவசதியை வழங்கும். அத்துடன், பயணத்தின்போது இயற்கை அழகை கண்ணார கண்டு களிப்பதற்கு ஏதுவாக மிக விசாலமான கண்ணாடி ஜன்னல்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

ஆசுவாசமான பயணம்
இந்த மைக்ரோ பஸ்சை ஆட்டோ பைலட் எனப்படும் தானியங்கி கட்டுப்பாட்டு முறையிலும் செலுத்த முடியும். எனவே, ஓட்டுபவர் சோர்வு ஏற்படும்போது, ஆட்டோ பைலட் சிஸ்டத்தில் வைத்து விட்டு இயற்கையை கண்டு ரசித்தவாறே, களைப்பை போக்கிக் கொள்ளலாம்.

ஹைபிரிட் சிஸ்டம்
இந்த மைக்ரோ பஸ்சில் 180 எச்பி பவரை அளிக்க வல்ல சக்திவாய்ந்த மின் மோட்டாரும், சிறிய பெட்ரோல் எஞ்சினும் இருக்கிறது. பொருத்தப்பட்டிருக்கிறது. லித்தியம் அயான் பேட்டரியின் மூலமாக இந்த மைக்ரோ பஸ் இயக்கப்படும். மேலும், சூரிய ஒளி மின்சார உற்பத்தி மூலமாகவும், பிரேக் ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றி சேமிக்கும் வசதியும் இருப்பதால், பயணங்கள் தடையின்றி இருக்கும்.

செயல்திறன்
மணிக்கு 130 - 160 கிமீ வேகம் வரை அதிகபட்சமாக தொடும் திறன் கொண்டது. 0- 100 கிமீ வேகத்தை வெறும் 13 வினாடிகளில் எட்டிவிடுமாம்.

வசதிகள்
வைஃபை, 4 யுஎஸ்பி போர்ட்டுகள், 12 வோல்ட் சார்ஜர், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், சாய்மான இருக்கைகள் என்று வசதிகளை அடுக்கிக் கொண்டே செல்லலாம். இந்த மைக்ரோ பஸ்சில் பயணிகள் பாதுகாப்பிற்காக 6 ஏர்பேக்குகள் மற்றும் சைடு புரொடெக்ஷன் பார்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

எடை
நிம்பஸ் மைக்ரோ பஸ் கான்செப்ட் 1,620 கிலோ எடை கொண்டது. பயணிகளுக்கான இடவசதி மட்டுமின்றி, பொருட்களை வைத்து எடுத்துச் செல்வதற்கும் பல்வேறு இடவசதிகளை அளித்துள்ளது.

உற்பத்தி
இதுவரை உற்பத்திக்கு கொண்டு செல்வதற்கான அறிவிப்பு வெளியிடப்படவில்லை. ஆனால், இது பயண விரும்பிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


Click it and Unblock the Notifications