லக்கிமேன் யோகி பாபுக்கு பரிசாக கிடைத்த கார் இது தான்! இதை ஏன் அவ்வளவு ஸ்பெஷல்ன்னு நினைச்சாரு தெரியுமா?

நடிகர் யோகி பாபு நடித்த சமீபத்தில் வெளியான லக்கிமேன் திரைப்படத்தில் நிஸான் மேக்னெட் கார் ஒரு முக்கிய கதாபாத்திரமாக நடித்துள்ளது. இந்த காரை சுற்றி தான் படத்தின் கதையே நகருகிறது. இந்த படத்தை பார்த்த பலருக்கும் இந்த கார் குறித்து அறிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எழுந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

நடிகர் யோகி பாபு நடிப்பில் பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் லக்கி மேன். இந்த திரைப்படம் சமீபத்தில் தான் ஓடிடி தளங்களில் வெளியானது. இந்த படத்தை பார்த்த பலருக்கும் தற்போது நிஸான் மேக்னெட் காரை பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக எழுந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் அந்த திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரமாகவே இந்த நிஸான் மேக்னெட் கார் நடித்துள்ளது.

luckyman yogi babu car

லக்கிமேன் திரைப்படத்தில் நடிகர் யோகி பாபு ஒரு அதிர்ஷ்டம் இல்லாத மனிதராக நடித்திருப்பார். அவருக்கு வாழ்க்கையில் முதல் அதிர்ஷ்டமாக இந்த நிஸான் மேக்னெட் கார் பரிசாக கிடைக்கும் பரிசாக கிடைக்கும். இந்த காரை இவர் பயன்படுத்தி வரும்போது இவருக்கு தன் வாழ்வில் தொடர்ந்து பல நல்ல விஷயங்கள் நடக்கும். இந்த நேரத்தில் இவரது கார் தொலைந்து போகும். தொலைந்து போன கார் இவருக்கு மீண்டும் கிடைத்ததா என்பதே படத்தின் கதை!

இந்த நிஸான் மேக்னெட் கார் தற்போது மார்கெட்டில் விற்பனையாகும் சிறந்த எஸ்யூவி கார்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த கார் 999 சிசி இன்ஜின் திறன் கொண்டது. இந்த கார் அதிகபட்சமாக 78.63 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் கியர் ஆப்ஷன்கள் உள்ளன. இந்த காரில் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் மட்டுமே இருக்கிறது.

luckyman yogi babu car

இந்த கார் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 20 கிலோமீட்டர் மைலேஜ் கொடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காரின் இன்ஜின் திறன் 152 என்எம் டார்க் திறனாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காரின் இன்ஜின் மூன்று சிலிண்டர் இன்ஜினை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரில் அதிகபட்சமாக 40 லிட்டர் பெட்ரோல் வரை நிரப்பிக் கொள்ளும் வகையில் பெட்ரோல் டேங்க் உள்ளது.

இந்த காரில் அதிகபட்சமாக 5 பேர் பயணிக்க முடியும். இதுபோக இந்த காரின் முக்கிய அம்சங்களாக பவர் ஸ்டேரிங் பவர் விண்டோ, ஏபிஎஸ், டிரைவர் மற்றும் பயணிகளுக்கான ஏர்பேக், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த காரின் பிரேக்குகளை பொருத்தவரை முன்பக்கம் டிஸ்க் பிரேக்கும், பின்பக்கம் டிரம் பிரேக்கும் வழங்கப்பட்டுள்ளது.

luckyman yogi babu car

இந்த நிஸான் மேக்னெட் காரின் அளவுகளை பொருத்தவரை 3994 மிமீ நீளமும் 1758 மிமீ அகலமும் 1572 மிமீ உயரமும் 336 லிட்டர் பூட் இட வசதியும் 2500 மிமீ வீல் பேஸூம் இருக்கிறது. இந்த கார் ஒட்டுமொத்தமாக 1039 கிலோ எடை கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார் 5 டோர் கொண்ட எஸ்யூவி மாடல் காராக இருக்கிறது.

இந்த காரின் உட்புறத்தை பொருத்தவரை டூயல் டோன் டேஷ் போர்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இதுபோக டிஜிட்டல் ஓடோமீட்டர் வெளிப்புற வெப்பத்தை காட்டும் டிஸ்ப்ளே, டிஜிட்டல் கடிகாரம், லெதர் ஸ்டேரிங் வீல், டேகோ மீட்டர், உள்ளிட்ட அம்சங்கள் எல்லாம் இந்த காரின் உட்பகுதியில் இருக்கிறது.

இந்த காரின் வெளிப்புறத்தில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஹெட்லைட், முன்பக்க ஃபாக் லைட்டுகள் ,பவர் மூலம் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய பின்பக்க கண்ணாடி, எலெக்ட்ரானிக் மூலம் மடக்கி வைக்க கூடிய ரியர் வியூ மிரர், பின்பக்க கண்ணாடியில் டீப்பாகர்கள், பின்பக்க ஸ்பாய்லர், குரோம் கிரில்கள், வெளிப்பக்க ரியர் வியூ மிரரில் டர்ன் லைட், ரூப் ரெயில், எல்இடி டிஆர்எல் உள்ளிட்ட அம்சங்கள் இருக்கிறது.

இந்த காரின் பாதுகாப்பு அம்சங்களை பொறுத்தவரை இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக் அசிஸ்ட், சென்ட்ரல் லாக்கிங், பவர் டோர் லாக் சேஃப்டி, இரண்டு ஏர் பேக்குகள், சீட்டு பெல்ட் வார்னிங், டிராக்சன் கண்ட்ரோல், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய சீட்டுகள் டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம், ஆன்ட்டி தெஃப்ட் டிவைஸ், ஸ்பீட் அலர்ட், 360 டிகிரி கேமரா உள்ளிட்ட ஏராளமான அம்சங்கள் இருக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: லக்கிமேன் திரைப்படத்தில் நடிகர் யோகி பாபு கதாபாத்திரம் இந்த காரை ஒரு அதிர்ஷ்டமான காராக தன் வாழ்வில் வந்த முக்கியமான செல்வமாக கருதும் அந்த அளவிற்கு இந்த காரில் உண்மையிலேயே பல முக்கியமான அம்சங்கள் இருக்கிறது. இந்த காரை பலர் விரும்பி வாங்கி வருகின்றனர். உண்மையில் இந்த கார் பலரது வாழ்க்கையில் ஒரு அதிர்ஷ்டமான காராகவே இருக்கிறது

Article Published On: Tuesday, October 3, 2023, 14:02 [IST]
English summary
Nissan magnate car plays an important role in yogi babu lucky man movie
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X