பாதுகாப்பு வாகனங்கள் புடை சூழ சாலையில் வந்த 12 கோடி ரூபாய் கார்... யாரோடதுனு தெரிஞ்சதும் வாயை பிளந்த மக்கள்!
இந்தியாவை சேர்ந்த தொழிலதிபர் முகேஷ் அம்பானி (Mukesh Ambani), உலகிலேயே பெரும் பணக்காரர்களில் ஒருவராக உள்ளார். உலகின் மற்ற பெரும் கோடீஸ்வர குடும்பங்களை போலவே, முகேஷ் அம்பானியின் குடும்பத்தினரும், மிகவும் விலை உயர்ந்த கார்களை வாங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர். முகேஷ் அம்பானியின் குடும்பத்தினரிடம், 170க்கும் மேற்பட்ட கார்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த வரிசையில் மேலும் ஒரு விலை உயர்ந்த கார் ஒன்று, முகேஷ் அம்பானி குடும்பத்தின் கார் கலெக்ஸனில் (Car Collection) தற்போது இணைந்துள்ளது. அது ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம் VIII இடபிள்யூபி (Rolls Royce Phantom VIII EWB) ஆகும். முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானிதான் (Nita Ambani) இந்த காரை வாங்கியுள்ளார். பொதுவாக விலை உயர்ந்த கார்களை வாங்குபவர்கள், கருப்பு அல்லது வெள்ளை நிறத்தைதான் தேர்வு செய்வார்கள். ஆனால் நீதா அம்பானியோ, ரோஸ் குவார்ட்ஸ் (Rose Quartz) நிறத்தை தேர்வு செய்துள்ளார். இந்த நிறம் பார்ப்பதற்கே வித்தியாசமாக இருக்கிறது.

நீதா அம்பானியின் ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம் VIII இடபிள்யூபி கார், சாலையில் வரும் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்த வைரல் வீடியோவில், பாதுகாப்பு படை வாகனங்கள் சூழ, ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம் VIII இடபிள்யூபி கார் வருவதை நம்மால் பார்க்க முடிகிறது.
ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம் VIII இடபிள்யூபி காரின் விலை 12 கோடி ரூபாய் ஆகும். ஆனால் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்திடமே, விருப்பத்திற்கு ஏற்ப மாடிஃபிகேஷன்களை செய்தால் விலை இன்னும் அதிகமாகி விடும். நீதா அம்பானி, அவரது விருப்பத்திற்கு ஏற்ப காரில் ஒரு சில மாற்றங்களை செய்திருப்பார் என நாங்கள் கருதுகிறோம்.

எனவே இந்த காரின் விலை இன்னும் ஒரு சில கோடி ரூபாய்கள் அதிகமாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம் VIII இடபிள்யூபி காரில் பொருத்தப்பட்டிருப்பது 6.75 லிட்டர் வி12 ட்வின் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் (Petrol Engine) ஆகும். அதிகபட்சமாக 571 பிஹெச்பி பவர் மற்றும் 900 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இன்ஜின் உருவாக்கும் சக்தியானது, இந்த ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் மூலம், காரின் பின் சக்கரங்களுக்கு செலுத்தப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: சாமானிய மக்களுக்கு வேண்டுமானால், ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம் VIII இடபிள்யூபி கார் ஆச்சரியத்தை ஏற்படுத்த கூடியதாக இருக்கலாம். ஆனால் முகேஷ் அம்பானி குடும்பத்தினருக்கு அப்படி அல்ல. ஏனெனில் இதற்கு முன்பாகவே அவர்களிடம் நிறைய ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் இருக்கின்றன.
ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் (Rolls Royce Ghost), ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் (Rolls Royce Cullinan) போன்ற கார்களை இதற்கு உதாரணமாக கூறலாம். வரும் காலங்களிலும் முகேஷ் அம்பானி குடும்பத்தினர் இன்னும் நிறைய ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
நீதா அம்பானி தற்போது வாங்கியுள்ள ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம் VIII இடபிள்யூபி காரானது, சொகுசு செடான் (Luxury Sedan) ரகத்தை சேர்ந்தது ஆகும். எனவே நீதா அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு, இந்த கார் சௌகரியமான பயணத்தை வழங்கும் என்பது உறுதி. ஆனால் இந்த காரில் நீதா அம்பானி கூடுதல் பாதுகாப்பு வசதிகளை சேர்த்துள்ளாரா? என்பது சரியாக தெரியவில்லை.


Click it and Unblock the Notifications








