அம்பானி, அதானி போல பெரிய பணக்காரர்.. லோக்கல் டிரெயினில் பயணிக்க வைத்த மும்பை.. எப்பேர்பட்ட மனுசன் தெரியுமா!!

இந்தியாவில் உள்ள மாபெரும் பணக்காரர்களில் ஒருவர் மும்பை லோக்கல் டிரெயினைப் பயன்படுத்தி பயணிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகிக் கொண்டிருக்கின்றது. இவர் இப்படி பொதுப் போக்குவரத்தைப் பயணிப்பதற்கான காரணம் என்ன? ஏன் இந்த நிலைமைக்கு அவர் தள்ளப்பட்டார் என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவர் நிரஞ்சன் ஹிரநந்தனி. ஹிரநந்தனி குழுமத்தின் மேனேஜிங் டைரக்டர் இவர் ஆவார். இவரின் இப்போதைய சொத்து மதிப்பு 150 கோடி அமெரிக்க டாலர்கள் என கூறப்படுகின்றது. இத்தகைய பெரும் பணக்காரரே கூட்ட நெரிசல் அதிகம் காணப்படும் மும்பை லோக்கல் ரயிலில் தற்போது பயணித்து இருக்கின்றார்.

Niranjan hiranandani uses local train to skip mumbai traffic

ரியல் எஸ்டேட் என பல்வேறு பிசினஸ்களில் இவர் ஈடுபட்டு வருகின்றார். இவரிடத்தில் ஏகப்பட்ட விலை உயர்ந்த கார்கள் பயன்பாட்டில் உள்ளன. இவர் நினைத்தால் இப்போது மாபெரும் வாகன உற்பத்தி நிறுவனத்தையே உருவாக்க முடியும். இத்தகைய மாபெரும் கோடீஸ்வரர், பொதுமக்கள் பயன்படுத்தும் லோக்கல் டிரெயினை பயன்படுத்தி இருப்பதே பெருத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.

இதனால் அவர் ஏதோ ஏழையாகிவிட்டார் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். கடுமையான போக்குவரத்தை நெரிசல் தவிர்க்கும் பொருட்டே அந்த கோடீஸ்வரர் லோக்கல் ரயிலை பயன்படுத்தி பயணித்து இருக்கின்றார். கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கும் இந்திய நகரங்களில் மும்பையும் ஒன்றாகும்.

Niranjan hiranandani travels by local train

சென்னைப் போக்குவரத்து நெரிசலையே பெருசாக பேசிக் கொண்டிருக்கும் நாம், இங்குள்ள போக்குவரத்து நெரிசலை எல்லாம் பார்த்தால் மீண்டும் அந்த பக்கமே தலை வைத்து படுக்க மாட்டோம். அந்த அளவிற்கு மிக மோசமான போக்குவரத்து நெரிசலே அங்கு நிலவிக் கொண்டிருக்கின்றது. இந்த போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்கும் பொருட்டே ஹிரநந்தனி பொது போக்குவரத்தை பயன்படுத்தி இருக்கின்றார்.

இந்த வீடியோவை ஹிரநந்தனி-யே அவருடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருக்கின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது. மும்பையில் போக்குவரத்து நெரிசலைப் போலவே, அதன் ரயில் சேவையும் நெரிசல் மிகுந்துக் காணப்படும். குறிப்பாக, லோக்கல் ரயில்களில் பயணிப்பதற்கு பதிலாக நடந்தே பயணித்துவிடலாம் என்று சொல்லும் அளவிற்கு அங்குள்ள லோக்கல் ரயிலும் மிகுந்த நெரிசலுடன் காணப்படும்.

Billionaire hiranandani travels by local train

இந்த மாதிரியான சூழலிலேயே ஹிரநந்தனி லோக்கல் ரயிலை பயன்படுத்தி இருக்கின்றார். அதிர்ஷ்டவசமாக அவர் பயணித்த நேரத்தில் ரயில் பெரிய அளவில் நெரிசல் இல்லாமல் காணப்பட்டு இருக்கின்றது. ஆகையால், அவர் தனி இருக்கையில் ஹாயாக அமர்ந்து, செல்போனில் கவனத்தைச் செலுத்தியபடி பயணித்து இருக்கின்றார்.

மும்பையில் உள்ள லோக்கல் ரயில்கள் மணிக்கு 35 கிமீ தொடங்கி 50 கிமீ வேகத்தில் இயக்கப்படுகின்றன. மும்பை வாசிகள் பலர் பட்ஜெட்டிற்குள் டிராவல் செய்யவும், போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காகவும் ரயில்களைப் பயன்படுத்தி வருகின்றனர். பொதுப்போக்குவரத்தை பயன்படுத்துவதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது குறையும், அதுதவிர, காற்று மாசுபாடும் குறையக் கூடும்.

Mumbai local train

இதனால்தான், உலக சில நாடுகள் தனிநபர் வாகனங்களுக்கு பதிலாக பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்கின்றன. ஆகையால், பெரிய பெரிய பணக்காரர்கள்கூட பொதுப் போக்குவரத்தில் அடிக்கடி தென்பட நேரிடுகின்றது. ஆனால், இந்தியாவில் இந்த மாதிரியான நிகழ்வு அரிதினும் அரிதாகவே நடக்கின்றது. ஆட்டோக்களை பிரபலங்கள் பயன்படுத்தினாலே பெரிய பேசு பொருளாக மாறிவிடுகின்றது.

ஹிரநந்தனி மட்டுமில்லைங்க பொதுப்போக்குவரத்தை இதுபோன்று இன்னும் பலர் நம் நாட்டில் பயன்படுத்தி இருக்கின்றனர். சமீபத்தில் நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆன்டனி, சென்னை மெட்ரோ ரயிலைப் பயன்படுத்தினார். இதை பயன்படுத்திய பின்னர், உலக நாடுகளில் உள்ள ரயில் போக்குவரத்து சேவைக்கு இணையானதாக நம்முடைய சென்னை மெட்ரோ ரயில் இருப்பதாக அவர் பாராட்டினார்.

இதுவே அவர் சென்னை மெட்ரோ ரயிலில் பயணிப்பது முதல் முறையாகும். இதேபோல், கடந்த சில தினங்களுக்கு முன்னர் பழம்பெரும் நடிகை ஹேம மாலினி மெட்ரோ ரயிலில் பயணித்திருந்தார் என்பது கவனிக்கத்தகுந்தது. இவரும் மெட்ரோ சேவையை புகழ்ந்து தள்ளினார். மேலும், அவரின் அந்த பணத்தின்போது பலர் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய அரசாங்கம் பொதுப்போக்குவரத்து அனைத்தையும் மின் மயமாக்கும் பணியில் களமிறங்கி இருக்கின்றது . காற்று மாசுபாட்டைக் குறைப்பதே அதன் நோக்கமாகும். இதுமட்டுமில்லைங்க, பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாட்டைக் குறைக்கும் முயற்சியிலும் அரசு ஈடுபட்டு வருகின்றது. இதற்கு நாமும் நம்முடைய பங்களிப்பை வழங்க வேண்டும் எனில் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தலாம் அல்லது மின்சார வாகனங்களை பயன்படுத்தத் தொடங்கலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, January 3, 2024, 18:30 [IST]
English summary
Niranjan hiranandani uses local train to skip mumbai traffic
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X