அவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தும், டோக்கியோவில் நம் இந்தியருக்கு நடந்த கதி! மானமும் போச்சு... பதவியும் போச்சு
ஜப்பானிய நிறுவனமான நிஸானின் முன்னாள் முதன்மை செயலதிகாரியின் வீட்டில், சிஇஓ மகடோ உச்சிடா ஸ்பை கேமராக்களை பொருத்தி அவரை வேவு பார்ப்பதாக ஓர் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களையும், எதற்காக இந்த உளவு வேலை என்பதையும் இனி விரிவாக பார்க்கலாம்.
ஜப்பானின் டோக்கியோவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் நிஸானின் முதன்மை செயலதிகாரியாக இந்தியாவை சேர்ந்த அஷ்வனி குப்தா செயல்பட்டு வந்தார். ஆனால் அதன்பின் நிறுவனத்திற்குள் நடைபெற்ற அதிரடி மாற்றங்களினால் அஷ்வனி குப்தா தான் வகித்துவந்த பதவியை இழக்க வேண்டியதாகி விட்டது.

இந்த நிலையில், அமெரிக்க சட்ட நிறுவனமான டாவிஸ் போல்க் & வார்ட்வெல் நடத்திய ஆய்வில் நிஸான் நிறுவனம் தனது முன்னாள் முதன்மை செயலதிகாரியை நோட்டமிட்டு வருவதாக அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், டோக்கியோவில் உள்ள அஷ்வனி குப்தாவின் வீட்டை இரு செக்யூரிட்டி கேமராவை வைத்து நிஸான் நிறுவனத்தின் சிஇஓ மகடோ உச்சிடா உளவுப் பார்த்து வருவதாக தெரிவித்துள்ளது.
இதில் ஒரு கேமராவை தனியார் பாதுகாப்பு நிறுவனம் ஒன்று கண்காணிக்க, மற்றொன்றை நிஸானின் பாதுகாப்பு குழுவினரே நேரடியாக கண்காணித்து வந்துள்ளனர். நிஸான் முதன்மை செயலதிகாரி பொறுப்பில் இருந்து கடந்த ஜூன் 27ஆம் தேதி அஷ்வனி குப்தா நீக்கப்பட்டார். தனது பதவி காலத்தில் கடைசி நாளில், அதாவது ஜூன் 27ஆம் தேதியன்றே தான் உளவுப் பார்க்கப்படுவது அவருக்கு தெரியவந்துள்ளது.

நிஸானின் மூத்த துணை தலைவர் ஹரி நாடா அவர்கள் உச்சிடா குப்தாவை உளவுப் பார்ப்பதாக பிரபல தனியார் ஊடக நிறுவனம் ஒன்றிற்கு கடிதம் அனுப்பியதற்கு அடுத்தே இதுகுறித்து விசாரணைகள் துவங்கின. குப்தாவை காட்டிலும் அந்நிய செலவாணி விஷயங்களில் சிறப்பாக செயல்பட சிஇஓ மகடோ உச்சிடா இந்த செயலை செய்தார் என கூறப்பட்டாலும், நிஸான்-ரெனால்ட் கூட்டணி உறவை தொடர்வதில் உள்ள பிரச்சனைகளை நிறுவனத்தில் தாக்கல் செய்ததே இதற்கு காரணமாகும்.
முன்னதாக, பெண் பணியாளரிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறி நிறுவனத்தின் தணிக்கை குழுவில் இருந்து விலகுமாறு குப்தாவிடம் கேட்கப்பட்டதாகவும் நாடா தெரிவித்து இருந்தார். அதன்பின் கடந்த ஜூன் 16ஆம் தேதி நிறுவனத்தின் முதன்மை செயலதிகாரி மாற்றப்படுவதாக அறிவிப்பு வெளிவந்தது. அதன்படி கடந்த ஜூன் 27ஆம் தேதியோடு தான் வகித்துவந்த அந்த பொறுப்பில் இருந்து குப்தா விலகினார்.

இவ்வாறு நிஸான் நிறுவனத்தில் தற்சமயம் பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகின்றன. இந்த ஜூன் மாத துவக்கத்தில் கூட நிஸானின் முன்னாள் சிஇஓ சார்லோஸ் கோசன் நிறுவனத்திற்கு எதிராக உரிமை கோரி வழக்கு தொடர்ந்தார் என்பது என்பது குறிப்பிடத்தக்கது. ரெனால்ட் நிறுவனத்தின் பணத்தை தனது சொந்த பயன்பாட்டிற்காக பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டு சார்லோஸ் கோசன் சிஇஓ பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது கூடுதல் தகவல்.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: நிஸான், முன்னணி ஜப்பானிய ஆட்டோமொபைல் நிறுவனம் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் சமீப காலமாக பல இன்னல்களை சந்தித்து வருகிறது. இது நிறுவனத்தின் செயல்பாடுகளிலும் எதிரொலிக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். குறிப்பாக, நமது இந்திய சந்தையில் மேக்னைட்டை தவிர்த்து பெரியதாக எந்த நிஸான் காரும் விற்பனையாகுவதில்லை. இந்த நிலையை மாற்றும் முயற்சியிலும் நிஸான் ஈடுப்படுவது போல் தெரியவில்லை.


Click it and Unblock the Notifications









