வீட்டிற்கே தேடி வந்த விலையுயர்ந்த கார்... அருகில் நிற்பவர் இவ்வளவு பெரிய ஆளா?

கோடிகளில் விலைமிக்க கார்களை வீட்டிற்கே தேடி வந்து டெலிவிரி செய்வதை பரவலாக நிறைய பகுதிகளில் பார்க்க முடியும். ஆனால், சமீப காலமாக விலையுயர்ந்த கார்களையும் ஷோரூமுக்கே நேரில் வந்து டெலிவிரி எடுப்பதை பல செல்வந்தர்கள் விரும்ப ஆரம்பித்துள்ளனர். ஏனெனில், காரை டெலிவிரி எடுக்கும் நிகழ்வை வீடியோவாக காட்சிப்படுத்தி அதனை தங்களது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு விளம்பரம் தேடி கொள்ள நினைக்கின்றனர். இருப்பினும், சிலர் இப்போதும் கார் ஹோம் டெலிவிரியையே விரும்புகின்றனர். அந்த வகையில் இங்கு ஒரு செல்வந்தருக்கு அவர் புக் செய்த விலையுயர்ந்த மஸராட்டி கார் அவரது வீட்டிற்கே வந்து டெலிவிரி செய்யப்பட்டுள்ளது.

சொகுசு கார்கள் என்றால் நம் நாட்டில் பெரும்பாலானோர் வாங்குவது மெர்சிடிஸ்-பென்ஸ், பிஎம்டபிள்யூ, ஆடி கார்களையே ஆகும். அதனை காட்டிலும் விலையுயர்ந்த கார் என்றால் ரோல்ஸ்-ராய்ஸ் கார்களை வாங்குகின்றனர். ஆனால், மஸாராட்டி போன்ற லக்சரி கார்களை இந்தியாவில் வாங்குபவர்கள் என்று பார்த்தால் குறைவே.

nirvaan birla buys maserati levante

இதனால், ரோல்ஸ்-ராய்ஸ் கார்களை கூட சாலையில் காண முடிகிறது. ஆனால், மஸாராட்டி போன்றதான கார்களை அரிதாக கூட காண முடிவதில்லை. இந்த நிலையில், பிர்லா குடும்பத்தினர் புதிய மஸராட்டி லெவாண்டே ஜிடி ஹைப்ரீட் லக்சரி எஸ்யூவி காரை டெலிவிரி எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ பெடல் மஸராட்டி இந்தியா என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோவில், பிர்லா குடும்பத்தின் இளம் தொழிலதிபரான நிர்வன் பிர்லா புதிய மஸராட்டி லெவண்டே ஜிடி காரை டெலிவிரி பெற்றுள்ளார். யாஷ் பிர்லா குழுமத்தின் தலைவரும், பெரும் தொழிலதிபருமான யாஷ் பிர்லாவின் மகன் நிர்வன் பிர்லா ஆவார். ஏற்கனவே கூறியதுபோல், இந்தியாவில் பெரும்பாலும் நிறைய பேர் மஸாராட்டி கார்களை வாங்குவதில்லை. அதிலிலும், மஸாராட்டி லெவண்டே காரை வைத்திருப்பவர்களை இந்தியாவில் விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவிற்கு மிகவும் சிலர் மட்டுமே உள்ளனர்.

nirvaan birla buys maserati levante

பிர்லா குடும்பத்தினர் வாங்கியுள்ள புதிய மஸாராட்டி லெவண்டே காரின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.1.45 கோடி என்கிற அளவில் உள்ளது. அதிகப்பட்சமாக அதன் விலை ரூ.1.60 கோடி வரையில் உள்ளது. உண்மையை சொல்ல வேண்டுமென்றால், இந்தியாவில் விலை குறைவான மஸாராட்டி காராக லெவண்டே விளங்குகிறது. இது ஒரு விலை குறைவான மஸாராட்டி ஹைப்ரீட் கார் ஆகும்.

இந்த காரில் பவர்ஃபுல்லான வி6 மற்றும் வி8 என்ஜின் ஆப்ஷன்கள் கொடுக்கப்படுகின்றன. அதாவது, லக்சரியான தோற்றம், சொகுசான பயணம் மற்றும் பவர்ஃபுல்லான என்ஜின் என அனைத்திலும் உயர் தரத்திலானதாக மஸராட்டி லெவண்டே ஜிடி ஹைப்ரீட் கார் விளங்குகிறது. இத்தாலி நாட்டை சேர்ந்த ஸ்போர்ட்ஸ் கார் நிறுவனமான மஸராட்டி அதன் முதல் எஸ்யூவி ரக காராக லெவண்டேவை சில வருடங்களுக்கு முன்னர் அறிமுகம் செய்தது.

nirvaan birla buys maserati levante

பிர்லா குடும்பத்தின் நிர்வன் இந்த லக்சரி எஸ்யூவி காரை சில்வர் நிறத்தில் வாங்கியுள்ளார். காரின் முன்பக்க ஃபெண்டரில் 3 ஏர் துளைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதேபோல், 20 இன்ச்சில் அலாய் சக்கரங்கள் இந்த காரில் பொருத்தப்படுகின்றன. நிர்வன் பிர்லாவின் காரை வீடியோவில் நெருக்கமாக காண முடியவில்லை. ஆதலால், என்னென்ன மாதிரியான அம்சங்களுடன் இந்த மஸராட்டி காரை அவர் வாங்கியுள்ளார் என்பதை அறிய முடியவில்லை.

இருப்பினும், காரின் கேபினை சிவப்பு நிறத்தில் நிர்வன் தேர்வு செய்திருப்பதை காண முடிகிறது. ஏனெனில், இந்த மஸராட்டி காருக்குள் நிர்வன் அமர்ந்திருக்கும் காட்சிகளும் வீடியோவில் இடம்பெற்றுள்ளன. லெவண்டே ஜிடி ஹைப்ரீட் காரில் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 325 பிஎச்பி மற்றும் 450 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், இவ்வாறு லக்சரி கார்களை ஹோம் டெலிவிரி செய்வது சமீப காலமாக குறைந்துவிட்டது. இருப்பினும், நிர்வன் பிர்லா போன்ற மக்கள் கூட்டத்தை தவிர்க்க நினைப்பவர்கள் இவ்வாறு காரை ஹோம் டெலிவிரி பெறுகின்றனர். இத்தகையவர்களுக்காக ஹோம் டெலிவிரி வசதியை மஸராட்டி போன்ற லக்சரி கார் நிறுவனங்கள் வழங்குகின்றன.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 9, 2024, 17:04 [IST]
English summary
Nirvaan birla buys maserati levante gt hybrid car check price features all details here
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X