சாலையில் மிதந்து வந்த 15 கோடி ரூபாய் உல்லாச கப்பல்! உள்ளே இருந்தது அவங்களா! வாயடைத்து போன வாகன ஓட்டிகள்!

இந்தியாவை சேர்ந்த முகேஷ் அம்பானி (Mukesh Ambani), உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக உள்ளார். எனவே அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானியும் (Nita Ambani) இதற்கு விதிவிலக்கு அல்ல.

நீதா அம்பானி புத்தம் புதிய சொகுசு கார் (Luxury Car) ஒன்றை சமீபத்தில் வாங்கியுள்ளார். அது ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம் VIII சீரிஸ் II இடபிள்யூபி (Rolls Royce Phantom VIII Series II EWB) ஆகும். இது குறித்த தகவல்களை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் ஏற்கனவே வாசகர்களுக்கு வழங்கியுள்ளது. இந்த சூழலில் தனது புத்தம் புதிய ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம் VIII சீரிஸ் II இடபிள்யூபி காரில் நீதா அம்பானி பயணம் செய்யும் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

Rolls Royce Phantom

மும்பை (Mumbai) நகரில் உள்ள ஒரு தனியார் விமான நிலையத்தில் இருந்து வெளியே வரும்போது இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த வைரல் வீடியோவில் நீதா அம்பானியை நம்மால் தெளிவாக காண முடியவில்லை. எனினும் பாதுகாப்பு வாகனங்களை சூழ, அவரது ரோல்ஸ் ராய்ஸ் கார் வருவதை நம்மால் பார்க்க முடிகிறது.

நீதா அம்பானி வாங்கியுள்ள ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம் VIII சீரிஸ் II இடபிள்யூபி காரில், 6.75 லிட்டர் வி12 ட்வின் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் (Petrol Engine) பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 571 பிஹெச்பி பவர் மற்றும் 900 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

Nita Ambani Arriving In Rolls Royce Phantom

இந்த இன்ஜின் உடன் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த காருடைய இருக்கைகளின் ஹெட்ரெஸ்ட்களில் N.M.A என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. Nita Mukesh Ambani என்பதன் சுருக்கம்தான் N.M.A ஆகும். இந்த காரின் விலை (Price) 15 கோடி ரூபாய் இருக்கலாம் என கூறப்படுகிறது. நீதா அம்பானி இந்த காரில் தனது விருப்பத்திற்கு ஏற்ப நிறைய மாற்றங்களை செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இந்த காரின் விலை 15 கோடி ரூபாய் அல்லது அதற்கும் மேலாகதான் இருக்கும் என தெரிகிறது. ஆனால் இந்த காரின் விலையை பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இன்னும் நமக்கு கிடைக்கவில்லை.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: தொழில் அதிபர் முகேஷ் அம்பானி குடும்பத்தினரிடம் சுமார் 170 கார்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பிரம்மாண்டமான கார் கலெக்ஸனில் (Car Collection), ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம் VIII சீரிஸ் II இடபிள்யூபி கார் புதிதாக இணைந்துள்ளது.

ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் (Rolls Royce Cullinan), மெர்சிடிஸ்-மேபெக் பென்ஸ் எஸ்660 கார்டு (Mercedes-Maybach Benz S660 Guard), பிஎம்டபிள்யூ 760எல்ஐ செக்யூரிட்டி (BMW 760Li Security), ஃபெராரி 812 சூப்பர்ஃபாஸ்ட் (Ferrari 812 Superfast) மற்றும் பென்ட்லீ கான்டினென்டல் ஃப்ளையிங் ஸ்பர் (Bentley Continental Flying Spur) போன்றவை முகேஷ் அம்பானி கலெக்ஸனில் குறிப்பிடத்தக்க கார்கள் ஆகும்.

இந்த பிரம்மாண்டமான சொகுசு கார் கலெக்ஸனில் இணைந்துள்ள புத்தம் புதிய ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம் VIII சீரிஸ் II இடபிள்யூபி காரைதான், நீதா அம்பானி தற்போது அதிகமாக பயன்படுத்த தொடங்கியுள்ளார். சொகுசான மற்றும் பாதுகாப்பான பயணத்தை வழங்கும் இதற்கு காரணமாக இருக்கலாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, May 18, 2024, 13:46 [IST]
English summary
Nita ambani arriving in rolls royce phantom viral video
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+